அமைச்சர் மா.சுப்பிரமணியம் தமிழ்நாட்டில் மருந்து தட்டுப்பாடு இருக்கின்றதா என்ற கேள்விக்கு விளக்கமளித்துள்ளார். தமிழகத்தில் மருந்து தட்டுப்பாடு இருப்பதாக செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கிறது. இதுபற்றி சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியம் விளக்கமளித்துள்ளார். தமிழகத்தில் மருந்து தட்டுப்பாடு நிலவுவதாக தொடர்ந்து பொய் செய்திகளை பரப்பி வருகின்றனர். தமிழ்நாடு முழுவதும் 327 அத்தியாவசியமான மருந்துகளை மக்களுக்கு தடையில்லாமல் கொடுத்து வருகிறோம். ஆரம்ப சுகாதார நிலையம் முதல் அரசு மருத்துவமனை வரை வாரந்தோறும் ஆய்வு செய்து வருகிறோம். தமிழ்நாடு அரசை பொறுத்தவரை மருத்துவ சேவையை […]
Continue reading …பொள்ளாச்சியில் கடைவீதி உரிமையாளர்கள் பிரதமர் மோடி பிறந்த நாளுக்கு எதிர்ப்ப- தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதோடு கடை அடைப்பு செய்து சாலைமறியலில் ஈடுபட்டனர். பொள்ளாச்சி நகர்புற பகுதியில் உள்ள கடைவீதியில் 5000 மேற்பட்ட கடைகள், வணிக நிறுவனங்கள் உள்ளன, இப்பகுதியில் ஆட்டோ ஸ்டோண்ட் உள்ளது, பிரதமர் மோடி பிறந்தநாள் முன்னிட்டு பாரதிய கோவை மாவட்டம் ஆட்டோ தொழிலாளர் சங்கம் பிஎம்எஸ் நிர்வாகிகள் பிரதமர் மோடி பிறந்தநாள் முன்னிட்டு அனுமதியின்றி பேனர் வைத்ததால் கடை உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து கடைகள் […]
Continue reading …டிடிவி தினகரன் ஆ.ராசா மிகவும் கீழ்த்தரமாக பேசியிருப்பது கண்டனத்திற்குரியது- என்று கூறியுள்ளார். திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா இந்துமதத்தைப் பின்பற்றுபவர்களை இழிவுபடுத்தும் விதமாக பேசியிருப்பது மிகவும் கீழ்த்தரமாக பேசியிருப்பது கண்டனத்திற்குரியது என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன் திமுக எம்பி ஆ ராசா நிகழ்ச்சி ஒன்றில் பேசிய போது இந்து மதம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இதற்கு, எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட பல அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். […]
Continue reading …நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமலஹாசன் கோவை தெற்கு தொகுதியில் மீண்டும் போட்டியா? என்பது குறித்து தகவல் அளித்துள்ளார். கடந்த சட்டசபைத் தேர்தலில், சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சியுடன் இணைந்து கமலின் மக்கள் நீதி மய்யம் போட்டியிட்டு படுதோல்வியடைந்தது. ஆனால், அக்கட்சியின் சார்பில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட கமலுக்கும், பாஜக வானதி சீனிவாசனுக்கும் இடையே கடுமையான போட்டி இருந்த நிலையில் கமல் தோல்வியுற்றார். இந்நிலையில், கோவை ராஜவீதியில் உள்ள துணி வணிகர் அரசு […]
Continue reading …திமுக முப்பெரும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் “நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் நமக்குத்தான் வெற்றி” என்று உரையாற்றி உள்ளார். திமுகவின் முப்பெரும் விழா நேற்று விருதுநகரில் நடைபெற்றது. இவ்விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது வரும் நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் நமக்குதான் வெற்றி என்ற வகையில் தொண்டர்கள் கடுமையாக உழைக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். “2024ம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலுக்கான அடித்தளமாக இவ்விழா அமையும். நாடாளுமன்ற தேர்தலில் 40க்கு […]
Continue reading …எடப்பாடி பழனிசாமி ஆ.ராசா சொன்ன அந்த வார்த்தை.. திமுக குடும்பதிற்கும் பொருந்துமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். எம்.பி. ஆ.ராசா சமீபத்தில் இந்து மதம் குறித்து கருத்துகள் கூறியுள்ளார். திமுக தலைவர் குடும்பத்திற்கு பொருந்துமா என எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். இந்து மதம் குறித்து திமுக எம்.பி ஆ.ராசா பேசிய வீடியோ சமீபத்தில் சமூக வலைதளங்களில் பரவி சர்ச்சைக்குள்ளானது. ஆ.ராசாவின் இந்து மதம் குறித்த கருத்துகள் திட்டமிட்டே இந்துக்களை அவமதிக்கும் நோக்கில் பேசப்படுவதாக பாஜக தமிழக தலைவர் […]
Continue reading …முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் அரசு அதிகாரிகளுக்கு “நாங்க ஆட்சிக்கு வரும்போது நல்லா மாட்டுவீங்க..!” என்று எச்சரிக்கும் விதமாக பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. முன்னாள் அதிமுக அமைச்சர்களுக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் ரெய்டு நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக முன்னாள் அமைச்சரான சி.விஜயபாஸ்கருக்கு சொந்தமான 20க்கும் மேற்பட்ட இடங்களில் ரெய்டு நடந்தது. மேலும் சி.விஜயபாஸ்கர் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தபோது விதிமுறைகளை மீறி மருத்துவக் கல்லூரி கட்ட அனுமதித்ததாக வழக்கும் உள்ளது. இன்று தமிழக […]
Continue reading …மத்திய அரசு பழங்குடியினர் பட்டியலில் நரிக்குறவர், குருவிக்காரர் உள்ளிட்ட சமூகத்தினரை சேர்க்க ஒப்புதல் வழங்கியிருப்பதற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார். மத்திய அரசு நரிக்குறவர், குருவிக்காரர் உள்ளிட்ட சமூகத்தினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க ஒப்புதல் வழங்கி உள்ளது. தமிழ்நாடு அரசின் தொடர் முயற்சிகளின் விளைவாக பழங்குடியின தகுதி வழங்கும் மத்திய அரசின் நடவடிக்கை, நரிக்குறவர் சமுதாயத்தில் உள்ள இளைஞர்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் சமூகநீதியைப் பெற்றுத் தரும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சமூகநீதி வரலாற்றில் […]
Continue reading …அதிமுக கட்சியில் தற்போது எடப்பாடி பழனிச்சாமி பிரிவு மற்றும் ஓ.பன்னீர்செல்வம் பிரிவு என இரண்டாக பிரிந்துள்ளது. இருந்தாலும் எடப்பாடி பழனிசாமி பிரிவில்தான் அதிக கட்சியினர் உள்ளனர். மேலும் அதிமுக அலுவலகம், இடைக்கால பொதுச்செயலாளர் போன்ற வழக்குகளிலும் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாகவே தீர்ப்பு வெளியானது. இந்நிலையில் கிட்டத்தட்ட அதிமுகவிலிருந்து வெளியேற்றப்பட்ட நிலையில் அடுத்த கட்டமாக ஒரு சில அதிரடி முடிவுகளை எடுக்க ஓ.பன்னீர்செல்வம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன் முதல்கட்டமாக சென்னை அசோக் நகரில் அதிமுகவின் மூத்த தலைவர் பண்ருட்டி […]
Continue reading …காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கடந்த 7ம் தேதி முதல் கன்னியாகுமரியில் இருந்து ஒற்றுமை நடைப்பயணத்தை தொடங்கினார். இந்த பாதயாத்திரை கூட்டத்தில் புகுந்த பிக்பாக்கெட்டுகளின் கைவரிசையால் போலீசார் அதிர்ச்சியடைந்துள்ளனர். தற்போது கேரளாவில் இந்த ஒற்றுமை நடைபயணம் நடைபெற்று வருகிறது. இந்த பாதயாத்திரை சென்ற பகுதியில் பிக்பாக்கெட் சம்பவங்கள் அதிகமாக உள்ளதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். குற்றம் நடந்த இடங்களில் சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்ததில் 4 பேர் கொண்ட கும்பல் அடையாளம் காணப்பட்டதாகவும் அவர்கள் […]
Continue reading …