தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிததத்தில், “சமீப வாரங்களில் இலங்கைக் கடற்படையினரா தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் கைது செய்யப்படும் சம்பவங்கள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது கவலையளிக்கிறது. இரண்டு மோட்டார் பொருத்தப்பட்ட நாட்டுப் படகுகளிலும், இரண்டு பதிவு செய்யப்படாத மீன்பிடிப் படகுகளிலும் சென்ற தமிழகத்தைச் சேர்ந்த 25 மீனவர்கள் ஜூலை 1, அன்று […]
Continue reading …பிரதமர் மோடி தேர்தல்களில் தோல்வியடைவதில் காங்கிரஸ் கட்சி உலக சாதனை படைத்துள்ளதாகவும், காங்கிரஸ் கட்சி ஒரு ஒட்டுண்ணியாக மாறிவிட்டது எனவும் விமர்சித்தார். பிரதமர் மோடி மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது பதில் உரையில், “எதிர்க்கட்சிகள் பொய் பரப்பினாலும் அதனை நிராகரித்து மக்கள் தங்கள் மீது நம்பிக்கை வைத்து மீண்டும் தேர்வு செய்துள்ளனர். பாஜகவின் 10 ஆண்டு கால ஆட்சியை பார்த்து நாட்டு மக்கள் தங்களுக்கு ஓட்டு போட்டுள்ளனர். ஏழைகளின் நலனுக்காக எந்தளவுவுக்கு […]
Continue reading …*உ.பி கூட்ட நெரிசல் 122 பேர் பலி* உத்தரபிரதேசம், ஹத்ராஸில் ஆன்மிக வழிபாடு நிகழ்ச்சியில் அதிர்ச்சி சம்பவம் கோயிலில் கூட்டநெரிசலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 122ஆக அதிகரிப்பு . போர்க்கால அடிப்படையில் மீட்பு மற்றும் நிவாரண பணிகளுக்கு உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவு.
Continue reading …மக்களவையில் ராகுல் காந்தி இந்துக்களை அவமதிக்கும் வகையில் பேசியதாக கூறி எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் கடும் அமளியில் ஈடுபட்டனர். மேலும் ராகுல் காந்தி பேசியபோது, பிரதமர் மோடியும், அமித்ஷாவும் குறுக்கிட்டு பேசியதால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்துடன் இன்று மக்களவை கூடியது. விவாதத்தில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, பாஜக 24 மணி நேரமும் வெறுப்பை காட்டி வருகிறது என்று ஆவேசமாக கூறினார். மேலும் ராகுல் […]
Continue reading …இளம் எழுத்தாளர் ஜோசன் ரஞ்சித் எழுதிய மெட்டமார்போசிஸ் ஆங்கில புத்தக வெளியீடு. மத்திய, மாநில அமைச்சர்கள், எம்.பிக்கள் பங்கேற்பு. இளம் எழுத்தாளர் ஜோசன் ரஞ்சித் எழுதிய மெட்டமார்போசிஸ் என்ற ஆங்கில புத்தகத்தை மத்திய அமைச்சர், எம்.பிக்கள் பங்கேற்று வெளியீட்டனர். திருச்சி மாவட்டம், நவலூர் குட்டப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த இளம் எழுத்தாளர் ஜோசன் ரஞ்சித். இவர் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பல்வேறு புத்தகங்களை எழுதியுள்ளார். அதன் தொடர்ச்சியாக மெட்டமார்போசிஸ் என்ற ஆங்கில புத்தகத்தை எழுதி வந்தார். இந்த புத்தகத்தின் […]
Continue reading …கர்நாடகா சாலை விபத்தில் 13 பேர் பலி! கர்நாடகா மாநிலம் ஹாவேரி அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது வேன் மோதிய விபத்தில் 2 குழந்தைகள் உட்பட 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். குலதெய்வ வழிபாட்டுக்கு சென்று திரும்பியபோது சோகம்! வேனில் சென்ற மேலும் 3 பேர் காயங்களுடன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி. விபத்து குறித்து போலீசார் விசாரணை
Continue reading …எம்பிபிஎஸ் மாணவர் ஒருவரை ராகிங் கொடுமை செய்ததில் படுகாயமடைந்துள்ளதார். இதையஅடுத்து ஏழு சீனியர் மாணவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள மருத்துவ கல்லூரி ஒன்றில் இரண்டாம் ஆண்டு படிக்கும் எம்பிபிஎஸ் மாணவர்கள் முதலாம் ஆண்டு மாணவரை ராகிங் கொடுமை செய்ததில் அவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளன. கடந்த மே 15ம் தேதி இந்த ராக்கிங் […]
Continue reading …காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அவதூறு வழக்கில் வரும் ஜூலை 2ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு எதிராக காங்கிரஸ் எம்.பி. ராகுல் கடந்த 2018ம் ஆண்டு நடந்த பொதுக்கூட்டத்தில், ஆட்சேபத்திற்குரிய கருத்துகளை தெரிவித்தார். அவர் மீது கடந்த 2018ம் ஆண்டு பாஜக தலைவர் விஜய் மிஸ்ரா அவதூறு வழக்கு தொடுத்தார். இவ்வழக்கு விசாரணை உத்தரப் பிரதேச மாநிலம், சுல்தான்பூரில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. […]
Continue reading …உத்தராகண்ட் மாநில பாஜக தலைவர் 13 வயது சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து, கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்டார். அவர் தற்போது கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். ஆதித்ய ராஜ் சைனி உத்தராகண்ட் மாநிலத்தின் பாஜக தலைவர்களில் ஒருவரும், ஓபிசி ஆணையத்தின் நியமன உறுப்பினராகவும் இருந்தவர். இன்று அவரை 13 வயது சிறுமியை குழுவாக பாலியல் பலாத்காரம் செய்து, கொன்ற வழக்கில் கூட்டாளியுடன் போலீசார் கைது செய்துள்ளனர். ஹரித்துவாரில் வசிக்கும் 13 வயது சிறுமி காணாமல் போனதாக அந்த […]
Continue reading …முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை தேசிய பத்தாண்டு மக்கள் தொகை கணக்கெடுப்புடன் ஒருங்கிணைத்து, மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு கோரிக்கை வைத்துள்ளார். இது தொடர்பாக பிரதமருக்கு ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், “இந்தியாவில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை உடனடியாக தொடங்க வேண்டும். நான் இதுகுறித்து ஏற்கெனவே 20.10.2023 அன்று கடிதம் எழுதியிருந்ததேன். அதில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்புடன் பத்தாண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பை ஒருங்கிணைத்து […]
Continue reading …