
இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிநாடு செல்கிறார். கடந்த 7 மற்றும் 8ம் தேதிகளில் சென்னையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் 6 லட்சத்து 64 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதன் மூலம், 27 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாட்டுக்கு மேலும் முதலீடுகளை ஈர்க்கும் வகையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பத்து நாள் சுற்றுப்பயணமாக இன்று வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்கிறார். அதன்படி, சென்னையிலிருந்து விமானம் மூலம் இன்று […]
Continue reading …
மக்களவை தேர்தலையொட்டி தமிழகத்தில் கூட்டணி குறித்து பேச்சுவாரத்தை நடைபெற்று வருகிறது. எந்த கட்சி யாருடன் கூட்டணி? கூட்டணியில் எத்தனை இடங்கள் ஒதுக்கீடு? என்ற பரபரப்பில் தமிழக அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டிக் கொண்டிருக்கிறது. அதிமுகவுடன் பாஜக கூட்டணி விரிசல் ஏற்பட்டது. பாஜக தனது தலைமையில் புதிய கூட்டணியை உருவாக்கி தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகிறது. அக்கூட்டணியில் ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோர் இடம் பெறுவார்கள் என கூறப்படுகிறது. மேலும் பல கட்சிகளுடன் பாஜக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. […]
Continue reading …
நாளை காங்கிரஸ் கட்சியுடன் திமுகவின் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்துகிறது. வருகிற ஏப்ரல் மாதம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி அரசியல் கட்சிகளிடையே கூட்டணி பேச்சு வார்த்தை தீவிரமாக நடைபெறுகிறது. திமுகவுடன் தொகுதி பங்கீடு குறித்து காங்கிரஸ் கட்சி நாளை பேச்சுவார்த்தை நடத்துகிறது. இதற்காக அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் முகுல் வாஸ்னிக், காங்கிரஸ் காரிய கமிட்டி உறுப்பினர் சல்மான் குர்ஷித், தமிழக பொறுப்பாளர் அஜய்குமார் ஆகியோர் நாளை டில்லியிலிருந்து சென்னை வருகின்றனர். விமான […]
Continue reading …
திமுக சார்பில் விரைவில் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகள் பற்றிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதுகுறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணியின் வெற்றியை உறுதி செய்திட, கழகத்தலைவர் முதலமைச்சர், கழக நாடாளுமன்றத் தேர்தல் மேற்பார்வை மற்றும் ஒருங்கிணைப்புக்குழுவை அமைத்துள்ளார்கள். இக்குழுவின் சார்பில், சேலம் மக்களவைத் தொகுதியில் மேற்கொள்ள வேண்டிய தேர்தல் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் அண்ணா அறிவாலயம் -கலைஞர் அரங்கத்தில் இன்று நடைபெற்ற போது அதில் பங்கேற்றோம். இக்கூட்டத்தின் […]
Continue reading …
அண்ணாமலை பாரதிய ஜனதா கட்சி தமிழகத்தில் ஆட்சிக்கு வந்தால் டாஸ்மாக் கடைகள் மூடப்படுவதோடு, கள்ளுக்கடைகள் திறக்கப்படும் என்றும் கூறியுள்ளார். கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் என் மண் என் மக்கள் பாதை யாத்திரையின் போது அவர் பொதுமக்கள் மத்தியில் பேசும்போது, “வள்ளலாரின் கொள்கையை கடைப்பிடித்து வரும் ஊரில் போலீசார் தடியடி நடத்தப்பட்டது ஏற்க முடியாதது. பாரதிய ஜனதா கட்சி தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்து டாஸ்மாக் கடையை மூடப்படும், அடுத்த கையெழுத்து கள்ளுக்கடைகள் திறக்கப்படும்” என்று கூறினார். […]
Continue reading …
பட்ஜெட் தயாரித்த ஊழியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்பு அல்வா கிண்டி வழங்கப்படுவது வழக்கம். நேற்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அல்வா கிண்டிய புகைப்படம் இணையத்தில் வைரலானது. பட்ஜெட்டில் இந்த ஆண்டும் தமிழகத்திற்கு அல்வா தான் கொடுக்கப் போகிறார்கள் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார். நேற்று சென்னை பல்லாவரம் பகுதியில் நடந்த மொழிப்போர் தியாகிகள் குறித்த கூட்டத்தில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “பட்ஜெட்டுக்கு முன்பாக நேற்று நிர்மலா […]
Continue reading …
காங்கிரஸ் தலைவர் கார்கே கூட்டணி குறித்தும் தொகுதி பங்கீடு குறித்தும் திமுகவுடன் பேச்சு வார்த்தை நடத்துவதற்காக தமிழகம் வரவிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளர் என கடந்த தேர்தலில் அறிவித்தார். திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்குவது என்பது குறித்த பேச்சுவார்த்தைக்காக காங்கிரஸ் தலைவர் கார்கே தமிழகம் வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 2019ம் ஆண்டு நடந்த தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் […]
Continue reading …
இஸ்ரோ தலைவர் சோமநாத்தை வரும் பாராளுமன்ற தேர்தலில் திருவனந்தபுரம் தொகுதியில் நிறுத்த பாஜக திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. வரும் ஏப்ரல் மாதம் பாராளுமன்ற தேர்தல் நடைபெ உள்ளது. பாரதிய ஜனதா, காங்கிரஸ் உள்பட அனைத்து கட்சிகளும் தேர்தலுக்கு தயாராகி வருகின்றன. கேரள மாநிலத்தில் ஆளுங்கட்சியான கம்யூனிஸ்ட் மற்றும் எதிர்க்கட்சியான காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளும் வலிமையாக இருக்கிறது. பாரதிய ஜனதா இந்த மாநிலத்தில் மிகவும் குறைவான வாக்கு சதவீதத்தை கொண்டுள்ளது. இதனால் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியுடன் […]
Continue reading …
நடிகர் விஜய், சினிமாவில் நடிப்பதுடன் மக்களுக்கு தேவையான உதவிகளையும் செய்து வருகிறார். சமீபத்தில், தமிழகம் முழுவதும் விஜய் நூலகம், விஜய் பயிலகம், விஜய் இலவச சட்ட மையம் ஆகியவற்றை அமைத்து வருகிறார். அரசியலில் விஜய் நுழைவதற்கு ஆன முதல்கட்டமாக தன் மக்கள் இயக்க மாணவரணி, மகளிரணி, இளைஞரணி, ஐடி அணி ஆகியோரை தனித்தனியே அழைத்து ஆலோசனை கூட்டம் நடத்தினர். கடந்தாண்டு மாணவர்களுக்கு உதவித்தொகை அளித்தது, வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரண உதவி அளித்தது மக்களிடையே அதிகம் பேசப்பட்டது. விஜய் […]
Continue reading …
இன்று இந்தித் திணிப்புக்கு எதிராகப் போராடிய உயிர் நீத்த மொழிப்போர்த் தியாகிகள் வீரவணக்க நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ‘அண்ணா கலைஞர் கழகத்தலைவர் அவர்களின் தொண்டர்கள் உலவுகிற வரைக்கும், இந்தி திணிப்பு மட்டுமல்ல எந்த திணிப்பும் தமிழ்நாட்டை நெருங்க முடியாது’ என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “இந்தி ஆதிக்கமெனும் நெருப்பு தமிழ்நாட்டை உரசாமல் இருக்க, தங்களையே தீக்கிரையாக்கிக் கொண்ட மொழிப்போர் தியாகிகளின் நினைவாக, தமிழ்நாடெங்கும் இன்றைய தினம் மொழிப்போர் தியாகிகள் வீர வணக்க […]
Continue reading …