“என்னை யாரும் அவமதிக்கவில்லை” என தெலுங்கானா மற்றும் புதுச்சேரி மாநில கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு அவர் சமீபத்தில் சென்ற போது அவரை அவமதித்ததாக கூறப்பட்டது. இச்செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அதற்கு விளக்கமளித்துள்ள தமிழிசை சவுந்தரராஜன் “சிதம்பரம் நடராஜர் கோவிலில் என்னை யாரும் அவமதிக்கவில்லை, நான் அவமதிக்கப்பட்டதால் வெளிவந்த தகவல் பொய்யானது. படியில் உட்காரக்கூடாது என்று ஒருவர் சொன்னார். அப்புறம் அவர் போய்விட்டார்” என்று கூறியுள்ளார்.
Continue reading …பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் திமுக ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் உண்ணாவிரத போராட்டம் இன்று நடந்தது. மாநிலம் முழுவதும் இன்று பாஜக திமுக தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகிறது. கடந்த சட்டமன்ற தேர்தலின் போது திமுக தேர்தல் அறிக்கை கொடுத்த வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை என்று பாஜக குற்றம் சாட்டி வருகிறது. இந்நிலையில் திமுக ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலம் முழுவதும் இன்று பாஜக தனது […]
Continue reading …உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி விரைவில் தமிழகத்தில் ‘கலைஞர் உணவகம்‘ திறக்கப்படும்: என்று கூறியுள்ளார். கடந்த ஜெயலலிதா ஆட்சியில் தமிழ்நாட்டில் அம்மா உணவகம் திறக்கப்பட்டது. ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்களுக்கு இவ்வுணவகம் வரப்பிரசாதமாக இருந்து வருகிறது. அம்மா உணவகங்கள் ஒரு சில இடங்களில் மூடப்பட்டு வருவதாகவும் ஒரு சில இடங்களில் சரியாக செயல்படவில்லை என்றும் குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள பேரூராட்சி பகுதிகளில் விரைவில் கலைஞர் உணவகம் திறக்கப்படும் என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி […]
Continue reading …பாஜக எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன் தனித்தமிழ்நாடு கேட்டால் தமிழ்நாட்டையே இரண்டாக பிரிப்போம் என்று கூறியுள்ளார். நேற்றைய தினம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் ஆ ராசா “எங்களை தனித்தமிழ் கேட்கும் நிலைக்கு தள்ளி விடாதீர்கள்” என்றார். ஆ ராசாவின் இந்த பேச்சுக்கு பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் பதிலடி கொடுத்துள்ளார். “தமிழ்நாட்டை தனியாக கேட்கும் எண்ணத்தை மறந்து விடுங்கள். என்றும் தனித்தமிழ்நாடு கேட்கும் நிலை தொடர்ந்தால் தமிழ்நாட்டை இரண்டாக பிரிப்போம். தமிழ்நாட்டை இரண்டாக […]
Continue reading …ஆர்.பி.உதயக்குமாரை மதுரையில் போலீசார் கைது செய்துள்ளனர். தமிழகம் முழுவதிலும் மத்திய மற்றும் மாநில அரசுகளின் சுங்கச்சாவடிகள் செயல்படுகின்றன. இந்தியா முழுதும் தமிழகத்தில்தான் அதிகமான சுங்கச்சாவடிகள் செயல்படுகிறது. மதுரையிலிருந்து திருநெல்வேலி நெடுஞ்சாலையில் கப்பலூர் அருகே சுங்கச்சாவடி செயல்படுகிறது. சமீபத்தில் தமிழக அரசால் சென்னைக்கு உட்பட்ட பகுதிகளில் இருந்த 5 சுங்கச்சாவடிகள் மூடுவதாக அறிவிக்கப்பட்டது. அதுபோல கப்பலூர் சுங்கச்சாவடியையும் மூட வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டிருந்தது. இன்று கப்பலூர் சுங்கச்சாவடியை எதிர்த்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் மற்றும் அவரது […]
Continue reading …மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தனக்கு பெரிய பதவி வேண்டாம் என்று தெரிவித்துள்ளார். நாட்டின் வளர்சியின் மீது மட்டும்தான் எனக்கு ஆர்வம். எனக்குப் பெரிய பதவி எதுவும் வேண்டாமென முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மேற்கு வங்க மாநிலத்தில் முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. ஒரு தனியார் டிவி நிகழ்ச்சிக்கு பேட்டியளித்த மம்தா பானர்ஜி, “மத்திய அரசு மஹாராஷ்டிராவில் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துகிறது. தற்போது அரசு பழிவாங்கும் செயலில் […]
Continue reading …மஹராஷ்டிராவை போல் தமிழகத்திலும் ஆட்சி கவிழ வாய்ப்பிருப்பதாக இந்து முன்னணி மாநில தலைவர் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. திமுக அமைச்சர் செந்தில்பாலாஜியிடம் 40 எம்எல்ஏக்கள் இருக்கிறார்கள். மஹாராஷ்டிரா மாநிலத்தை போல் தமிழகத்திலும் ஆட்சி கவிழுக்கூடும் என்றும் இந்து முன்னணி மாநில தலைவர் பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதிமுகவிலிருந்து, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், அதன் பின்னர் திமுக என கட்சி மாறிய செந்தில் பாலாஜிக்கு திமுகவில் நல்ல வரவேற்பு கிடைத்தது. கட்சியில் சேர்ந்த […]
Continue reading …அதிமுக கட்சியின் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவரது டுவிட்டர் பக்கத்தில் சில மாற்றங்களை செய்துள்ளார். இது அவரது கட்சியினரிடத்தில் மட்டுமல்லாமல் மக்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதிமுக கட்சியில் கடந்த சில நாட்களாக எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ பன்னீர்செல்வம் ஆகிய இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதை தொடர்ந்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் பதவியை பிடிக்க இருவருக்குமிடையே போட்டிகள் இருந்தது. இதில் எடப்பாடி பழனிச்சாமி மிக தீவிரமாக இருந்தார். சமீபத்தில் நடந்த பொதுக்குழுவில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் […]
Continue reading …மத்திய அரசு பாராளுமன்ற உறுப்பினர்கள் ரயிலில் பயணம் செய்வதற்கான செலவு ரூ.62 கோடி ஆகிறது என்று தகவல் அளித்துள்ளது. 2021-2022ம் ஆண்டில் பாராளுமன்றத்தில் உள்ள இரு அவை உறுப்பினர்களும் ரயில்களில் பயணித்த செலவு பற்றிய விபரங்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. நடப்பு எம்.பிக்களுக்கு முதல் வகுப்பு ஏசி பெட்டியிலும், முன்னாள் எம்.பிக்களுக்கு இரண்டாம் வகுப்பு ஏசி பெட்டியிலும் இலவசமாக பயணிக்க அனுமதி உள்ளது. இதற்கான கட்டணத்தை மத்திய அரசு ரயில்வேக்கு செலுத்தும். அவ்வகையில் கடந்த 5 ஆண்டுகளில் […]
Continue reading …தேர்தல் ஆணையம் குடியரசு தலைவர் தேர்தலுக்காக கொடுக்கப்பட்டுள்ள மனுவில் 79 மனுக்கள் நிராகரிப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. பாஜக கூட்டணி சார்பில் திரபுபதி முர்மு மற்றும் எதிர்கட்சிகளின் சார்பில் யஷ்வந்த், சின்ஹா ஆகியோரும் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டிடுகின்றனர். இத்தேர்தலில் மொத்தம் 87 பேர் போட்டியிடுவதற்கு விண்ணப்பம் செய்துள்ளனர். அதில் 79 மனுக்கள் உரிய தகுதிகளைப் பூர்த்தி செய்யாததால் நிராகரிக்கப்பட்டதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. யஷ்வந்த் சின்ஹா, திரௌபதி முர்மு ஆகிய இருவரின் வேட்புமனுக்கள் சரியாக இருந்ததால் ஏற்றுக் கொள்ளப்பட்டதாகவும் […]
Continue reading …