Home » Archives by category » அரசியல் (Page 155)

நெடுஞ்சாலையில் ஹெலிகாப்டர் இறங்குமா?

Comments Off on நெடுஞ்சாலையில் ஹெலிகாப்டர் இறங்குமா?

மத்திய அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா இனி உருவாக்கப்படும் தேசிய நெடுஞ்சாலைகளில் ஹெலிகாப்டர் இறங்கும் வசதி செய்யப்படும் என்று கூறியுள்ளார். இதுபற்றி அவர் கூறும் போது, “தேசிய நெடுஞ்சாலைகளில் விபத்துக்கள் மற்றும் இயற்கை பேரிடர் ஏற்படும் போது அவசர காலத்திற்கு மீட்பு படையினர் செல்வதற்காக ஹெலிகாப்டர் தரையிறங்கும் வசதி செய்யப்படும். அனைத்து புதிய தேசிய நெடுஞ்சாலைகளிலும் ஹெலிபேட் வசதி செய்யப்படும். இதன் மூலமாக பேரிடர் காலங்களில் மீட்பு பணிகளில் சுறுசுறுப்பாக செய்யப்படும். ஹெலிகாப்டர் தரை இறங்குவதற்கான வசதி செய்யப்பட்டால் […]

Continue reading …

எடப்பாடிக்கு இன்று ஒரு நாள் சட்டப்பேரவையில் தடை!

Comments Off on எடப்பாடிக்கு இன்று ஒரு நாள் சட்டப்பேரவையில் தடை!

இன்று ஒரு நாள் சட்டப்பேரவை நிகழ்வுகளில் பழனிசாமி தரப்பு எம்.எல்.ஏக்கள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதிமுக தலைமை குறித்து ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் இடையே மோதல் நிலவி வருகிறது. கடந்த ஜூலை மாதம் நடந்த அதிமுக பொதுக்குழுவில் ஓபிஎஸ்ஸை கட்சியை விட்டு நீக்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. சமீபத்தில் பொதுக்குழு கூட்டம் செல்லும் என நீதிமன்றம் அறிவித்தது. இந்நிலையில் நேற்று நடைபெறும் சட்டமன்ற கூட்டத்தில் எதிர்கட்சி துணை தலைவர் இருக்கையில் ஓபிஎஸ் அமரக்கூடாது என்று எடப்பாடி பழனிசாமி சபாநாயகர் அப்பாவுக்கு […]

Continue reading …

அமைச்சர் மனோ தங்கராஜ் டுவிட்!

Comments Off on அமைச்சர் மனோ தங்கராஜ் டுவிட்!

தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் பிற மொழி திணிப்பையும் ஆதிக்கத்தையும் திமுக என்றும் ஏற்றுக் கொள்ளாது என கூறியுள்ளார். இந்தி மட்டுமே படித்திருந்தால் மட்டுமே இளைஞர்கள் சில வேலைகளுக்கு தகுதி பெறுவார்கள் என்றும் ஆட்சேர்ப்புக்கான தேர்வின்போது கட்டாயமாக ஆங்கிலத்தை நீக்கிவிட்டு இந்தியை முதன்மைப்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது. அண்மையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவியல் வளர்ச்சி மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியை கருத்தில் கொண்டு தமிழ் உள்பட அனைத்து மொழிகளையும் அலுவல் […]

Continue reading …

அதிமுகவில் யாரும் தாயுள்ளத்தோடு இல்லை; சசிகலா

Comments Off on அதிமுகவில் யாரும் தாயுள்ளத்தோடு இல்லை; சசிகலா

சசிகலா எப்போது என்ன செய்ய வேண்டும்? எப்படி செய்ய வேண்டும் எனத் தெரியும் என்று கூறியுள்ளார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவிற்குப் பின் அதிமுக கட்சியில் தற்போது நான்கு அணிகளாக பிரிந்துள்ளது. இபிஎஸ் அணி, ஓபிஎஸ் அணி, சசிகலா அணி மற்றும் டிடிவி தினகரன் அணி என நான்கு அணிகளாக பிரிந்திருக்கும் அதிமுகவை ஒன்றிணைக்க சசிகலா முழுமுயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது. அதிமுகவை ஒன்றிணைக்க என்ன முயற்சி மேற்கொள்ளப்படும்? எப்போது முயற்சி மேற்கொள்ளப்படும் என்ற கேள்விக்கு பதிலளித்த […]

Continue reading …

சசிகலா குற்றம் செய்தவர்; சட்டசபையில் ஆணையின் அறிக்கை!

Comments Off on சசிகலா குற்றம் செய்தவர்; சட்டசபையில் ஆணையின் அறிக்கை!
சசிகலா குற்றம் செய்தவர்; சட்டசபையில் ஆணையின் அறிக்கை!

ஆறுமுகசாமி தலைமையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து ஆணையம் அமைக்கப்பட்டிருந்தது. இதில் சசிகலா குற்றம் செய்தவர் என்று ஆறுமுகசாமி ஆணையம் தெரிவித்திருப்பதாகவும் ஆறுமுகசாமி ஆணையம் அவர் மீது விசாரணை செய்ய பரிந்துரை செய்ததாகவும் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட ஆணைய அறிக்கையில் தகவல் தெரிவிப்பதாக கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆறுமுகசாமி ஆணையம் அமைக்கப்பட்டு அந்த ஆணையம் ஒரு சில ஆண்டுகளாக விசாரணை செய்து சமீபத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அறிக்கை சமர்ப்பித்தது. இந்நிலையில் இன்று […]

Continue reading …

திருமாவளவனின் மனுவுக்கு ஐகோர்ட் தள்ளுபடி

Comments Off on திருமாவளவனின் மனுவுக்கு ஐகோர்ட் தள்ளுபடி

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் ஆர்எஸ்எஸ் பேரணி குறித்து தாக்கல் செய்த மனுவை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்துள்ளது. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் உயர்நீதிமன்றத்தில் ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி அளித்து சென்னை ஐகோர்ட்டு ஏற்கனவே அனுமதி அளித்துள்ள நிலையில் இந்த அனுமதி உத்தரவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என மனு ஒன்றை தாக்கல் செய்தார். இம்மனுவை இன்று உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆர்எஸ்எஸ் அணிவகுப்புக்கு நிபந்தனையுடன் அனுமதியளித்து […]

Continue reading …

பிரதமர் மோடியை விமர்சிக்கும் ராகுல் காந்தி!

Comments Off on பிரதமர் மோடியை விமர்சிக்கும் ராகுல் காந்தி!

காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, பிரதமர் மோடி பாலியல் குற்றவாளிகளுடன் துணை நிற்கிறார் என குற்றம் சுமத்தியுள்ளார். குஜராத் மாநிலத்தில் கோத்ரா கலவரத்தின்போது பில்கிஸ் பானு என்பவரை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகளை குஜராத் அரசு ஆகஸ்ட் 15ம் தேதி விடுவித்தது. இந்த குற்றவாளிகள் 11 பேரையும் முன்கூட்டியே விடுதலை செய்ய மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கூறுகையில், “செங்கோட்டையிலிருந்து பெண்களுடைய மதிப்பு குறித்து […]

Continue reading …

காங்கிரஸ் எம்.பி.யின் வேண்டுகோள்!

Comments Off on காங்கிரஸ் எம்.பி.யின் வேண்டுகோள்!

காங்கிரஸ் எம்.பி பிரான்சிஸ்கோ ராகுல் காந்தி உடனடியாக ஒற்றுமை நடைபயணத்தை நிறுத்திவிட்டு பிரச்சாரத்தில் ஈடுபட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். இன்று ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு செய்தார். அதன்பின் ஒற்றுமை நடை பயணத்தை தொடர்ந்துள்ளார். இந்நிலையில் குஜராத் மற்றும் இமாச்சல பிரதேசம் போன்ற பகுதிகளில் மக்களிடையே ராகுல் காந்தி பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும். ராகுல்காந்தியின் பிரச்சாரத்தால் மட்டுமே பாஜகவை தோற்கடிக்க முடியும். எனவே அவர் ஒற்றுமை நடை பயணத்தை நிறுத்திவிட்டு பிரசாரத்தில் […]

Continue reading …

சீமானின் கோரிக்கை!

Comments Off on சீமானின் கோரிக்கை!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் நிலவும் செவிலியர் பற்றாக்குறையை அரசு விரைந்து சரி செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார். சீமான் தனது சமூக வலைதளத்தில், “தமிழ்நாட்டிலுள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் நிலவும் செவிலியர் பற்றாக்குறையை தமிழ்நாடு அரசு விரைந்து சரி செய்ய வேண்டும். புதிதாகச் செவிலியர்களை நியமிக்காமல் காலம் தாழ்த்திவரும் தமிழக அரசின் செயல் வன்மையான கண்டனத்திற்குரியது. தமிழ்நாட்டில் ஏற்கனவே உள்ள சென்னை மருத்துவக் கல்லூரி, கீழ்ப்பாக்கம் […]

Continue reading …

இந்தி தெரியாது போடா: உதயநிதி!

Comments Off on இந்தி தெரியாது போடா: உதயநிதி!

உதயநிதி ஸ்டாலின், எந்த வழிகளில் இந்தியை திணித்தாலும் நாங்கள் சொல்லப்போவது ஒன்றே ஒன்றுதான் அது “இந்தி தெரியாது போடா” என்று கூறியுள்ளார். இன்று தமிழகத்தில் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் திமுக இளைஞரணி சார்பில் இந்தியை திணிக்க மத்திய அரசு முயற்சிப்பதை கண்டித்து போராட்டம் நடைபெற்றது. சென்னையில் நடந்த போராட்டத்தில் கலந்து கொண்ட திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், “எந்த வழியில் இந்தி திணிப்பை தமிழ் நாட்டுக்குள் கொண்டு வந்தாலும் நாங்கள் சொல்லப்போவது “ஹிந்தி தெரியாது போடா” […]

Continue reading …