நீதிபதி அபய் எஸ். ஓஹா தலைமையிலான அமர்வில் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடந்தபோது பரபரப்பான வாதம் செய்யப்பட்டது. செந்தில் பாலாஜி தரப்பில் முதலில் இந்த வழக்கு தொடர்பாகக் கைப்பற்றப்பட்ட பென்டிரைவ் போன்றவற்றில் தனது பங்கு எதுவும் இல்லை என்று கூறுகிறது, அது குறித்து முதலில் உங்கள் பதில் என்ன? -என அமலாக்கத்துறைக்கு நீதிபதிகள் கேள்வி கேட்டனர். அதற்கு பென் டிரைவ் கைப்பற்றப்பட்டதில் தனது பங்களிப்பு இல்லை என செந்தில் பாலாஜி கூறுவதை […]
Continue reading …முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்னமும் தோற்கடித்தவர்களை பழிவாங்குவதில் குறியாக இருக்க வேண்டாம் என பிரதமர் மோடிக்கு வலியுறுத்தியுள்ளார். முதலமைச்ர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில், “ஒன்றிய நிதிநிலை அறிக்கையில் ஒருசில மாநிலங்கள் நீங்கலாகப் பல்வேறு மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டிருப்பதைக் கண்டிக்கும் வகையில் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் போராட்டம் நடத்தியுள்ளார்கள். தேர்தல் முடிந்துவிட்டது, இனி நாட்டைப் பற்றியே சிந்திக்க வேண்டும் என்று சொன்னீர்கள், நேற்றைய பட்ஜெட் பாஜக ஆட்சியைக் காப்பாற்றுமே தவிர, இந்திய நாட்டைக் காப்பாற்றாது. அரசை பொதுவாக நடத்துங்கள், இன்னமும் […]
Continue reading …அமைச்சர்கள் மற்றும் முதலமைச்சர் திடீரென போராட்டம் நடத்தியதில் கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடக மாநிலத்தில் மகரிஷி வால்மிகி பழங்குடியினர் வளர்ச்சி ஆணையத்தில் ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு கூறப்பட்டது. இதுகுறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர். இந்த ஊழலில் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவை சம்பந்தபடுத்த அமலாக்கத்துறை அதிகாரிகள் முயற்சி செய்வதாக கூறப்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து முதலமைச்சர் சித்தராமையா திடீரென போராட்டத்தில் ஈடுபட்டார். சட்டசபை வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு […]
Continue reading …மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மத்திய பட்ஜெட், நாற்காலியைக் காப்பாற்றுவதற்கானது என்றும் கூட்டாளிகளை சமாதானப்படுத்தும் பட்ஜெட் என்றும் விமர்சித்துள்ளார். இன்று நாடாளுமன்ற மக்களவையில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. ஏழாவது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பல்வேறு அறிவிப்புகளையும் வெளியிட்டார். குறிப்பாக ஆந்திரா, பீகார் மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எதிர்கட்சிகள் ஆளும் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களுக்கு மத்திய பட்ஜெட்டில் சிறப்பு திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை. ஏற்கனவே கிடப்பில் உள்ள […]
Continue reading …நடிகர் பிரகாஷ்ராஜ் ஆந்திரா, பீகாரை தவிர மற்ற மாநிலங்களுக்கு அல்வா தான் என்று மத்திய பட்ஜெட் குறித்து விமர்சித்துள்ளார். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024- 25-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து பல்வேறு திட்டங்களை அறிவித்தார். மத்திய பட்ஜெட்டில் ஆந்திர மாநில வளர்ச்சிக்கு ரூ.15,000 கோடி சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் பீகாரில் புதிய சாலைகள் அமைப்பது உள்ளிட்ட திட்டங்களுக்கு ரூ.26,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் அவர் அறிவித்தார். இந்த அறிவிப்பைத் […]
Continue reading …அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மத்திய அரசின் பட்ஜெட் ஏமாற்றம் அளிக்கும் வகையில் உள்ளது என்று தெரிவித்துள்ளார். இன்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதில் தமிழகத்திற்கான புதிய திட்டங்களும், நிதி ஒதுக்கீடு தொடர்பான எந்த அறிவிப்புகளும் வெளியிடப்படவில்லை. பட்ஜெட் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “ஒட்டு மொத்த இந்தியாவையும் சமநிலையுடன் ஊக்குவிக்கும் வகையில் பட்ஜெட் இல்லை. மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு எந்தவிதமான […]
Continue reading …முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கை என்பது தமிழ்நாட்டிற்கு இழைக்கப்பட்ட மாபெரும் துரோகம்’ என தெரிவித்துள்ளார். மத்திய பட்ஜெட் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதில் தமிழ்நாட்டிற்கு எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. இது குறித்து முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஒரு நாட்டின் நிதிநிலை அறிக்கை என்பது இந்தியத் திருநாட்டின் அனைத்து மாநிலங்களுக்கும் உரிய பங்கினைப் பகிர்ந்தளித்து நாடு முழுவதும் சமச்சீரான வளர்ச்சியை உருவாக்கிட உதவுவதுடன், நாட்டில் வாழும் கடைக்கோடி மனிதர்களின் வாழ்வை மேம்படுத்தும் கொள்கைப் […]
Continue reading …அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்பட இருப்பதாக ஊடகங்களில் வரும் தகவல் வதந்தியே என்று மறுப்பு தெரிவித்துள்ளார். இன்று திமுக இளைஞரணியின் 45-வது தொடக்க விழா சென்னை தேனாம்பேட்டையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பேசிய உதயநிதி ஸ்டாலின், “நான் துணை முதலமைச்சராக போகிறேன் என பத்திரிகைகளில் கிசுகிசுக்களும், வதந்திகளும் வந்துள்ளதாகவும், அதனை நம்பி, நாமும் அந்த இடத்திற்கு துண்டு […]
Continue reading …சென்னை மேயர் பிரியா திமுக அரசால் தொடங்கப்பட்டது என்பதற்காகவே புதிய தலைமைச் செயலகம் உட்பட அதிமுக ஆட்சியில் முடக்கப்பட்ட திட்டங்கள் எத்தனை எத்தனை என்பதை மக்கள் அறிவர் என்று தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில், “திமுக ஆட்சியில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் அம்மா உணவங்களின் செயல்பாட்டை ஆய்வு செய்த முதல்வரின் பெருந்தன்மையை பாராட்ட எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு மனமில்லை. கட்சி மாச்சரியங்களுக்கு அப்பாற்பட்டு தமிழகத்தின் தனிப் பெருந்தலைவராக, மக்கள் நலன் ஒன்றையே மனதில் வைத்து […]
Continue reading …தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வங்கதேசத்தில் சிக்கியுள்ள தமிழர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் விரைந்து வழங்கிட வேண்டுமென்று அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையரகத்துக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். இது குறித்து அரசு சார்பில் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில், “வங்கதேசத்தில் தற்போது நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக தமிழர்கள் சிலர் தாயகம் திரும்ப இயலாமல் அங்கு சிக்கியிருப்பதாக தகவல்கள் வரப்பெற்றுள்ளன. வங்கதேசத்தில் உள்ள இந்திய தூதரகம் அங்கு உள்ள இந்தியர்களின் பாதுகாப்பை கருதி, உள்ளூர் பயணங்களைத் தவிர்க்கவும், அவர்கள் வசிக்கும் […]
Continue reading …