திமுக எம்.பி கனிமொழி பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார். கொல்கத்தாவில் மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தின் வடு இன்னமும் நீங்காமல் உள்ளது. கிருஷ்ணகிரியில் பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தமிழக முழுதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவத்திற்கு பல்வேறு கட்சித் தலைவர்களும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். திமுக எம்.பி. கனிமொழி தனது எக்ஸ் தளத்தில், “கிருஷ்ணகிரியில் 13 வயது பள்ளி மாணவி […]
Continue reading …தூய்மை பணியாளரின் மகள் குரூப் 2 தேர்வில் வெற்றி பெற்று நகராட்சி ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். “கல்விதான் யாராலும் பறிக்க முடியாத சொத்து” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். குரூப் 2 தேர்வில் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த துர்கா வெற்றி பெற்று நகராட்சி ஆணையராக பதவியேற்க உள்ளார். என் தாத்தாவும், அப்பாவும் தூய்மைப்பணியாளர்கள், அந்த அடையாளத்தை மாற்ற வேண்டும் என நினைத்தேன், இன்றிலிருந்து எங்கள் வாழ்க்கை மாறியுள்ளது என்று துர்கா கூறியுள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது […]
Continue reading …சோனியா காந்தியை டில்லிக்கு சென்று உத்தவ் தாக்கரே சந்தித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மகாராஷ்டிரா மாநில தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதையடுத்து சோனியா காந்தி முதலமைச்சர் வேட்பாளராக அறிவிப்பார் என்று கூறப்படுகிறது. டில்லிக்கு மகாராஷ்டிரா முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே சென்றுள்ளார். அங்கு அவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, சுனிதா கெஜ்ரிவால் உள்ளிட்டவரை சந்தித்தார். அடுத்ததாக சோனியா காந்தி உடன் சந்திப்பு நடத்தி உள்ளதாகவும் இச்சந்திப்பின்போது காங்கிரஸ் மற்றும் சிவசேனா கூட்டணி, முதலமைச்சர் வேட்பாளர் குறித்து […]
Continue reading …முன்னாள் டில்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக அமலாக்கத் துறை மற்றும் சிபிஐ தொடர்ந்த இரண்டு வழக்குகளில் இருந்தும் உச்ச நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது. கடந்த ஆண்டு பிப்ரவரி 26-ம் தேதி டில்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் மணிஷ் சிசோடியாவை சிபிஐ கைது செய்தது. அதே ஆண்டு மார்ச் 9ம் தேதி அவரை பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்க துறையும் […]
Continue reading …பிரதமர் மோடி தேசியக் கொடியுடன் செல்ஃபி எடுத்து இணையதளத்தில் பகிர வேண்டுமென்று நாட்டு மக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். 77வது சுதந்திர தினம் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட இருக்கிறது. அன்றைய தினம் டில்லி செங்கோட்டையில், தேசியக்கொடி ஏற்றி நாட்டு மக்கள் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றவுள்ளார். அதற்கான பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தேசியக் கொடியுடன் மக்கள் செல்ஃபி எடுத்து இணையதளத்தில் பகிர வேண்டுமென்று பிரதமர் மோடி கோரிக்கை விடுத்துள்ளார். […]
Continue reading …அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தமிழக மீனவர்கள் 32-பேர் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் சமூக வலைதளத்தில், “வங்கக்கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த 32 மீனவர்கள், 4 நாட்டுப் படகுகளை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கை கடற்படையால் தொடர்ந்து அராஜக முறையில் சிறைபிடிக்கப்பட்டு வருகிறார்கள். மத்திய பாஜக அரசு இதற்கான நிரந்தரத் தீர்வினை எட்ட போதிய முயற்சிகள் எடுக்காமல் […]
Continue reading …முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பள்ளி கல்வி முடிக்கும் மாணவர்கள் உயர்கல்வி படித்தே ஆக வேண்டும் என்று தெரிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கோவையில் தமிழ்ப் புதல்வன் திட்டத்தை தொடங்கி வைத்தார். தமிழ்ப் புதல்வன் திட்டத்தின்கீழ் மாணவர்களுக்கு முதலமைச்சர் ரூ.1000 உதவித் தொகை வழங்கினார். பின்னர் பேசிய அவர், “தொடக்க விழாவுக்கு வரும் முன்பே மாணவர்களின் வங்கிக் கணக்கில் ரூ.1000 வரவு வைக்க நேற்றே உத்தரவிட்டேன். நாள்தோறும் ஏராளமான திட்டங்களை தீட்டினாலும் ஒரு சில திட்டங்கள்தான் நமது மனதுக்கு […]
Continue reading …திருச்சி பொன்மலை ஜி-கார்னர் திடலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு நடத்த அனுமதி கோரி ரயில்வே கோட்ட மேலாளிடம் அக்கட்சி நிர்வாகிகள் கடிதம் வழங்கியுள்ளனர். கடந்த பிப்ரவரி மாதம் நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சியை தொடங்கினார். 2026 சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட இலக்கு நிர்ணயித்து, உறுப்பினர்களை சேர்ப்பது, கட்சி நிர்வாகிகளை நியமிப்பது, விஜய் மக்கள் இயக்க மாவட்ட தலைவர்களை தொடர்ந்து சந்தித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்குவது, […]
Continue reading …ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களுடன் திடீரென கூட்டம் நடத்தப் போவதாக கூறப்படுகிறது. இக்கூட்டத்தில் முக்கிய ஆலோசனை செய்யப்படும் என்று கூறப்படுகிறது. உயர் கல்வி அமைச்சர் பொன்முடி கடந்த மூன்று நாட்களுக்கு முன்னால் துணைவேந்தர் கூட்டத்தை நடத்தினார். அதில் சில முக்கிய விஷயங்கள் ஆலோசனை செய்யப்பட்டது. உயர்கல்வி அமைச்சரின் கூட்டத்தை அடுத்து அதிரடியாக ஆளுநர் ரவி, துணைவேந்தர் கூட்டத்தை இன்று நடத்தவுள்ளார். இக்கூட்டத்தில் தமிழக பல்கலைக்கழகங்களில் உள்ள துணைவேந்தர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொள்வார்கள் […]
Continue reading …தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2026ம் ஆண்டு நடைபெறும் சட்டமன்றத் தேர்தலுக்கு முன் ஜெய் ஸ்ரீ ராம் மற்றும் முருகனுக்கு அரோகரா என சொல்வார் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்திருந்தார். இதற்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இதற்கு பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, “இந்துக்கள் விரும்பும் கடவுளை வழிபட அனைத்து சுதந்திரமும் தமிழ்நாட்டில் உள்ளது. பக்தர்களின் வழிபாட்டு உரிமையில் திமுக அரசு தலையிடாது. ஜெய் ஸ்ரீ ராம் என்றாலும் ஏற்றுக் கொள்வோம், […]
Continue reading …