
வங்கதேசத்தில் இடஒதுக்கீட்டுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் நடந்துள்ளது. இதில் ஏற்பட்ட வன்முறை சம்பவங்களால் இதுவரை 17 பேர் பலியாகியுள்ளனர். வங்கதேசத்தில் சுதந்திர போராட்ட தியாகிகளின் குடும்பத்திற்கு அரசு வேலையில் 30 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் சட்டம் அமலில் உள்ளது. ஆனால் இதில் முறைகேடுகள் நடைபெறுவதாக நடந்த வழக்கில் உயர்நீதிமன்றம் இந்த இடஒதுக்கீட்டை ரத்து செய்தது. ஆனால் இதுகுறித்த மேல்முறையீட்டில் அந்நாட்டு உச்சநீதிமன்றம் இட ஒதுக்கீட்டிற்கு மீண்டும் அனுமதி அளித்தது. இதை எதிர்த்து மாணவ அமைப்புகள், எதிர்கட்சிகள் […]
Continue reading …
நாளை ஆன்லைனில் திருப்பதியில் அக்டோபர் மாதம் தரிசனம் செய்ய டிக்கெட் வழங்கப்படும் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளதால் பக்தர்கள் டிக்கெட்டுகளை புக் செய்ய தயாராக இருப்பதாக கூறப்படுகிறது. திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய ஆன்லைனில் முன்கூட்டியே முன்பதிவு செய்து கொள்ளலாம். அவ்வகையில் அக்டோபர் மாதம் தரிசனம் செய்வதற்கான டிக்கெட்டுகளை திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஆன்லைனில் நாளை அதாவது ஜூலை 18ம் தேதி பத்து மணிக்கு வெளியிட உள்ளது. ஆர்ஜித சேவைகளுக்கான டிக்கெட் குலுக்கல் முறையில் வெளியாக […]
Continue reading …
கர்நாடக சட்டமன்றத்தில் கர்நாடகாவில் தனியார் நிறுவனங்களிலும் 100 சதவீதம் கன்னடர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்கான மசோதாவை நேற்று நிறைவேற்றியுள்ளனர். சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி கர்நாடகாவில் நடந்து வருகிறது. கர்நாடகாவில் உள்ள வேலைவாய்ப்புகள் கன்னடர்களுக்கே முழுவதுமாக கிடைக்க வேண்டும் என்று நீண்ட காலமாகவே மக்கள் கூறி வருகின்றனர். தனியார் துறைகளில் மற்ற மாநிலத்தவரை விட கன்னடர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை இருந்து வருகிறது. இது தொடர்பாக நேற்று கர்நாடக சட்டமன்றத்தில் கன்னடர்களுக்கு கட்டாய வேலைவாய்ப்பு வழங்குவதற்கான […]
Continue reading …
600 காலியிடங்களுக்கு ஏர் இந்தியா நிறுவனத்தில் ஆட்கள் தேவை என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த பணிக்காக 25 ஆயிரம் பேர் குவிந்தனர். குஜராத்தில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் 10 பணியிடங்களுக்கு 1,800 பேர் விண்ணப்பம் செய்திருந்தனர். ஒரே நேரத்தில் அனைவரும் வருகை தந்து முண்டியடித்த சம்பவம் குறித்த வீடியோ வெளியாகி வேலையில்லா திண்டாட்டத்தில் நிலைமையை வெளிச்சம் போட்டு காட்டியது. தற்போது மும்பையில் உள்ள ஏர் இந்தியா நிறுவனத்தில் 600 பணியிடங்களுக்கான காலியிடங்கள் நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டது.இந்த பணிக்காக […]
Continue reading …
கர்நாடகா துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் மேகதாது அணை கட்ட தமிழக அரசு அனுமதிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். கர்நாடக அரசு காவிரியின் குறுக்கு மேகதாதுவில் அணை கட்ட முயற்சி செய்து வருகிறது. இதற்கு தமிழக விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேகதாதுவில் அணை கட்டினால் தமிழகத்திற்கு வரும் தண்ணீர் தடுக்கப்படும் என்றும் அணைக்கட்டு அனுமதி அளிக்க கூடாது என்று மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது. மேகதாது அணை கட்ட தமிழக அரசு […]
Continue reading …
ஜம்மு காஷ்மீரில் ராணுவ வீரர்கள் ஐந்து பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். தோடா பகுதியில் ஹெலிகாப்டர்கள் மூலம் பயங்கரவாதிகளை தேடும் பணி நடைபெற்று வருகிறது. ஜம்மு காஷ்மீரின் வடக்கு தோடாவிலுள்ள தேசா வனப்பகுதியில் உள்ள தாரி கோடே உரார்பாகியில் பயங்கரவாதிகள் இருப்பதாக தகவல் கிடைத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, ராஷ்டிரிய ரைபிள்ஸ் மற்றும் ஜம்மு காஷ்மீர் காவல்துறையின் சிறப்பு அதிரடிப்படையினர் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கிசூடு நடந்தது. அதில், 5 பாதுகாப்பு […]
Continue reading …
ஆம் ஆத்மி கட்சி டில்லி முதலமைச்சசர் அரவிந்த் கெஜ்ரிவால் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதற்கு சிறை நிர்வாகம் தான் காரணம் என குற்றஞ்சாட்டியுள்ளது. டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு சில மாதங்களாக ஜாமீன் கிடைக்காமல் உள்ளது. அரவிந்த எதிர்பால் உடல்நிலை மோசமான நிலையை எட்டி இருப்பதாக அவரது கட்சியினர் கூறி வருகின்றனர். இதற்கு சிறை நிர்வாகம் தான் காரணம் என்று குற்றச்சாட்டு கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி […]
Continue reading …
பாஜகவின் பலம் மாநிலங்களவையில் நியமன எம்.பி.க்கள் நான்கு பேர் ஓய்வு பெற்றுள்ளதால் 86ஆக சரிந்துள்ளது. இதனால் மசோதாக்களை தாக்கல் செய்ய அதிமுக உள்ளிட்ட கட்சிகளை நம்பி இருக்க வேண்டிய சூழல் தற்போது உருவாகியுள்ளது. நாடாளுமன்றத்தில் ஒரு மசோதா சட்டமாக வேண்டுமானால், இரண்டு அவைகளிலும் நிறைவேற்ற வேண்டும். கடந்த 10 ஆண்டுகளாக அசுர பலத்தில் இருந்த ஆளும் பாஜக, நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பெரும்பான்மையை இழந்து கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு ஆட்சி அமைத்தது. மாநிலங்களவையிலும் பாஜகவின் […]
Continue reading …
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மருத்துவரின் பெயர் மருத்துவ பணியில் ஆற்றிய சேவைகளைப் பாராட்டும் விதமாக அபுதாபியில் உள்ள ஒரு சாலைக்கு சூட்டப்பட்டுள்ளது. கேரளாவில் பிறந்த ஜார்ஜ் மேத்யூ, திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரியில் படித்து பட்டம் பெற்றார். இவருக்கு திருமணமாகி வல்சா என்ற மனைவியும், மர்யம் என்ற மகளும் உள்ளனர். கடந்த 1967-ம் ஆண்டு டாக்டர் மேத்யூ குடும்பத்துடன் அமீரகத்தில் உள்ள அல் அய்ன் பகுதியில் குடியேறினார். அதன்பின், அங்குள்ள அரசு மருத்துவமனையில் பணியாற்றிய முதல் இந்திய டாக்டர் […]
Continue reading …
சுனிதா வில்லியம்ஸ் உட்பட இருவர் பூமியிலிருந்து விண்வெளிக்கு எப்போது பூமிக்கு திரும்புவார்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது. விண்வெளி மையத்திற்கு கடந்த மாதம் 5ம் தேதி சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் சென்றனர். அவர்கள் ஜூன் 14ம் தேதியே திரும்ப திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் ஹீலியம் கசிவு மற்றும் சில தொழில்நுட்ப காரணங்களால் தற்போது ஒரு மாதத்தை கடந்த நிலையிலும் இன்னும் இருவரும் பூமிக்கு திரும்பவில்லை. விண்வெளியில் இருந்து சுனிதா வில்லியம்ஸ் அனுப்பிய செய்தியில் […]
Continue reading …