
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் அரசு பொதுத்தேர்வுக்கான அட்டவணை விபரங்கள் குறித்து என பேட்டியளித்துள்ளார். அவரது பேட்டியில், “வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது, ஆனால் அதே சமயம் பொதுத்தேர்வு நடைபெறுவதற்குள் பாடங்களை முடிக்க வேண்டிய சூழல் இருப்பதால் அதற்கு மாற்று வழிகளை ஆலோசித்து வருகிறோம். அவ்வகையில் மழைக்காலம் முடிந்த பிறகு சனிக்கிழமைகளில் பள்ளிகளை இயக்க உள்ளோம், அரசு பொதுத்தேர்வுக்கான அட்டவணை குறித்த அறிவிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் வெளியாகும்” என்று […]
Continue reading …
வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் இன்னும் 5 நாட்களுக்கு கன மழை பெய்யும் என்று அறிவித்துள்ளது. பருவமழை தொடர்பான நடவடிக்கைகள் குறித்து பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தகவல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “பருவமழையால் உயிர் சேதம் ஏதும் ஏற்படாத நிலையை தமிழ்நாடு அரசு ஏற்படுத்தி உள்ளது. தமிழகம் முழுதும் 400 பேரிடர் மீட்பு படைக்குழு மற்றும் 4967 நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளது. மக்களுக்கு எச்சரிக்கை விடுத்த பின்னரே அணைகளில் இருந்து […]
Continue reading …
விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி விளையாட்டு வகுப்புகளை கடன் வாங்காதீர்கள் என கணித ஆசிரியர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற குழந்தைகள் தின விழாவில் பேசியபோது, “தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு இந்திய அரசுக்கு வழிகாட்டும் வகையில் செயல்பட்டு வருகிறது. இல்லம் தேடி கல்வி முதல் வாசிப்பு இயக்கம் வரை 50க்கும் மேற்பட்ட முன்னெடுப்புகளை பள்ளிக்கல்வித்துறை எடுத்துள்ளது, கணக்கு மற்றும் அறிவியல் ஆசிரியர்கள் விளையாட்டு வகுப்புகளை கடன் […]
Continue reading …
கடந்த ஐந்து நாட்களாக தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். அது மட்டுமின்றி தமிழகத்திலுள்ள முன்னணி கட்டுமான நிறுவனங்களான காசா கிராண்ட் மற்றும் அப்பாசாமி நிறுவனங்களின் அலுவலகங்களில் சோதனை நடந்து வருகிறது. ஒரு பக்கம் சோதனை நடந்து கொண்டிருக்கும் நிலையில் அமைச்சர் எ.வ.வேலு செய்தியாளர்களிடம், “இந்த சோதனைகளுக்கு நாங்கள் பயப்பட மாட்டோம். நாடாளுமன்ற தேர்தல் அச்சம் காரணமாக வருமான வரி சோதனை மூலம் எங்களுக்கு அச்சுறுத்தல் தரப்படுகிறது. காசா […]
Continue reading …
புதுச்சேரியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு தீபாவளியை முன்னிட்டு கூடுதலாக அரிசி மற்றும் சர்க்கரை வழங்கப்பட்டு வருகிறது. அரிசி சர்க்கரைக்கு பதிலாக குடும்ப அட்டைதாரர்களின் வங்கி கணக்கில் 490 ரூபாய் பணம் அனுப்பப்படும் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. புதுச்சேரி குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை இயக்குனர் சத்தியமூர்த்தி புதுச்சேரியில் தீபாவளியை முன்னிட்டு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி சர்க்கரைக்கு பதில் ரூ.490 அவரவர் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என தகவல் தெரிவித்துள்ளார். இதனால் புதுச்சேரியிலுள்ள மக்கள் […]
Continue reading …
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை “தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் இந்து கோயில்களுக்கு முன் உள்ள பெரியார் சிலை அனைத்தும் அகற்றப்படும். இந்து அறநிலையத்துறை கலைக்கப்படும்” என்று கூறியதற்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பதிலளித்துள்ளார். இதுகுறித்து செல்லூர் ராஜூ, “அண்ணாமலை சொன்னதற்காக அறநிலைத்துறை கலைக்க முடியாது, இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சிறப்பாக செயல்படுகிறார். அறநிலைத்துறை தொடர்ந்து செயல்பட வேண்டும், பெரிய கோயில்களின் வருவாயில் தான் சிறிய கோயில்கள் இயங்கி வருகிறது” என்று கூறினார். அதேபோல் […]
Continue reading …
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாகவும், அவர் ஓய்வெடுக்க மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளனர். நேற்று முதல் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இருமல் மற்றும் காய்ச்சல் அறிகுறி தென்பட்டுள்ளதாக தெரிகிறது. மேலும் அவருக்கு வைரஸ் காய்ச்சல் இருப்பதும் இன்று காலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சில நாட்கள் அவர் முழு ஓய்வு எடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.இதனால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஓய்வெடுக்க வாய்ப்பிருப்பதாகவும் அவருடைய முதலமைச்சர் பதவியை உதயநிதி அல்லது வேறு ஒருவருக்கு மாற்ற வாய்ப்பிருப்பதாகவும் அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. […]
Continue reading …
பாஜக பிரபலம் நாராயணன் திருப்பதி ரஞ்சனா நாச்சியார் செய்தது தவறுதான்.. ஆனால் அது தார்மீக கோபத்தினால், மாணவர்களுக்கு ஏதேனும் நடந்து விடக்கூடாது என்ற அக்கறையினால் என கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “ரஞ்சனா நாச்சியார் என்பவர் பேருந்தின் படிக்கட்டுகளிலும், பேருந்தின் கூரையிலும் பயணம் செய்து கொண்டிருந்த மாணவர்களை பதட்டத்தோடு கடிந்து கொண்டதோடு விதிகளை மீறி, சட்டத்திற்கு புறம்பாக மாணவர்களை ஏற்றி சென்ற ஓட்டுநர் மற்றும் நடத்துனரை உணர்ச்சி வசப்பட்டு தகாத வார்த்தைகளால் திட்டியிருந்தாலும் அவை சமூக அக்கறையுடன் […]
Continue reading …
வருமானவரித்துறையினர் இன்று அதிகாலை முதல் அமைச்சர் ஏ.வ.வேலு வீடு மற்றும் அலுவலகம் ஆகியவற்றில் சோதனை செய்து வருகின்றனர். அமைச்சரின் வீடு மட்டுமின்றி இன்னும் ஒரு சில இடங்களிலும் வருமான வரித்துறையினர் சோதனை செய்து வருவதாக கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோவை ராமநாதபுரம் பார்சன் குடியிருப்பு வளாகத்தில் வசிக்கும், அமைச்சர் எ.வ. வேலுவின் உறவினர் மீனா ஜெயக்குமார் இல்லத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருவதாகவும், மீனா ஜெயக்குமாரின் மகன் ஸ்ரீராம் இல்லத்திலும் சோதனை […]
Continue reading …
பாஜக தலைவர் அண்ணாமலை “தமிழகத்தில் மக்களுக்கான ஆட்சி நடக்கிறதா அல்லது சமூக விரோதிகளுக்கான ஆட்சி நடக்கிறதா என்பதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெளிவுபடுத்த வேண்டும்” என கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அண்ணாமலை சமூவலைதளத்தில், “சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் பகுதியில், மணல் கொள்ளையைத் தடுக்கச் சென்ற கிராம நிர்வாக அலுவலர் மீது, மணல் கொள்ளையர்கள் கடுமையான தாக்குதல் நடத்தியுள்ளனர். அதே போல, வேலூர், பொன்னையாற்றில் சட்டவிரோதமாக மணல் அள்ளுவதை வீடியோ எடுத்த, முன்னாள் ராணுவ வீரர் உமாபதியை, சமூக விரோதிகள் […]
Continue reading …