பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பள்ளிகளில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுக்கும் ஆசிரியர்களுக்கு போக்சோ சட்டத்தை விட கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார். இன்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், மாநில பெற்றோர், ஆசிரியர் கழகத்தின் மாநிலத் தலைவருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில், கோட்டூர்புரத்திலுள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. பின் செய்தியாளர்களிடம் அமைச்சர் அன்பில் மகேஷ், “கிருஷ்ணகிரி பள்ளி மாணவி பாலியல் தொல்லை விவகாரத்தில், […]
Continue reading …ஆளுநர் ஆர்.என். ரவியை சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் தலைமைச் செயலாளர் முருகானந்தம் சந்தித்து பேசியுள்ளார். ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் தலைமைச் செயலாளர் முருகானந்தம் சந்தித்துள்ளார். தலைமைச் செயலாளராக பொறுப்பேற்ற பின் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து முருகானந்தம் வாழ்த்துப் பெற்றார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 27-ம் தேதி அமெரிக்கா செல்ல உள்ளார். அமைச்சரவையில் பெரிய அளவில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகின. 3 மூத்த அமைச்சர்கள் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்டு, புதியவர்களுக்கு […]
Continue reading …கேரள மாநில தலைமைச் செயலாளர் பணியில் இருந்து ஓய்வு பெறும் அதே நாளில் அந்த பதவிக்கு அவருடைய மனைவி நியமனம் செய்யப்பட்டுள்ளார். கேரள மாநிலத்தின் தலைமைச் செயலாளராக இருக்கும் டாக்டர் வேணு என்பவர் ஆகஸ்ட் 31ம் தேதி ஓய்வு பெறுகிறார். இதையடுத்து அவருடைய மனைவி சாரதா முரளிதரன் அடுத்த தலைமை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளார். கணவர் ஓய்வு பெறும் அதே தலைமைச் செயலாளர் பதவியில் மனைவி உட்கார இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கணவர் வகித்த […]
Continue reading …இன்று தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தனது கட்சியின் கொடியை அறிமுகம் செய்தது. இது குறித்த செய்திகள் பரபரப்பாக ஊடகங்களில் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. விஜய்யுடன் கூட்டணி வைக்க சில அரசியல் கட்சி தலைவர்கள் விருப்பப்படுவதாகவும் விஜய்யுடன் பேச்சுவார்த்தை நடத்த ஆர்வம் காட்டுவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன. நாம் தமிழர் கட்சியின் சீமான் விஜய் கட்சியுடன் கூட்டணி வைக்க விரும்புவதாகவும் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக தனித்து கட்சி நடத்திய அவரால் ஒரு இடத்தில் கூட வெல்ல […]
Continue reading …மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக மத்திய அரசு கடுமையான சட்டத்தை இயற்ற வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார். கொல்கத்தாவில் பயிற்சி பெண் மருத்துவர், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. பிரதமர் நரேந்திர மோடிக்கு மம்தா பானர்ஜி கடிதம் எழுதியுள்ள கடிதத்தில், “நாடு முழுவதும் நடக்கும் பாலியல் வன்கொடுமை குறித்த வழக்குகள் கவலையளிப்பதாக உள்ளன. கிடைக்கக்கூடிய தரவுகளின்படி […]
Continue reading …டொனால்டு ட்ரம்ப் அமெரிக்க அதிபர் தேர்தலில், தான் வெற்றிபெற்றால் தன்னுடைய நிர்வாகத்தில் எலான் மஸ்க்குக்கு முக்கிய பதவி தர தயாராக இருப்பதாக கூறியுள்ளார். எலான் மஸ்க் ‘சேவை செய்ய தயாராக இருக்கிறேன்’ என பதில் அளித்துள்ளார். வரும் நவம்பர் 5-ம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில், ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸுக்கும், குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்புக்கும் […]
Continue reading …தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசுப் பணிகளில் மூத்த அதிகாரிகளின் நேரடி நியமனத்துக்கான நடைமுறை ரத்து செய்யப்பட்டதற்கு வரவேற்பு தெரிவித்துள்ளார். மத்திய அரசுப் பணிகளில் மூத்த அதிகாரிகளின் நேரடி நியமனத்துக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. இதைத்தொடர்ந்து நேரடி நியமனத்துக்கான நடைமுறையை நிறுத்தி வைக்கும்படி, யுபிஎஸ்சி தலைவருக்கு மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் கடிதம் எழுதியுள்ளார். இதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வலைதளப்பதிவில், “சமூக நீதிக்கு வெற்றி. இந்தியா கூட்டணியின் […]
Continue reading …தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பாஜக தலைமையில் மாமன் மச்சான் கூட்டணி அமைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழகத்தில் பாஜக ஆட்சி வரவேண்டும் என மக்கள் எதிர்பார்க்கிறார்கள். தமிழகத்தில் அதிமுக மற்றும் திமுக பங்காளி கட்சிகள் தான், ஆனால் அந்த பங்காளிகளுடன் நாங்கள் ஒருபோதும் சேரப் போவது கிடையாது. பாஜக தலைமையில் மாமன் மச்சான் கூட்டணி அமைக்கப்படும். தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கூட்டணிக்கு அழைத்தால் அவருடன் கூட்டணி வைப்போம். […]
Continue reading …கேரள முதலமைச்சர் நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட நிதி உதவி தொகையை வங்கிகள் கடனுக்காக பிடித்தம் செய்து கொண்டதாக செய்தி வெளியானது குறித்து தனது அதிர்ச்சியை தெரிவித்துள்ளார். சமீபத்தில் கேரள மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக ஏராளமானோர் தங்களது வீடு உடைமைகளை இழந்துள்ளனர்.அவர்களுக்கு உதவி தொகை வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது. ஆனால் உதவி தொகையிலிருந்து வங்கிகள் தங்களுக்கான கடன் தவணைகளை பிடித்தம் செய்துள்ளதாக வெளியான தகவல் குறித்து முதலமைச்சர் தனது அதிருப்தியை தெரிவித்துள்ளார். […]
Continue reading …அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி டில்லிக்கு காவடி எடுத்து தப்பிவிடலாம் என்று நினைத்தால் புத்திசாலிகளான தமிழக மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்று திமுக அரசுக்கு எச்சரித்துள்ளார். இது தொடர்பாக அவர், “பதவி வரும்போது பணிவு வர வேண்டும், துணிவும் வர வேண்டும் தோழா என்று நம்மை எல்லாம் ஆளாக்கிய மறைந்த முதலமைச்சர் எம்ஜிஆர் கூறியிருக்கிறார். நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அள்ளித் தெளித்து ஆட்சிக்கு வந்த மு.க.ஸ்டாலின், பணிவு என்றால் கிராம் என்ன விலை என்று […]
Continue reading …