Home » Archives by category » அரசியல் (Page 62)

மு.க.ஸ்டாலினுக்கு நன்றி கூறிய கேரள முதலமைச்சர்!

Comments Off on மு.க.ஸ்டாலினுக்கு நன்றி கூறிய கேரள முதலமைச்சர்!

கேரள அரசு மாநில அரசின் நிர்வாகத்தில் மத்திய அரசு தலையிடுவதை எதிர்க்கும் பட்சத்தில் தமிழக முதலமைச்சர் கேரள அரசுக்கு ஆதரவு தெரிவித்திருந்த நிலையில் இதற்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் நன்றி தெரிவித்துள்ளார். கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தில், “மாநில அரசுகளின் நிதி நிர்வாகத்தில் தன்னிச்சையான மற்றும் பாரபட்சமான கட்டுப்பாட்டைச் செயல்படுத்தி, மாநிலங்களின் குரல்வளையை நெரிக்க ஒன்றிய அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளை எதிர்த்து, மாண்பமை உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ள கேரள […]

Continue reading …

முதலமைச்சர் சித்தராமையா நிர்மலா சீதாராமனுக்கு அழைப்பு!

Comments Off on முதலமைச்சர் சித்தராமையா நிர்மலா சீதாராமனுக்கு அழைப்பு!

சமீபத்தில் புதிய நாடாளுமன்றாத்தில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்தது. இதற்கு, காங்கிரஸ், திமுக, விசிக உள்ளிட்ட கட்சிகள் விமர்சனம் தெரிவித்தனர். தென் மாநிலங்கள் தொடர்ந்து பாஜக அரசால் புறக்கணிக்கப்பட்டு வருவதாகவும் விமர்சனம் முன்வைக்கப்பட்டது. நிதிப்பங்கீட்டில் மத்திய அரசு தொடர்ந்து கர்நாடகாவுக்கு அநீதி இழைத்து மாற்றான் தாய் மனப்பான்மையுடன் நடந்து கொள்கிறது என்று அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா கூறியதுடன், நாளை கர்நாடகம் அரசு சார்பில் டில்லியில் நடைபெறும் போராட்டத்தில் அமைச்சர் […]

Continue reading …

விஜய்க்கு வாழ்த்து கூறிய ஷாருக்கான்!

Comments Off on விஜய்க்கு வாழ்த்து கூறிய ஷாருக்கான்!

நடிகர் விஜய்க்கு பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். சமீபத்தில் நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற தனது புதிய அரசியல் கட்சியை அறிவித்து தனது அறிக்கையை வெளியிட்டிருந்தார். அதில், 2024ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட போவதில்லை என்றும், வரும் 2026ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் தான் தங்கள் இலக்கு என்று தெரிவித்திருந்தார். விஜய்யின் அரசியல் வருகை மற்றும் அவரது புதிய கட்சிக்கு பல அரசியல் கட்சி தலைவர்களும், சினிமாத் துறையினரும் […]

Continue reading …

அண்ணாமலைக்கு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பதிலடி!

Comments Off on அண்ணாமலைக்கு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பதிலடி!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திமுக தொலைக்காட்சி நடத்துவதே மக்களிடம் இருந்து உண்மைகளை மறைக்கத்தான்- என்று கூறியுள்ளார். மேலும் அவர் வரும் 2026ம் ஆண்டு தமிழ்நாட்டில் பாஜக ஆட்சி அமைந்த உடன் வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று கூறியிருந்தார். இதற்கு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், “ஒரு ஒப்பீட்டுக்கு– தமிழ்நாட்டில் இப்போதிருக்கும் அரசுப் பணிகள் எண்ணிக்கை மொத்தம் சுமார் 9.5 லட்சம்… ஙியிறி கூறுவது என்னவென்றால், சுமார் 7.6 கோடி மக்கள் உள்ள மாநிலத்தில் 2.397 […]

Continue reading …

திமுக ஆலோசனைக் கூட்டம்!

Comments Off on திமுக ஆலோசனைக் கூட்டம்!

திமுக தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவினர் மக்களவைத் தேர்தலையொட்டி வடசென்னை மற்றும் தென் சென்னை மாவட்ட நிர்வாகிகளுடன், ஆலோசனை நடத்தி வருகின்றனர். திமுக தலைமை ஜனவரி 24ம் தேதி முதல் பிப்ரவரி 5ம் தேதி வரை சென்னையில் நாடாளுமன்ற தொகுதி வாரியாக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெறும் என்று ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி கிருஷ்ணகிரி, திருவள்ளூர், பொள்ளாச்சி, கோவை, நீலகிரி, திருப்பூர், நாமக்கல், ஈரோடு, சேலம், தருமபுரி, சிவகங்கை, விருதுநகர், தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மதுரை, தேனி, […]

Continue reading …

கிளாம்பாக்கம் செல்ல போக்குவரத்து கட்டணம் அதிகம்; அண்ணாமலை!

Comments Off on கிளாம்பாக்கம் செல்ல போக்குவரத்து கட்டணம் அதிகம்; அண்ணாமலை!

பாஜக தலைவர் அண்ணாமலை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்குச் செல்லும் போக்குவரத்துக்கான கட்டணம் அதிகம்- என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “கோயம்பேடு பேருந்து நிலையத்தை மையப்படுத்தி, மெட்ரோ ரயில் நிலையம், வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட கட்டமைப்புகளுக்கு இத்தனை ஆண்டுகளாகப் பல ஆயிரம் கோடி செலவு செய்துவிட்டு, பயணிகளுக்குத் தேவையான எந்த அடிப்படை வசதிகளும் செய்து முடிக்கப்பட்டாத கிளாம்பாக்கத்திற்கு, பேருந்து நிலையத்தை உடனே மாற்றுவோம் எனும் அடிமுட்டாள்தனமான செயல்பாட்டை என்னவென்று சொல்வது? கோயம்பேடு சுற்றியுள்ள ஆட்டோ ஓட்டுநர்கள், சிறு […]

Continue reading …

அண்ணா நினைவு தினம்! ஸ்பெயினில் முதலமைச்சர் மரியாதை!

Comments Off on அண்ணா நினைவு தினம்! ஸ்பெயினில் முதலமைச்சர் மரியாதை!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேரறிஞர் அண்ணா நினைவு நாளையொட்டி ஸ்பெயினில் அவரது திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இன்று முன்னாள் முதலமைச்சருமான பேரறிஞர் அண்ணாவின் 55வது நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது. சென்னையிலுள்ள அவரது நினைவிடத்தில் திமுக அதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சி நிர்வாகிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். ஸ்பெயின் நாட்டிற்கு சென்றுள்ள முதலமைச்சர் மு.க ஸ்டாலின், அங்கு அண்ணாவின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இது தொடர்பான புகைப்படத்தை தனது எக்ஸ் […]

Continue reading …

நடிகர் விஜய் குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ்!

Comments Off on நடிகர் விஜய் குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ்!

அமைச்சர் அன்பில் மகேஷ் “நடிகர் விஜய் எங்களுக்கு அருமையான அண்ணன். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எங்களுக்கு அவரை அறிமுகப்படுத்தி உள்ளார்” என்றும் தெரிவித்துள்ளார். தமிழக வெற்றி கழகம் என்ற தனது கட்சிப் பெயரினை நடிகர் விஜய் நேற்று அறிவித்து அரசியலுக்கு வருவதை உறுதி செய்துள்ளார். விஜய் அரசியலுக்கு வந்ததை அரசியல் பிரபலங்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அவ்வகையில் நேற்று அமைச்சர் உதயநிதி, “விஜய்யின் அரசியல் வருகைக்கு தனது வாழ்த்துக்கள், இந்திய ஜனநாயகத்தில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு […]

Continue reading …

அத்வானிக்கு பாரத ரத்னா விருது! பிரதமர் மோடி புகழாரம்!

Comments Off on அத்வானிக்கு பாரத ரத்னா விருது! பிரதமர் மோடி புகழாரம்!

பிரதமர் மோடி அத்வானிக்கு இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கப்படும் எனவும் இந்தியாவின் வளர்ச்சிக்கு அவர் செய்த பங்களிப்பு மகத்தானது எனவும் தெரிவித்துள்ளார். பாரத ரத்னா விருது பாஜக மூத்த தலைவர் அத்வானிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், “பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ள அத்வானியை தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தேன். எல்.கே.அத்வானிக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படுவதைப் பகிர்ந்து கொள்வதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். நம் காலத்தின் […]

Continue reading …

நாம் தமிழர் பிரமுகர்கள் வீட்டில் என்.ஐ.ஏ சோதனை!

Comments Off on நாம் தமிழர் பிரமுகர்கள் வீட்டில் என்.ஐ.ஏ சோதனை!

இன்று தமிழகம் முழுவதும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாட்டின் பாதுகாப்பிற்கு ஆபத்து ஏற்படுத்தும் நிகழ்வுகள் மீது கவனம் செலுத்தும் தேசிய புலனாய்வு முகமை பல இடங்களில் அவ்வபோது திடீர் சோதனைகளில் ஈடுபட்டு வருகிறது. அவ்வகையில் இன்று காலை முதலே தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தமிழ்நாட்டின் சென்னை, தூத்துக்குடி, குமரி, திருநெல்வேலி என பல பகுதிகளில் பல நபர்கள் வீடு, அலுவலகங்களில் அதிரடி சோதனையில் […]

Continue reading …