
வருகின்ற மார்ச் 1ம் தேதியன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாள் கொண்டாட இருப்பதால் அன்றைய தினத்தில் பிரம்மாண்டமான கூட்டம் நடைபெற உள்ளதாகவும், அக்கூட்டத்தில் தேசிய தலைவர்கள் கலந்து கொள்ள இருப்பதாகவும் திமுகவின் பொதுச் செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். மார்ச் 1ம் தேதியன்று நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை ஒட்டிமாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறும் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். இப்பொதுக்கூட்டத்தில் இந்தியாவின் முக்கிய தலைவர்களான காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் […]
Continue reading …
இந்தியாவின் யூபிஐம், சிங்கப்பூரின் பேநௌ ஆகிய இரண்டு பணத்தை பரிமாற்றம் செய்யும் செயலிகள் தொடங்கி உள்ளதால் இருநாட்டின் மக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்தியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய இரண்டு நாடுகளுக்குமான இச்செயல் இந்திய பிரதமர் மோடி மற்றும் சிங்கப்பூர் பிரதமர் லி சியன் லூங் முன்னிலையில் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டது. மத்திய அரசின் டிஜிட்டல் மயமாக்கல் நடவடிக்கையாக இந்த இணைப்பு பணி நடைபெற்று வருகிறது. இந்த இணைப்பு மூலம் சிங்கப்பூரில் வாழும் இந்தியர்கள் மற்றும் இந்தியாவில் வாழும் சிங்கப்பூர் […]
Continue reading …
தமிழ்நாட்டு மாணவர் ஏபிவிபி அமைப்பினரால் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. டில்லியிலுள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பல்வேறு மாநிலத்தை சேர்ந்த மாணவர்களும் படித்து வருகின்றனர். பல்கலைக்கழகத்தில் ஏபிவிபி, எஸ்.எஃப்.ஐ உள்ளிட்ட மாணவர் அமைப்புகள் பல செயல்பட்டு வருகின்றன. அவ்வபோது மாணவ அமைப்புகளிடையே ஏற்படும் மோதல் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. சமீபத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த நாசர் என்ற மாணவரை ஏபிவிபி அமைப்பை சேர்ந்த மாணவர்கள் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து திமுக எம்.எல்.ஏ […]
Continue reading …
கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழகத்தில் ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆளுங்கட்சி மற்றும் கூட்டணி கட்சிகளின் எம்எல்ஏக்கள் கோஷமிட்டனர். தற்போது உத்தர பிரதேச மாநிலத்தில் எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் ஆளுநரை நோக்கி “ஆளுநரே வெளியே போ” என்று கோஷமிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில் ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து சமாஜ்வாதி கட்சி எம்எல்ஏக்கள் கோஷங்கள் எழுப்பினர். ஆளுநர் ஆனந்திபென் பட்டேல் உரை நிகழ்த்தி கொண்டிருந்தபோது திடீரென “ஆளுநரே திரும்பி […]
Continue reading …
திருவாரூர் மாவட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம் செய்ய இருக்கும் நிலையில் அம்மாவட்டத்தில் வரும் 22ம் தேதி வரை டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை திருவாரூர் மாவட்டத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.இதையடுத்து இன்று முதல் வரும் 22ம் தேதி வரை திருவாரூர் மாவட்டத்தில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்னையிலிருந்து நாளை திருச்சி செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மன்னார்குடியில் நடைபெறும் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்கிறார். அதையடுத்து அவர் திருவாரூர் மாவட்டம் காட்டூர் […]
Continue reading …
ஒய்எஸ்ஆர் ஷர்மிளா தெலங்கானாதான் இந்தியாவின் ஆப்கானிஸ்தான் என்றும், கேசிஆர் தான் தலிபான் என்றும் விமர்சனம் செய்துள்ளார். இவரது பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஷர்மிளா கடந்த சில நாட்களாக தெலுங்கானா அரசை எதிர்த்து தீவிரமாக அரசியல் செய்து வருகிறார். சமீபத்தில் ஆளும் கட்சி எம்எல்ஏ ஒருவர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்காக கைது செய்யப்பட்டார். ஷர்மிளா கூறுகையில், “தெலுங்கானா முதலமைச்சர் என்னை பார்த்து பயப்படுகிறார் என்று இதன் மூலம் தெளிவாக தெரிகிறது. எனது நடைப்பயணம் 3000 […]
Continue reading …
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கபடி போட்டியில் விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த வீரரின் குடும்பத்திற்கு ரூபாய் 2 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். இதுகுறித்த அறிவிப்பில், “குளித்தலை வட்டம் சத்தியமங்கலம் கிராமம் கணக்குப்பிள்ளையூர் பகுதியில் நடந்த கபடி போட்டியில் கலந்து கொண்ட மாணிக்கம் என்ற 26 வயது நபர் நெஞ்சுவலி காரணமாக உயிரிழந்துள்ளார். போட்டியில் வெற்றி பெற்ற பிறகு நெஞ்சுவலி மிகுதியாக இருந்ததால் அவர் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்தார். அவரது […]
Continue reading …
முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ நடிகர்களுக்கு கூட்டம் கூடும், ஆனால் ஒட்டு விழாது என்று கமலின் பிரச்சாரத்தை பற்றி கருத்து கூறியுள்ளார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக நேற்று நடிகர் கமல்ஹாசன் பிரச்சாரம் செய்து வருகிறார். நடிகர்கள் பிரச்சாரத்துக்கு வந்தால் அவரை பார்க்க கூட்டம் கூடும், ஆனால் அவர்கள் பேசுவதை யாரும் கேட்க மாட்டார்கள், “முந்தானை முடிச்சு” திரைப்படத்தில் வரும் சிரிப்பு நடிகர் தவக்களை கூட்டிக்கொண்டு வந்து ஓட்டு போட்டு கேட்டபோது […]
Continue reading …
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கோவை நகரம் கொலை நகரமாகிக் கொண்டிருக்கிறது என ஆவேசமாக கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: “நேற்று கோவையில் பொதுமக்கள் முன்னிலையிலும், நீதிமன்ற வளாகத்திலும் இரண்டு கொலைச் சம்பவங்கள் நடந்திருக்கின்றன. அது மட்டுமல்லாது, துப்பாக்கிக் கலாச்சாரமும் தலையெடுத்துள்ளது. திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே சட்டம் ஒழுங்கு சந்தி சிரித்துக் கொண்டிருக்கிறது. கொலை, கொள்ளைச் சம்பவங்கள் மாநிலம் முழுதும் அதிகரித்திருக்கின்றன. காவல்துறையின் கைகள் கட்டப்பட்டு இருக்கின்றன. காவலர்களுக்கே பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவுகிறது. ஒட்டு மொத்த […]
Continue reading …