
முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் அரசியலில் எதிரியும் இல்லை நண்பரும் இல்லை என கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அரசியலில் எதிரியும் இல்லை நண்பரும் இல்லை என பலர் கூறுவார்கள் என்பதும் அதற்கு பொருள் எதிரி போல் இருந்தவர்கள் திடீரென நண்பராகி விடுவார்கள் என்பதும் நண்பராக இருந்தவர்கள் திடீரென எதிரி ஆகி விடுவார்கள் என்பதும் இதெல்லாம் அரசியலில் சகஜம் என்றும் கூறப்படுவது உண்டு. அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூட்டணி குறித்த கேள்விக்கு அரசியலில் எதிரிகளும் […]
Continue reading …
பணிப்பெண்ணை சித்திரவதை செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த திமுக எம்எல்ஏ மகன் மற்றும் மருமகளை ஆந்திராவில் வைத்து தனிப்படை போலீசார் கைது செய்தனர். சென்னை பல்லாவரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் கருணாநிதி. இவரது மகன் ஆண்டோ வீட்டில், 18 வயது இளம் பெண் ஒருவர், பணிபுரிந்து வந்தார். அப்பெண்ணை ஆண்டோவும், அவரது மனைவி மெரலினாவும் சேர்ந்து சித்திரவதை செய்துள்ளனர். அந்தப் பெண்ணை வீட்டில் அடைத்து வைத்து கடுமையாக தாக்கியும், கைகளில் சிகரெட்டால் சூடு வைத்தும், துன்புறுத்திய […]
Continue reading …
நியூஸ் 7 செய்தி தொலைக்காட்சியில் செய்தியாளர் நேசபிரபு மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியதில் அவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அதிமுக, பாமக, உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இச்சம்பவத்தில் ஈடுபட்ட சமூகவிரோதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். இதுகுறித்து மத்திய இணையமைச்சர் எல்.முருகன் “பத்திரிக்கையாளர்களுக்கே பாதுகாப்பில்லை என்றால் சாமானிய மக்களின் நிலை என்ன? பல்லடம் நியூஸ் 7 தமிழ் செய்தியாளர் நேசபிரபு […]
Continue reading …
முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வெற்றியை தவறவிடும் அமைச்சர்கள் பதவி பறிபோகும் என எச்சரித்துள்ளார். வருகிற ஏப்ரல் மாதம் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கான பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. தமிழகத்தில் திமுக, அதிமுக, பாஜக என மும்முனை போட்டி நிலவுகிறது. எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக, கூட்டணி தொடர்பாக பல்வேறு கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அதேபோல் பாஜகவும் பல்வேறு கட்சிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறது. ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா […]
Continue reading …
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மதுரையில் கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தை திறந்து வைத்த பேசியதாவது, “ஜல்லிக்கட்டு போட்டிக்காக போராடியவர்களை அதிமுக அரசு அடித்து விரட்டியது, ஜல்லிக்கட்டு போட்டிக்காக இளைஞர்கள் நடத்திய போராட்டத்திற்கு அதிமுக அடி பணிந்தது அதிமுக அரசு. ஆனால் ஜல்லிக்கட்டு போட்டிக்கான தடைகள் அனைத்தையும் உடைத்தது திமுக அரசுதான். தை மாதம் வந்தாலே மூர்த்தி ஜல்லிக்கட்டு மூர்த்தியாக மாறி விடுவார். தமிழர்’ என்ற அடையாளத்துடன் ஜல்லிக்கட்டு போன்ற பண்பாட்டு திருவிழாவை ஒற்றுமையாக நடத்துவோம்! ஏறு தழுவுதல் […]
Continue reading …
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புயல், மழை, வெள்ளம் என எந்தப் பேரிடர் வந்தாலும், மக்களை காக்க முதலில் களத்திற்கு வருபவர்கள் நம் மீனவ நண்பர்கள் என்று தெரிவித்துள்ளார். தென் மாவட்டங்களில் மீட்பு பணிகளில் ஈடுபட்ட மீனவர்களுக்கு அரசு சார்பில் தூத்துக்குடியில் அண்மையில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. ஒருங்கிணைத்த அரசு அலுவலர்களுக்கு, மீன்வளத்துறை சார்பில் சென்னையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பாராட்டு விழாவில் இன்று பங்கேற்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “சமீபத்தில் சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களிலும், தூத்துக்குடி நெல்லை […]
Continue reading …
தமிழக பாஜக அண்ணாமலை “ஜல்லிக்கட்டு போட்டிகளுக்குத் தமிழகத்தில் தடை விதித்ததே ஒட்டுண்ணி மாடல் திமுகதான்” என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து அண்ணாமலை தெரிவித்துள்ளதாவது: “பொய் சொல்வதை மட்டுமே முழு நேரப் பிழைப்பாகக் கொண்டிருக்கிறார் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின். கடந்த முறை ஆளுங்கட்சியாக இருக்கும்போது, யார் எதை நீட்டினாலும் கையெழுத்து போட்டுவிட்டு, டெல்டா பகுதியில் மீத்தேன் எடுக்க, தெரியாமல் கையெழுத்து போட்டுவிட்டேன் என்று மன்னிப்பு கோரிய ஸ்டாலின் தற்போது, துண்டுச் சீட்டில் யார் எதை எழுதிக் கொடுத்தாலும் அப்படியே வாசித்து […]
Continue reading …
காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் குடியரசு தினத்தை ஒட்டி ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிக்க போவதாக அறிவித்துள்ளன. வருகிற 26ம் தேதி குடியரசு தின விழா நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி ஆளுநர் மாளிகை சார்பாக தேநீர் விருந்து அளிக்கப்படவுள்ளது. இதற்காக தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் அறிவித்துள்ளன. ஆளுநர் ஆர்.என் ரவி தமிழக அரசுக்கு […]
Continue reading …
ஆம் ஆத்மி கட்சி பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியில்லை என்று அறிவித்துள்ளது. வருகிற ஏப்ரல் மாதம் நாடாளுமன்ற மக்களவைக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியை தேர்தலில் தோற்கடிக்க, எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா கூட்டணியை உருவாக்கியுள்ளன. ஆனால் அந்த கூட்டணி கட்சிகளின் தலைவர்களிடையே பல்வேறு முரண்பாடுகள் உள்ளதாக பாஜக குற்றம் சாட்டி வருகிறது. இன்று இதனிடையே மேற்கு வங்கத்தில் தனித்து போட்டியிட போவதாக மம்தா பானர்ஜி அறிவித்தார். இதனால் காங்கிரஸ் கட்சி அதிர்ச்சியடைந்துள்ளனர். […]
Continue reading …
நாளை திமுக இளைஞரணி மாநாடு-ன் 2-வது மாநில மாநாடு சேலத்தில் நடைபெறவுள்ளது. INDIA-வின் வெற்றியின் மூலம் பாசிசத்தை வீழ்த்தி பன்முகத்தன்மை காத்திட சேலத்தில் கூடிடுவோம் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டத்தில் உள்ள பெத்த நாயக்கன் பாளையத்தில் நாளை திமுக இளைஞரணி 2 வது மாநில மாநாடு நாளை பிரமாண்டமாக நடக்கிறது. இதில், பங்கேற்பதற்காக இன்று மாலை விமானம் மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதய நிதி ஸ்டாலின் ஆகியோர் சேலம் செல்கின்றனர். […]
Continue reading …