Home » Archives by category » அரசியல் (Page 157)

இந்த ஆண்டு பொறியியல் சேர்க்கை காலியிடங்கள் இருக்காது!

Comments Off on இந்த ஆண்டு பொறியியல் சேர்க்கை காலியிடங்கள் இருக்காது!

அமைச்சர் பொன்முடி இந்த ஆண்டு பொறியியல் மாணவர் சேர்க்கையில் காலியிடங்கள் இருக்காது என தெரிவித்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும் பொறியியல் கல்லூரிகளில் காலியிடங்கள் அதிகமிருந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இவ்வாண்டு காலியிடங்கள் இருக்காது என்று தெரிவித்துள்ளார். இந்தாண்டு 1.10 லட்சம் பேருக்கு அக்டோபர் 13ம் தேதி மூன்றாம் கட்ட கலந்தாய்வு நடைபெறவுள்ளது. இவ்வாண்டு ஐடி, எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ் உள்ளிட்ட பல பிரிவுகளில் மாணவர்கள் சேர ஆர்வம் காட்டி வருகின்றனர். எனவே […]

Continue reading …

வைகோவின் எச்சரிக்கை!

Comments Off on வைகோவின் எச்சரிக்கை!

வைகோ சோவியத் யூனியன் வீழ்ந்த நிலைதான் இந்தியாவிற்கும் ஏற்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். சோவியத் யூனியனில் மொழி திணிப்பு காரணமாக வீழ்ச்சியடைந்த நிலைதான் இந்தியாவிலும் மொழி திணிப்பு செய்தால் ஏற்படுமென்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார். இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “மத்திய அமைச்சர் அமித்ஷா தலைமையில் அமைக்கப்பட்டுள்ள ஆட்சி மொழிக்கான பாராளுமன்ற நிலைக்குழு, மொத்தம் 112 பரிந்துரைகள் கொண்ட 11-வது அறிக்கையை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி இருக்கிறது. ஆட்சி மொழி எனும் பெயரால் முழுக்க முழுக்க இந்தி […]

Continue reading …

மின்சாரத்துறை புகார்களுக்கு தீர்வு!

Comments Off on மின்சாரத்துறை புகார்களுக்கு தீர்வு!

மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி இதுவரையில் 11,88,043 புகார்களில் 99% புகார்களுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்றது முதல் பல அறிவிப்புகள், திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் காணப்படும் மின்சாரம் தொடர்பாக புகார்களை 24×7 செயல்படும் மின் நுகர்வோர் சேவை மையத்தின் மூலம் பெறப்பட்டு, அலுவலர்கள் மூலம் தீர்வு காணப்படுகின்றன. மின் நுகர்வோர் சேவை மையத்தின் செயல்பாடுகள் குறித்து, இன்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி […]

Continue reading …

முலாயம்சிங் யாதவ் மறைவிற்கு அரசியல் தலைவர்கள் இரங்கல்!

Comments Off on முலாயம்சிங் யாதவ் மறைவிற்கு அரசியல் தலைவர்கள் இரங்கல்!

உத்தர பிரதேச முன்னாள் முதல்வரும், சமாஜ்வாடி கட்சியை தொடங்கியவருமான, முலாயம்சிங் யாதவ் இன்று உடல்நலக்குறைவால் காலமானார். முலாயம்சிங் யாதவ் உத்தர பிரதேசத்தில் மிகப்பெரும் அரசியல் கட்சியான சமாஜ்வாடி கட்சியை தொடங்கியவர். உத்தர பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சரான முலாயம் சிங் யாதவ், லோக் சபா எம்.பியாகவும் பதவி வகித்து வந்தார். கடந்த ஆகஸ்டு 22ம் தேதி அன்று முலாயம் சிங் யாதவ்விற்கு உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில் டில்லி குருகிராமில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை […]

Continue reading …

ஈபிஎஸ் அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு உத்தரவு!

Comments Off on ஈபிஎஸ் அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு உத்தரவு!
ஈபிஎஸ் அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு உத்தரவு!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சட்டமன்றத்தில் அதிமுகவின் உட்கட்சி விஷயங்கள் குறித்துப் பேசக்கூடாது என அதிமுக எம்எல்ஏக்களுக்கு உத்தரவிட்டுள்ளார். அதிமுக தற்போது பிளவுபட்டு எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ பன்னீர்செல்வம் என இரு பிரிவுகளாக உள்ளன. இரு பிரிவுகளிலும் எம்எல்ஏக்கள் உள்ளனர். இந்நிலையில் சட்டமன்ற சிறப்பு கூட்டம் விரைவில் கூட இருக்கும் நிலையில் எடப்பாடி பழனிச்சாமி புதிய உத்தரவு ஒன்றையும் பிறப்பித்துள்ளார். இதன்படி அதிமுக உட்கட்சி பிரச்சனையை சட்டமன்றத்திற்குள் கொண்டுவரக் கூடாது எனவும் மக்கள் பிரச்சினை மற்றும் […]

Continue reading …

அதிமுக ஆதரவாளர்கள் திமுக கவுன்சிலர் மீது தாக்குதல்!

Comments Off on அதிமுக ஆதரவாளர்கள் திமுக கவுன்சிலர் மீது தாக்குதல்!

அதிமுக ஆதரவாளர்கள் திமுக கவுன்சிலர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் கள்ளக்குறிச்சியில் நடைபெற்றுள்ளது. இன்று கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி நகராட்சி அலுவலகத்தில் நகர்மறக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டம் நிறைவடைந்த பின்பு, கள்ளக் குறிச்சி, 17 வார்டு திமுக கவுன்சிலரான ஞானவேல் என்பவரை, அதிமுக கன்சிலர், அதிமுக நகரச் செயலாளர் பாபு மற்றும் அவரது கட்சியைச் சேர்ந்தவர்கள் தாக்கினர். இத்தாக்குதலில் திமுக கவுன்சிலர் ஞானவேலின் சட்டை கிழிந்து உடலில் ரத்தம் வழிந்தது. இதுகுறித்து திமுகவின் அளித்த புகாரின் அடிப்படையில், […]

Continue reading …

சீமானின் வலியுறுத்தல்!

Comments Off on சீமானின் வலியுறுத்தல்!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அரசு கல்லூரி மாணவர் சேர்க்கையில் ஆளுங்கட்சியினரின் தலையீடுவதாக கூறியுள்ளார். மேலும் இவ்வாறு நடைபெறும் முறைகேடுகளை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இதுபற்றி, அவர் சமூக வலைதளத்தில், “தமிழ்நாடு முழுவதுமுள்ள அரசு கலைக்கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கையில் பெருமளவு முறைகேடுகள் நடைபெறுவதாக மாணவர்கள் குற்றம் சாட்டுவது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. திமுகவினரின் தலையீட்டின் பேரில் நடைபெறும் இத்தகைய முறைகேடுகளுக்கு தமிழ்நாடு அரசு துணைபோவது வன்மையான கண்டனத்திற்குரியது. திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரியில் […]

Continue reading …

திருமாவளவன், சீமான் தேச துரோகிகள்; எச் ராஜா!

Comments Off on திருமாவளவன், சீமான் தேச துரோகிகள்; எச் ராஜா!

பாஜக பிரமுகர் எச் ராஜா முதலமைச்சர் ஸ்டாலின் மிகவும் நல்லவர். ஆனால் அவரை சுற்றி இருப்பவர்கள் அவரை கொம்பு சீவி விடுகிறார்கள் என்று கூறியுள்ளார். திருமாவளவன், சீமான் ஆகிய இருவரும் தேச துரோகிகள். ஆனால் அதே நேரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மிகவும் நல்லவர். ஸ்டாலின் நல்லவர் என்றாலும் அவருடன் இருப்பவர்கள் அவரை கொம்பு சீவி விடுகிறார்கள். எனவே நாம் தமிழர் கட்சி மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகிய இரண்டு கட்சிகளையும் மக்கள் புறக்கணிக்க வேண்டும்” என்று […]

Continue reading …

அன்புமணி ராமதாஸின் டுவிட்டர் பதிவு!

Comments Off on அன்புமணி ராமதாஸின் டுவிட்டர் பதிவு!

அன்புமணி ராமதாஸ் அரசு மருத்துவர்கள் செய்யாத தவறுக்கு வழங்கப்பட்ட தண்டனை- குறித்து அவரது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசுப் பொறுப்பேற்று ஒன்றரை ஆண்டுகள் கடந்துள்ளன. வேலூர் மாவட்டம் காட்பாடிக்குட்பட்ட பொன்னிய அரசு ஆரம்பச் சுகாகாதார நிலையத்தில் நேற்று ஆய்வு மேற்கொண்ட அமைச்சர்கள் துரைமுருகன் மற்றும் மா. சுப்பிரமணியன், மலைப்பகுதி என்பதால் அங்கு பாம்புக் கடிக்கான மருத்ததுகள் இல்லை; மருத்துவர்களும் பணியில் இல்லை என்று தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்தததையடுத்து, பெண் மருத்துவர்கள் […]

Continue reading …

காப்பகத்தில் சிறுவர்கள் பலி; டிடிவி தினகரன் வருத்தம்!

Comments Off on காப்பகத்தில் சிறுவர்கள் பலி; டிடிவி தினகரன் வருத்தம்!

டிடிவி தினகரன் ஆதரவற்ற குழந்தைகளுக்கான காப்பகத்தில் கெட்டுப்போன உணவை சாப்பிட்ட 3 சிறுவர்கள் உயிரிழந்திருப்பது பெரும் வருத்தத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளதாக தெரிவித்துள்ளார். விவேகானந்தா சேவாலய விடுதி திருப்பூர் மாவட்டம் திருமுருகன் பூண்டியில் செயல்பட்டு வருகிறது. ஆதரவற்ற குழந்தைகளின் விடுதியான இதில் காலை உணவைச் சாப்பிட்ட 3 சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுபற்றி, அமமுக பொதுச்செயலாளர் தினகரன் தன் டுவிட்டர் பக்கத்தில், “திருப்பூர் மாவட்டம், திருமுருகன்பூண்டி அருகே ஆதரவற்ற குழந்தைகளுக்கான காப்பகத்தில் கெட்டுப்போன […]

Continue reading …