Home » Archives by category » அரசியல் (Page 85)

அமர்பிரசாத் ரெட்டிக்கு நிபந்தனை ஜாமீன்

Comments Off on அமர்பிரசாத் ரெட்டிக்கு நிபந்தனை ஜாமீன்

செங்கல்பட்டு நீதிமன்றம் அமர்பிரசாத் ஜாமீன் மனு மீதான விசாரணையை நாளைக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது. அமர்பிரசாத் ரெட்டி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் வீடு அருகே கொடி வைக்க முயற்சித்தபோது ஏற்பட்ட பிரச்சனையில் கைது செய்யப்பட்டார். அதுமட்டுமின்றி தமிழகத்தில் செஸ் போட்டி நடந்த போது போஸ்டரில் பிரதமர் மோடியின் புகைப்படத்தை ஒட்டியது குறித்து வழக்கிலும், தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி அண்ணாமலை நடைப்பயணத்தின்போது, போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்த வழக்கிலும் அவர் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. […]

Continue reading …

பெண்களுக்கு தீபாவளி சர்ப்ரைஸ்!

Comments Off on பெண்களுக்கு தீபாவளி சர்ப்ரைஸ்!

கடந்த செப்டம்பர் மாதம் மகளிருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது. ஒவ்வொரு மாதமும் 15ம் தேதி இத்திட்டத்தின் பயனாளிகளுக்கு அவர்களது வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டு வருகிறது. இம்மாதம் 12ம் தேதி தீபாவளி பண்டிகை வரவிருப்பதை அடுத்து முன்கூட்டியே பயனாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் வரவு வைக்க தமிழக அரசு திட்டமிட்டு வருவதாகவும் இதுகுறித்து ஆலோசனை செய்யப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. தீபாவளி தினமான 12ம் தேதிக்கு முன்பே பயனாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் வரவு […]

Continue reading …

பாஜகவில் இருந்து விலகிய பிரபல நடிகை!

Comments Off on பாஜகவில் இருந்து விலகிய பிரபல நடிகை!

பாஜகவிலிருந்து பிரபல நடிகையான விஜயசாந்தி விலகி காங்கிரஸில் இணையவுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. நடிகை விஜயசாந்தி “தலைவாசல்” படத்தில் அறிமுகமானவர். சூப்பர் ஸ்டார் படங்களில் நடித்தும், அதிரடி சண்டைக் காட்சிகளில் நடித்தும் தென்னிந்திய சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக புகழ்பெற்றார். இவர் 1997ம் ஆண்டு பாஜகவில் இணைந்து அரசியல் பணியாற்றி வந்தார். சில ஆண்டுகளுக்கு முன்பு சினிமாவிலிருந்து விலகி அவர் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியில் சார்பில் போட்டியிட்டு, 2009ம் ஆண்டு மெதக் தொகுதியில் போட்டியியிட்டு எம்பியானார். […]

Continue reading …

இந்தியா நம் வசம் என முதலமைச்சர் பேச்சு!

Comments Off on இந்தியா நம் வசம் என முதலமைச்சர் பேச்சு!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்தியா முழுவதும் பாஜகவுக்கு எதிரான அலை வீசுகிறது என தெரிவித்துள்ளார். இந்தியா என்ற பெயரில் காங்கிரஸ், திமுக, ஜனதா தளம் உள்ளிட்ட பல கட்சிகள் இணைந்து அடுத்தாண்டு நடைபெற உள்ள பாராளுமன்றத் தேர்தலுக்காக கூட்டணி அமைத்துள்ளன, அனைத்து கட்சிகளும் தேர்தலுக்கு தயாராகி வரும் நிலையில், இன்று முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் திமுக தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், “நாம் உழைப்பது நம் இயக்கத்தின் வெற்றிக்காக மட்டுமல்ல, நாட்டு மக்களின் விடுதலைக்காக. சிஏஜியால் ஊழல் […]

Continue reading …

திரிணாமுல் காங்கிரஸ் பெண் எம்பி ஆவேசம்..!

Comments Off on திரிணாமுல் காங்கிரஸ் பெண் எம்பி ஆவேசம்..!

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் எம்பி மஹுவா மொய்த்ரா “என்னை நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்ற விரும்பும் நபர்களால் என்னுடைய தலைமுடியை கூட தொட முடியாது” என பேட்டியளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா மீது நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க பணம் பெற்றதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அவர் ஆவேசமாக பதில் அளித்துள்ளார். என் மீது பொய்யான குற்றச்சாட்டு சுமத்தி என்னை நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்ற விரும்பும் நபர்களால் எனது தலை முடியை […]

Continue reading …

பிரதமர் மோடி தமிழ்நாடு வருகை!

Comments Off on பிரதமர் மோடி தமிழ்நாடு வருகை!

டிசம்பர் மாதம் பிரதமர் மோடி வரும் தமிழகம் வர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நாடாளுமன்ற தேர்தல் அடுத்தாண்டு நடைபெற இருப்பதையடுத்து பல மாநிலங்களில் பிரதமர் மோடி சுற்றுப்பயணம் செய்து வருகிறார். அவ்வகையில் அடுத்த கட்டமாக வரும் டிசம்பர் முதல் வாரத்தில் பிரதமர் மோடி தமிழக வர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. குலசேகரப்பட்டணம் ராக்கெட் ஏவுதளத்திற்கு அவர் அடிக்கல் நாட்டுவார் என்றும் இது குறித்த விழாவில் கலந்து கொள்வார் என்றும் கூறப்படுகிறது. மேலும் பாம்பன் பாலத்தில் ஒரு பகுதியை […]

Continue reading …

3ம் தேதி காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம்

Comments Off on 3ம் தேதி காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம்

கர்நாடக முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் திறக்க இயலாது என கூறினர். எதோ எதிரி நாட்டு மோதுவது போல நினைக்கிறார்கள் என்று தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். தமிழகத்திற்கு வினாடிக்கு 2600 கன அடி நீர் 15 நாட்களுக்குத் திறக்க காவிரி நீர் ஒழுக்காற்றுக் குழு பரிந்துரை செய்தது. இதற்கு கர்நாடக துணைமுதலமைச்சர் டி.கே. சிவக்குமார் நேற்று, “நீர்வரத்து முற்றிலுமாக நின்றுவிட்டதால், கே.ஆர்.எஸ். கபினி அணைகளில் இருக்கும் தண்ணீர் எங்கள் குடிநீர் தேவைக்கே […]

Continue reading …

ஆளுநர் குறித்து தமிழக அரசு குற்றச்சாட்டு..!

Comments Off on ஆளுநர் குறித்து தமிழக அரசு குற்றச்சாட்டு..!

பல்வேறு விஷயங்களில் செயலற்றவராக இருப்பதன் மூலம் மக்களின் உரிமைகளை ஆளுநர் பறித்து வருகிறார் என தமிழக அரசு குற்றஞ்சாட்டியுள்ளது. தமிழக அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 20க்கும் மேற்பட்ட சட்ட மசோதாக்கள் ஆளுநரிடம் நிலுவையில் உள்ளதாகவும், நீட் விலக்கு மசோதா, சிறைக்கைதிகள் விடுதலை, டிஎன்பிஎஸ்சி தலைவர் நியமனம் உள்ளிட்டவற்றில் எந்த முடிவும் எடுக்கவில்லை என குற்றச்சாட்டு தெரிவித்துள்ளது. மேலும் முக்கியமான விவகாரங்களில் ஆளுநர் உடனுக்குடன் முடிவு எடுப்பதில்லை என தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் தெரிவித்துள்ளதாக […]

Continue reading …

மத்தியமைச்சரை டி.ஆர்.பாலு சந்திக்க என்ன காரணம்?

Comments Off on மத்தியமைச்சரை டி.ஆர்.பாலு சந்திக்க என்ன காரணம்?

திமுக எம்.பி., டி.ஆர்.பாலு இன்று டில்லியில் மத்தியமைச்சர் முரளிதரனை நேரில் சந்தித்தார். முதலமைச்சர் ஸ்டாலின் இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்கக் கோரிக்கை விடுத்தும், மீனவர்கள் பிரச்சனை தொடர்பாக எழுதிய கடிதத்தையும் மத்திய அமைச்சரிடம் திமுக எம்.பி., டி.ஆர்.பாலு வழங்கினார். மேலும் மத்திய அமைச்சருடனான இந்த சந்திப்பின்போது, மீனவர்களின் குடும்பத்தினரும் உடனிருந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமேஸ்வரத்தைச் சேர்ந்த ஐந்து விசைப்படகுகள் மற்றும் அதிலிருந்து மீனவர்களை இலங்கை […]

Continue reading …

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஸ்டாலினை குறித்து விமர்சனம்

Comments Off on முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஸ்டாலினை குறித்து விமர்சனம்

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் “பொய் பேசுவதில் ஆஸ்கார் அவார்டு கொடுக்க வேண்டும் என்றால் அது ஸ்டாலின் அவர்களுக்கு தான் கொடுக்க வேண்டும்” என பேசியுள்ளார். அவர் இதுகுறித்து பேசும்போது, “கொஞ்சம் கூட கூச்சம் இல்லாமல், வாக்குறுதிகளை 100% நிறைவேற்றி விட்டோம் என்று முதலமைச்சர் கூறுகிறார். மக்கள் என்ன நினைப்பார்கள் என்பதை கொஞ்சம் கூட கவலை இல்லாமல் வாய்க்கு வந்தபடி இஷ்டப்படி நூறு சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்று பொய் பேசுகிறார். இது தமிழ்நாட்டின் மக்களின் காதில் […]

Continue reading …