Home » Archives by category » அரசியல் (Page 120)

விரைவில் கழக ஆட்சி மலரும்!

Comments Off on விரைவில் கழக ஆட்சி மலரும்!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி “விரைவில் கழக ஆட்சி மலரும், நிர்வாக திறமையோடு நேர்மையாக பணியாற்றும் அதிகாரிகளுக்கு முழு சுதந்திரமும் பாதுகாப்பு அளிக்கப்படும்” என உறுதி கூறுகிறேன் என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து, எடப்பாடி பழனிசாமி டுவிட்டர் பக்கத்தில், “கடந்த வாரம் நேர்மையாக பணியாற்றிய வி.ஏ.ஓ. தூத்துக்குடி மாவட்டத்தில் படுகொலை செய்யப்பட்டார், சில தினங்களுக்கு முன்னால் சேலம் மாவட்டத்தை சேர்ந்த மற்றொரு வி.ஏ.ஓ. மணல் கொள்ளையர்களால் கொலை முயற்சிக்கு ஆளாக்கப்பட்டு காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார், தற்போது 2019 […]

Continue reading …

முதலமைச்சருடன் நிதியமைச்சர் சந்திப்பு!

Comments Off on முதலமைச்சருடன் நிதியமைச்சர் சந்திப்பு!

நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முதலமைச்சரின் குடும்பத்தினர் முப்பதாயிரம் கோடி ரூபாய் பணம் சேர்த்ததாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிடிஆர் ஆடியோ ஒன்றை வெளியிட்டதாக கூறப்படுகிறது. இந்த ஆடியோ வெளியாகி வைரலானது. இதையடுத்து இரண்டாவது ஆடியோ ஒன்றும் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த ஆடியோக்களுக்கு நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஏற்கனவே மறுப்பு தெரிவித்திருந்தார். இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்துள்ளார். இச்சந்திப்பின்போது ஆடியோ விவகாரம் குறித்து ஆலோசனை […]

Continue reading …

கர்நாடக பாஜக தேர்தல் அறிக்கை!

Comments Off on கர்நாடக பாஜக தேர்தல் அறிக்கை!

வரும் 10ம் தேதி கர்நாடக மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உளள்து. இதையடுத்து காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய இரண்டு கட்சிகளும் போட்டி போட்டுக்கொண்டு வாக்காளர்களுக்கு வாக்குறுதிகளை சராமாரியாக அளித்து வருகின்றன. காங்கிரஸ் ஒருபுறம் பெண்களுக்கு இலவச பேருந்து பயணம், மாதம் ரூபாய் 2000 உள்பட பல அறிவிப்புகளை வெளியிட்டது. இந்நிலையில் பாஜக தேர்தல் அறிக்கையாக, வருடத்திற்கு மூன்று சிலிண்டர் இலவசம், தினமும் அரை லிட்டர் பால் மற்றும் மாதம் ஐந்து கிலோ அரிசி இலவசம், வீடற்ற […]

Continue reading …

ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை!

Comments Off on ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை!

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிச்சாமி கூட்டிய போலி பொதுக்குழு கலைக்கப்படுகிறது என தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எம்ஜிஆர் வகுத்த அடிப்படை விதிக்கு முற்றிலும் முரணாகவும் கழக உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களை அப்பதவியில் இருந்து நியதிக்கு புறம்பாக நீக்கியும் கழக நிரந்தர பொதுச் செயலாளர் அம்மா அவர்கள் தான் என்ற விதியை மாற்றி அடிப்படை உறுப்பினர்கள் யார் வேண்டுமானாலும் பொதுச் செயலாளர் வரமுடியும் என்ற அடிப்படை விதியை மாற்றியதற்காகவும் எடப்பாடி […]

Continue reading …

பிரபல நடிகருக்கு லுக் அவுட் நோட்டீஸ்!

Comments Off on பிரபல நடிகருக்கு லுக் அவுட் நோட்டீஸ்!

துபாய்க்கு நடிகர் ஆர்.கே.சுரேஷ் தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். தனியார் நிதி நிறுவனமான ஆரூத்ரா கோல்டு நிறுவனம் என்ற பெயரில் தொடங்கப்பட்ட ஏராளமான மக்களிடம் பணத்தை பெற்று மோசடி செய்துள்ளது. இதுகுறித்து ஏராளமான புகார்கள் வந்த நிலையில் பொருளாதார சிறப்பு பிரிவு போலீசார் ஆருத்ரா நிறுவனத்திற்கு தொடர்புடைய பல இடங்களில் சோதனை நடத்தியதுடன், மோசடியில் தொடர்புடைய ஹரிஷ், மைக்கெல் ராஜ் உள்ளிட்ட 13 பேரை கைது செய்து, இந்த […]

Continue reading …

கமலஹாசன் பற்றி வானதி சீனிவாசனின் கருத்து!

Comments Off on கமலஹாசன் பற்றி வானதி சீனிவாசனின் கருத்து!

பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் காங்கிரஸ் மற்றும் திமுகவின் நட்சத்திர பேச்சாளர் கமல்ஹாசன் என்று கூறியுள்ளார். வரும் 10ம் தேதி கர்நாடக மாநில தேர்தல் நடைபெற இருக்கிறது. காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த அழைப்பை ஏற்று அவர் கர்நாடகம் சென்று காங்கிரஸ் கட்சிக்கு வாக்கு திரட்ட பிரச்சாரம் செய்ய இருப்பதாக கூறினார். காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யும் கமல்ஹாசன் குறித்து வானதி சீனிவாசன் கூறிய போது ஊழல் கரைப்படிந்த […]

Continue reading …

அண்ணாமலைக்கு கனிமொழி எம்.பி. நோட்டீஸ்!

Comments Off on அண்ணாமலைக்கு கனிமொழி எம்.பி. நோட்டீஸ்!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை 48 மணி நேரத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும், இல்லையேல் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று திமுக எம்பி கனிமொழி அண்ணாமலைக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். திமுக பிரமுகர்களின் சொத்து பட்டியலை கடந்த சில நாட்களுக்கு முன் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக தரப்பிலிருந்தும் உதயநிதி மற்றும் டி.ஆர்.பாலு தரப்பிலிருந்து வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்த நோட்டீஸ்க்கு பதிலளித்த அண்ணாமலை மன்னிப்பு கேட்க முடியாது […]

Continue reading …

இல்லத்தரசிகளுக்கு ரூ.2,000, 200 யூனிட் இலவச மின்சாரம்!

Comments Off on இல்லத்தரசிகளுக்கு ரூ.2,000, 200 யூனிட் இலவச மின்சாரம்!

ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியின் சார்பாக கர்நாடக மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூபாய் 2000 வழங்கப்படும் என்றும் அது மட்டுமின்றி வீடுகளுக்கு 200 யூனிட் இலவசம் மின்சாரம் வழங்கப்படும் என்று ராகுல் காந்தி வாக்குறுதி அளித்துள்ளார். கர்நாடக மாநிலத்தில் மே 10ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் காங்கிரஸ் மற்றும் பாஜக தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றன. ஏற்கனவே பெண்களுக்கு இலவச பேருந்து சலுகை […]

Continue reading …

கர்நாடக தேர்தலில் கமல்ஹாசன் ஆதரவு யாருக்கு?

Comments Off on கர்நாடக தேர்தலில் கமல்ஹாசன் ஆதரவு யாருக்கு?

வரும் 10ம் தேதி கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. ஆளும் கட்சியான பாஜக மற்றும் எதிர்க்கட்சியான காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளும் தீவிரமாக வாக்கு சேகரித்து வருகின்றனர். பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்பட பாஜக பிரபலங்களும் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்பட காங்கிரஸ் பிரபலங்களும் தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர். மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கர்நாடக மாநில தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு தனது ஆதரவு என […]

Continue reading …

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கருத்து

Comments Off on முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கருத்து

முன்னாள் அமைச்சர் வேலுமணி திமுக ஆட்சியை எதிர்க்கட்சிகள் பொதுமக்கள் மட்டும் இன்றி திமுகவினரே விரும்பவில்லை என கூறியுள்ளார். அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழாவில் முன்னாள் அமைச்சர் வேலுமணி கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், “திமுக ஆட்சியை திமுக கட்சியினரே விரும்பவில்லை. கோவையில் கஞ்சா பழக்கம் அதிகரித்துவிட்டது. சிறுவாணி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணை கட்டுவதை தடுக்க முடியாத அரசாக திமுக அரசு உள்ளது. கோவையில் மட்டும் 1250 கிலோ கஞ்சா […]

Continue reading …