
பாமக மாம்பழம் சின்னத்தை கேட்டு வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட விண்ணப்பித்திருந்தது. அக்கட்சிக்கு மாம்பழம் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியிருப்பதாக கூறப்படுகிறது. அங்கீகாரம் பெறாத கட்சிகள் தேர்தல் ஆணையத்தில் தாங்கள் போட்டியிடும் சின்னத்தை விண்ணப்பித்திருந்தது. அந்த விண்ணப்பத்தை பரிசீலனை செய்து தேர்தல் ஆணையம் சின்னங்களை ஒதுக்கி வருகிறது. பாமக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி என்ற தரத்தை இழந்தது. மீண்டும் மாம்பழம் சின்னத்தை விண்ணப்பித்திருந்த நிலையில் அது குறித்த பரிசீலனை கடந்த சில நாட்களாக நடந்து வந்தது. கடந்த […]
Continue reading …
தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா மக்களவைத் தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து வியாழக்கிழமை அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். தேமுதிக மக்களவை தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை இன்னும் தெளிவுபடுத்தவில்லை. பாஜக மற்றும் அதிமுகவுடன் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து வந்ததாக கூறப்பட்டது. ஆனால் தேமுதிக கேட்கும் தொகுதிகளை பாஜக, அதிமுக கொடுக்க முன் வராததால் இன்னும் கூட்டணி இழுபறி தொடர்கிறது. இதற்கிடையே அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி வைக்கும் என்று சொல்லப்படுகிறது. இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றாலும் […]
Continue reading …
பிரதமர் நரேந்திர மோடி நலத்திட்டங்களுக்காக மத்திய அரசு வழங்கும் நிதியை திமுக அரசு வீணடிப்பதாகவும், இந்து மதத்திற்கு எதிராக திமுக காங்கிரஸ் கூட்டணி கட்சியினர் செயல்படுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் பேசும்போது, “பாமகவின் வருகையால் தேசிய ஜனநாயக கூட்டணியின் கரம் வலுவடைந்துள்ளது. இந்து தவிர வேறு மதங்களை இந்தியா கூட்டணியினர் அவமதிப்பதில்லை, இந்து மதத்திற்கு எதிராக திமுக காங்கிரஸ் கூட்டணி கட்சியினர் செயல்படுகின்றனர். இந்து தர்மத்தை அழிப்பது மட்டுமே இந்தியா கூட்டணி நோக்கமாக உள்ளது, சக்தியை […]
Continue reading …
நடிகர் பிரகாஷ்ராஜ் பாராளுமன்ற தேர்தலில் 400 தொகுதிக்கு மேல் வெற்றி பெறுவோம் என்று பேசுவது திமிர்த்தனம் என்றும் ஜனநாயக நாட்டில் எந்த ஒரு கட்சியும் 100 இடங்களுக்கு மேல் வெல்ல வாய்ப்பில்லை என்றும் நடிகர் பிரகாஷ்ராஜ் பேசியுள்ளார். பிரதமர் மோடி சமீபத்தில் நாடாளுமன்ற தேர்தலில் 420 இடங்களுக்கு மேல் வெற்றி பெறுவோம் என பேசினார். இதுகுறித்து நடிகர் பிரகாஷ்ராஜ் “420 மோசடி பேர்வழிகள் 400 இடங்களில் வெற்றி பெறுவோம், 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறுவோம் என […]
Continue reading …
மத்திய போதை பொருள் தடுப்பு அதிகாரிகள் போதை பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஜாபர் சாதிக்கை காவலில் எடுத்து விசாரணை செய்து வருகின்றனர். விசாரணையில் பல உண்மைகள் தெரிய வந்துள்ளதாகவும் இதனால் தமிழ் திரை உலகினர் பீதியாகி உள்ளனர். சாதிக்குடன் தொடர்பில் இருந்த மலேசிய பிரமுகர் தமிழ் திரையுலகில் பட விநியோகம் பைனான்ஸ் செய்வது போன்றவற்றில் ஈடுபட்டு வந்ததாகவும் அவருக்கு இன்னொரு முகம் இருப்பதாகவும் அந்த முகம் குறித்து தான் தற்போது மத்திய போதை தடுப்பு […]
Continue reading …
தமிழிசை சௌந்தர்ராஜன் தெலுங்கானா ஆளுநராகவும், புதுச்சேரி துணைநிலை ஆளுநராகவும் பொறுப்பு வகித்துக் கொண்டிருக்கிறார். ஆனால் அவர் அந்த பதவியை ராஜினாமா செய்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழிசை சௌந்தர்ராஜன் தற்போது தெலுங்கானா ஆளுநராகவும், புதுச்சேரி துணைநிலை ஆளுநராகவும் பொறுப்பு வகித்து வருகிறார். சமீபத்தில் மக்களவை தேர்தலுக்கான பணிகளை பாஜக தொடங்கியது முதலே தமிழிசை தான் எம்.பியாக போட்டியிட விரும்புவது குறித்து தொடர்ந்து பாஜக மேலிடத்திடம் பேசி வந்தார். அவர் புதுச்சேரியில் போட்டியிட விருப்பப்பட்ட நிலையில் சட்டமன்ற தேர்தலில் கூட்டணி […]
Continue reading …
திமுக, மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் களமிறங்கும் தொகுதிகள் அறிவிப்பு. ✦ சென்னை வடக்கு ✦ சென்னை தெற்கு ✦ மத்திய சென்னை ✦ காஞ்சிபுரம் ( தனி) ✦ அரக்கோணம் ✦ வேலூர் ✦ தருமபுரி ✦ திருவண்ணாமலை ✦ சேலம் ✦ கள்ளக்குறிச்சி ✦ நீலகிரி (தனி) ✦ பொள்ளாச்சி ✦ கோவை ✦ தஞ்சாவூர் ✦ தூத்துக்குடி ✦ தென்காசி (தனி) ✦ ஸ்ரீபெரம்புதூர் ✦ பெரம்பலூர் ✦ தேனி ✦ ஈரோடு […]
Continue reading …
தென்னிந்தியாவில் பாரதிய ஜனதா கட்சி நுழைய முடியாது என்றும் வடநாட்டில் மட்டுமே ஜெயிக்க முடியும் என்றும் கூறப்பட்டு வந்தது. சமீபத்தில் வெளியான கருத்துக்கணிப்பில் தென்னிந்தியாவில் பாரதிய ஜனதா வலுவாக கால் ஊன்ற வாய்ப்புள்ளதாக தெரிய வந்துள்ளது. காங்கிரஸ் கட்சி நேற்று வெளியான கருத்துக்கணிப்பில் கர்நாடக மாநிலத்தில் அபார வெற்றி பெறும் என்று கூறப்பட்டுள்ளது. கர்நாடகாவில் மொத்தம் 28 தொகுதிகள் இருக்கும் நிலையில் அதில் பாரதிய ஜனதா கட்சி 25 தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும் ஆளும் காங்கிரஸ் […]
Continue reading …
லாட்டரி அதிபர் மார்ட்டினின் நிறுவனம் அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் பத்திரங்கள் வழியாக கோடிக்கணக்கில் வழங்கிய நிறுவனங்களில் அதிகளவில் நிதி வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் பத்திரம் மூலம் நன்கொடை வழங்கும் முறையை சமீபத்தில் உச்சநீதிமன்றம் தடை செய்ததுடன், இதுவரை தேர்தல் பத்திரம் மூலம் நிதி அளித்த விவரங்களை சமர்பிக்குமாறு எஸ்பிஐ வங்கிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அவ்வகையில் எஸ்பிஐ அளித்த விவரங்கள் தேர்தல் ஆணைய பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளன. அதில் அதிகளவில் தேர்தல் நன்கொடை பெற்ற […]
Continue reading …
சிறுமியை வன்கொடுமை செய்ததாக கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாஜகவை சேர்ந்த எடியூரப்பா கர்நாடகாவின் முன்னாள் முதல்வராக பதவி வகித்தவர். இவரது வீட்டிற்கு கடந்த 2ம் தேதி பெண் ஒருவர் தனது 17 வயது மகளுடன் கல்வி தொடர்பான உதவி கேட்டு சென்றுள்ளார். அப்போது எடியூரப்பா சிறுமியை தனி அறைக்கு அழைத்து சென்று அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து வெளியே சொல்லாமல் இருந்தால் […]
Continue reading …