Home » Archives by category » அரசியல் (Page 164)

மம்தா போட்ட ஆர்டர்!

Comments Off on மம்தா போட்ட ஆர்டர்!

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி நாங்கள் அனைவரும் குத்தகைக்கு வீடு எடுத்து வசித்து வருவதாகவும், அது ஆக்கிரமிப்பு நிலமாக இருந்தால் புல்டோசரை எடுத்துசென்று இடிக்குமாறும் உத்தரவிட்டுள்ளார். தற்போது மம்தா பானர்ஜியின் உறவினர்களின் சொத்து மதிப்பு பன்மடங்கு உயர்ந்திருப்பதாக கூறி இதுகுறித்து உரிய விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என பாஜக ஆதரவாளரும் வழக்கறிஞருமான தருண்ஜோதி திவாரி பொதுநல வழக்கை கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்திருக்கிறார். 2011ம் ஆண்டு மம்தா பானர்ஜி மேற்கு வங்க முதலமைச்சரான பிறகு அவரது உறவினர்கள், […]

Continue reading …

ராகுல் காந்தியை குறித்து கே.எஸ்.அழகிரி கருத்து!

Comments Off on ராகுல் காந்தியை குறித்து கே.எஸ்.அழகிரி கருத்து!

இந்தியா முழுதும் ஒற்றுமை நடைப்பயணமாக ராகுல் காந்தி செல்ல உள்ள நிலையில் அவரை குறித்து சில முக்கிய கருத்துக்களை தெரிவித்துள்ளார் கே.எஸ்.அழகிரி. ராகுல் காந்தி செப்டம்பர் 7ம் தேதி தொடங்கி கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை ஒற்றுமை நடைப்பயணம் செய்ய உள்ளார். இது தொடர்பாக இன்று திருச்சியில் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, “இனம், மொழி, ஜாதி என்று பிரித்துப் […]

Continue reading …

மதுரை மாணவனுக்கு நீதி கிடைத்தது!

Comments Off on மதுரை மாணவனுக்கு நீதி கிடைத்தது!

லட்சத்தீவில் நுழைவுத் தேர்வு மையம் அமைக்கப்பட்டிருந்த நிலையில் மதுரை மாணவனுக்கு எம்.பி. மேற்கொண்ட முயற்சியால் தேர்வு மையம் மதுரைக்கே மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், நீதி கிடைத்ததாக குறிப்பிட்டு தேசிய தேர்வு முகமையின் ஒருங்கிணைப்பாளருக்கு நன்றி தெரிவித்துள்ளார். திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் சேர மதுரையை சேர்ந்த மாணவன் லோகேஷ்வருக்கு தேர்வு மையத்திற்கான அனுமதி சீட்டு இரண்டு நாட்களுக்கு முன்பு வந்துள்ளது. தேர்வு மையம் லட்சத்தீவில் ஒதுக்கப்பட்டுள்ளதாக வந்துள்ளது. மாணவனின் தந்தை எம்.பி.வெங்கடேசனை நாடியுள்ளார். இதையடுத்து […]

Continue reading …

அமைச்சர் எ.வ.வேலு முக்கிய அறிவிப்பு!

Comments Off on அமைச்சர் எ.வ.வேலு முக்கிய அறிவிப்பு!
அமைச்சர் எ.வ.வேலு முக்கிய அறிவிப்பு!

அமைச்சர் எ.வ.வேலு கிங்ஸ் இன்ஸ்டியூட் வளாகத்தில் சுவர் உதிரும் விவகாரத்தில் ஒப்பந்ததாரர் தலையிட்டு முழுமையாக சரி செய்து தருவதாக உறுதியளித்துள்ளதாக கூறினார். அமைச்சர் மா. சுப்பிரமணியன், பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ வேலு ஆகியோர் சென்னை, கிண்டி கிங் இன்ஸ்டியூட் வளாகத்தில் உள்ள தேசிய முதியோர் நல மருத்துவமனை கட்டிடத்தை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை ஆய்வு செய்தனர். செய்தியாளர்களிடம் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, “கிண்டி கிங் இன்ஸ்டியூட் வளாகத்தில் 2016ம் ஆண்டு தேசிய முதியோர் […]

Continue reading …

கோவில்களின் கட்டிடங்கள் காணொலி மூலம் திறப்பு!

Comments Off on கோவில்களின் கட்டிடங்கள் காணொலி மூலம் திறப்பு!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கட்டிமுடிக்கப்பட்ட திருக்கோவில்களில் பல்வேறு கட்டிடங்களை காணொலி மூலம் திறந்து வைத்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் திருக்கோவில்களில் கட்டி முடிக்கப்பட்ட பல்வேறு கட்டிடங்களை காணொளி கட்சி மூலமாக திறந்து வைத்தார். இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ரூ.104.77 கோடி மதிப்பீட்டில் 18 திருக்கோவில்களில் திருமண மண்டபங்கள், பக்தர்கள் தாங்கும் விடுதி, விருந்து மண்டபம், அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்கள் குடியிருப்பு ஆகியவை கட்டப்பட்டுள்ளது. இதே போல அன்னதான […]

Continue reading …

மோடியை புகழ்ந்த குலாம் நபி ஆசாத்!

Comments Off on மோடியை புகழ்ந்த குலாம் நபி ஆசாத்!

காங்கிரஸ் கட்சியின் மூரத்த தலைவர் குலாம் நபி ஆசாத் ராகுல்காந்திதான் காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு காரணம் என்று குற்றம் சாட்டினார். தற்போது அவர் பிரதமர் மோடியை மனிதநேயமிக்க தலைவராக திகழ்கிறார் என பாராட்டியுள்ளார். இதுவரை மோடியை முரட்டுத்தனமான மனிதர் என நான் தவறாக நினைத்துவிட்டேன். தனிப்பட்ட முறையில் ராகுல்மீது எந்தவெறுப்பும் இல்லை. அடுத்து குலாம் நபி தனி கட்சி துவங்குவாரா? அல்லது பாஜகவில் இணைவாரா என எதிர்பார்க்கப்படுகிறது. 30 ஆண்டுகளுக்கு முன்பு சோனியா காந்தி மீது எனக்கு […]

Continue reading …

நயினார் நாகேந்திரன் பரபரப்பு பேட்டி!

Comments Off on நயினார் நாகேந்திரன் பரபரப்பு பேட்டி!

பாஜக எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன் பரந்தூர் விமான நிலைய திட்டம் கண்டிப்பாக வேண்டும் என்று பரபரப்பாக பேட்டியளித்துள்ளார். திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினரும், பாஜக சட்டமன்ற குழு தலைவருமான நயினார் நாகேந்திரன் கால்வாய் தூர்வாரும் பணியை ஆய்வு செய்தார். செய்தியாளர்களை சந்தித்த அவர், “ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு மொழி பேசப்படுகிறது. எந்த மாநிலத்து மக்களுக்கு எந்த மொழியில் பேசினால் புரியுமோ அந்த மொழியில் தான் பேச முடியும். பிரதமர் தமிழில் பேசினால் ஏமாற்றுகிறார் என சொல்கிறார்கள். வைகோ இப்படி […]

Continue reading …

முதலமைச்சர் தலைமையில் அமைச்சரவை கூட்டம்!

Comments Off on முதலமைச்சர் தலைமையில் அமைச்சரவை கூட்டம்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று அமைச்சரவை கூட்டம் தொடங்கியது. இக்கூட்டத்தில் மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் உட்பட பரந்தூர் விமான நிலையம் தொடர்பாக ஆலோசிக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. அதனுடன் மாணவர்களுக்கு மடிக்கணினி, மின்சார கட்டண உயர்வு, ஆன்லைன் ரம்மிக்கு தடைச்சட்டம், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரண அறிக்கை, தூத்துக்குடி துப்பாக்கி சூடு விவகாரம், கொடநாடு கொலை வழக்கு என பல்வேறு விஷயங்கள் ஆலோசிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. எதிர்வரும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வது, […]

Continue reading …

கே.எஸ்.அழகிரி கேலி!

Comments Off on கே.எஸ்.அழகிரி கேலி!

காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி “தமிழக பாஜகவிற்கு இரண்டு தலைவர்கள்” என்று கிண்டலடித்துள்ளார். தமிழக காங்கிரஸ் கட்சி நெல்லையில் நிர்வாகிகள் கலந்துகொண்ட கலந்தாய்வு கூட்டம் தலைவர் கே.எஸ். அழகிரி தலைமையில் நடந்தது. இந்நிகழ்ச்சியில் தென்காசி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பேசிய கே.எஸ்.அழகிரி, “தமிழக ஆளுநர் ரவி மிகச்சிறப்பாகச் செயல்படுகிறார். அண்ணாமலை விளம்பரத்திற்காக முரண்டான தகவல்கள் கூறி வருகிறார்” என்றார். செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “தமிழகத்தில் பாஜகவிற்கு 2 தலைவர்கள் இருக்கிறார்கள். […]

Continue reading …

அதிமுகவில் இணைந்த இயக்குநர் பாக்யராஜ்!

Comments Off on அதிமுகவில் இணைந்த இயக்குநர் பாக்யராஜ்!

இன்று நடிகர் மற்றும் இயக்குநர் கே.பாக்யராஜ் அதிமுகவில் இணைந்துள்ளார். எம்ஜிஆர் காலத்திலிருந்தே அதிமுக ஆதரவாளராக இருந்த கே.பாக்யராஜ் இடையில் சில காலம் திமுக உள்ளிட்ட கட்சிக்கு மாறினார். பிறகு தனிக்கட்சியும் ஆரம்பித்தார். இந்நிலையில் இன்று திடீரென அவர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டார். இது குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. சமீபத்தில் கே.பாக்யராஜ் பாஜகவுக்கு ஆதரவாக பேசியதால் அவர் மீது கடும் விமர்சனங்கள் எழுந்தது.

Continue reading …