ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மூத்த தலைவர் இந்திரேஷ் குமார் பா.ஜ.க. தனிப்பெரும்பான்மை பெற முடியாமல் 241 இடங்களில் சுருங்கியதற்கு அக்கட்சி தலைவர்களின் ஆணவப்போக்கே காரணம் என்று விமர்சித்துள்ளார். 2014-ல் 282 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்து, 2019 தேர்தலில் 303 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைத்து கொண்டது. மேலும் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் 241 தொகுதிகளில் மட்டுமே வெற்றிப் பெற்றது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அருகே கனோட்டாவில் நடைபெற்ற ‘ராமரத் அயோத்தி யாத்ரா தர்ஷன் […]
Continue reading …இன்று ஆந்திர பிரதேசத்தில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான அமைச்சரவையின் இலாக்கா அறிவிக்கப்பட்டுள்ளது. ஆந்திராவின் துணை முதல்வராக ஜனசேனா கட்சியின் தலைவர் பவன் கல்யாண் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பஞ்சாயத்து ராஜ், ஊரக வளர்ச்சித் துறை, ஊரக குடிநீர் விநியோகம், வனத்துறை, சுற்றுச்சூழல், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆந்திர முதலமைச்சரபாபு நாயுடுவின் மகன் நர லோகேஷ் அவர்களுக்கு மனித வள மேம்பாட்டு துறை, தொழில்நுட்பம் மற்றும் எலக்ட்ரானிக் துறை ஆகியவை ஒதுக்கப்பட்டுள்ளது.
Continue reading …தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முன்னாள் தமிழக பாஜக தலைவர் மற்றும் முன்னாள் புதுவை மற்றும் தெலுங்கானா கவர்னர் தமிழிசை வீட்டிற்கு வருகை தந்துள்ளார். அமித்ஷா கடந்த இரண்டு நாட்களுக்கு முன் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு பதவியேற்பு விழாவில் தமிழிசையை அழைத்து கண்டித்ததாக கூறப்பட்டது. இது குறித்த வீடியோ இணையத்தில் வைரலானது. ஆந்திராவிலிருந்து சென்னை திரும்பிய தமிழிசை செய்தியாளர்களிடம் இது குறித்து எதுவும் பேசவில்லை. ஆனால் அதே நேரத்தில் அவர் இது குறித்து விளக்கமளித்த போது, […]
Continue reading …நேற்று குவைத்தில் நடந்த தீ விபத்தில் 41 பேர் பலியாகி உள்ளனர். இதில் பலரும் இந்தியர்கள் என்று கூறப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. மத்திய அமைச்சர் குவைத் விரைவதாகும் அங்கு மீட்பு பணியை அவர் பார்வையிட போவதாகவும் கூறப்படுகிறது. குவைத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக இந்தியர்கள் உட்பட 41 பேர் பலியாகினார். தூங்கிக் கொண்டிருக்கும் போது புகையை சுவாசித்ததால் இறந்ததாக கூறப்படுகிறது. இவர்களில் பெரும்பாலானோர் கேரளாவைச் சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது. குவைத்தில் உள்ள இந்திய தூதரகம் […]
Continue reading …40-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் குவைத் நாட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியாகி உள்ளனர். புதன்கிழமை அதிகாலை குவைத் நாட்டின் தெற்கு அகமதி மாகாணத்தில் மங்கஃப் நகரத்தில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 49 பேர் உயிரிழந்தனர். 50 பேர் காயமடைந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் 42 பேர் இந்தியர்கள் என குவைத் அரசு உறுதிப்படுத்தி உள்ளது. அவர்களில் 19 பேர் கேரளாவைச் சேர்ந்தவர்கள் என கேரள அமைச்சரவை தெரிவித்துள்ளது. மேலும் தீ விபத்தில் தமிழர்கள் ஏழு […]
Continue reading …அரசியல் வல்லுநர் பிரசாந்த் கிஷோர் “அதிமுக இடத்தை வருங்காலத்தில் பாஜக பிடிக்கும். பாஜக உள்ளே நுழையக்கூடாது என்று கூறும் கட்சிகள் இதை கவனித்துக் கொள்ள வேண்டும்” என்று கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பிரசாந்த் கிஷோ “பாஜக தென்னிந்தியாவில் வேகமாக வளரும் என்று நான் இரண்டு வருடங்களுக்கு முன்பே கூறினேன், அதுதான் தற்போது நடந்துள்ளது. ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் பாஜக நல்ல வாக்கு சதவீதத்தை பெற்றுள்ளது, ஒரிசாவிலும் வளர்ந்துள்ளது, கேரளாவின் ஒரு எம்பி பெரும் அளவுக்கு பாஜக […]
Continue reading …நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அல்லது வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் தமிழிசையிடம் நடந்து கொண்டது போன்று உள்துறை அமைச்சர் அமித்ஷா நடந்து கொள்வாரா என்று திமுக எம்பி தயாநிதிமாறன் கேள்வி எழுப்பியுள்ளார். அமித்ஷாவுக்கு தமிழிசை ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் பதவியேற்பு விழாவில் வணக்கும் சொல்லிவிட்டுச் செல்லும்போது, அமித்ஷா உடனே அவரை அழைத்து கடுமையாகக் கண்டிக்கிறார். பதிலுக்குத் தமிழிசை எதோ கூற வரும்போது அதனை மறுத்து அமித்ஷா பேசும் வீடியோ வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. […]
Continue reading …மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சராக தெலுங்கு தேசம் கட்சியின் கிஞ்சராபு ராம் மோகன் நாயுடு பதவியேற்கும் போது 21 முறை ‘ஓம் ஸ்ரீராம்‘ என எழுதினார். இந்த வீடியோ தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று மத்தியில ஆட்சி அமைத்துள்ளது. பிரதமராக மோடி பதவி ஏற்றார். கூட்டணி ஆட்சி என்பதால் தெலுங்கு தேசம் கட்சிக்கு மத்திய அமைச்சரவையில் இடம் ஒதுக்கப்பட்டது. அதன்படி கிஞ்சராபு […]
Continue reading …கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பாவுக்கு சிறுமி பாலியல் வழக்கில் ஜாமினில் வெளியே வர முடியாத பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. பெங்களூர் சதாசிவநகர் காவல் நிலையத்தில் கர்நாடகா மாநில முன்னாள் முதல்வர் எடியூரப்பா மீது போக்சோ சட்டத்தின் கீழ், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. தம்மிடம் உதவி கேட்டு வந்த 17 வயது சிறுமியை எடியூரப்பா பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் எழுந்தது. இவ்வழக்கை கர்நாடகா மாநில சிறப்பு புலனாய்வுக் குழு போலீசார் விசாரித்து வருகின்றனர். […]
Continue reading …ஏற்கனவே பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜே பி நட்டாவின் பதவி காலம் முடிவடைந்தது. தேர்தலை கணக்கில் கொண்டு ஜூன் மாதம் வரை நீடிக்கப்பட்டிருந்தது. தற்போது தேர்தல் முடிவடைந்து பதவி ஏற்பு விழாவும் முடிவடைந்து விட்டதை அடுத்து பாஜக தேசிய தலைவர் தேர்வு தற்போது தீவிரமாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடிக்கு விருப்பமானவர் என்று கூறப்படும் வினோத் தாவ்டே பாஜக தேசிய தலைவர் பதவிக்கு பெயர் பரிசீலனையில் உள்ளது. ஆனால் மகாராஷ்டிராவில் துணை […]
Continue reading …