
புதுடில்லி, அக் 4: வெளிநாடுகளில் அதிகமான சொத்து குவித்த இந்தியர்களின் பட்டியலில் சச்சின் டெண்டுல்களின் பெயர் இடம்பெற்றுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2015ம் ஆண்டு, உலகளவில் வெளிநாடுகளில் சொத்து வாங்கி குவித்தவர்கள் குறித்து வெளியான பனாமா பேப்பர்ஸ் ஆவணம், உலகையே பரபரக்க செய்தது. இந்நிலையில், தற்போது வெளியாகி உள்ள பண்டோரா பேப்பர்ஸ் என்ற ஆவணம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. சர்வதேச புலனாய்வு பத்திரிக்கையாளர்கள் கூட்டமைப்பு (International Consortium of Investigative Journalists (ICIJ)) மூலம், […]
Continue reading …
லக்கிம்பூர், அக் 4: உத்தர பிரதேசத்தில் கலவரத்தில் பலியானவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூற நேரில் சென்ற பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டுள்ளார். மத்திய அரசின் மூன்று புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, விவசாயிகளின் போராட்டம் நடத்தி வருகின்றனர். நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் விவசாயிகள் தங்கள் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். உத்தர பிரதேசத்தில் உள்ள லக்கிம்பூர் கேரி மாவட்டத்திலும், விவசாயிகள் இத்தகைய போராட்டத்தில் தீவிரமாக பங்கேற்று வருகின்றனர். இந்த மாவட்டத்தின் திகுனியா அருகே உள்ள […]
Continue reading …
புதுடெல்லி, அக் 4: நம் நாட்டில், கடந்த ஒரே நாளில், 20,799 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில், கடந்த 24 மணி நேரத்தில், கொரோனாவால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து, மத்திய சுகாதாரத் துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில், “நாட்டில், கடந்த 24 மணி நேரத்தில், 20,799 பேர், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். 26,718 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். இதையடுத்து, கொரோனாவில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை, 3,31,21,247ஆக அதிகரித்துள்ளது. கடந்த ஒரே நாளில், […]
Continue reading …
இந்திய யோகா சங்கத்தின் நிர்வாகக் குழு, இச் சங்கத்தின் உச்ச அமைப்பாகும். இதில் காயத்ரி பரிவாரின் டாக்டர் பிரணவ் பாண்டியா, ஈஷா அறக்கட்டளையின் நிறுவனராகிய சத்குரு ஜக்கி வாசுதேவ், சாந்தா குரூஸ் யோகா நிறுவனத்தின் டாக்டர் ஹன்சா யோகேந்திரா, ரிஷிகேஷ் பரமார்த் நிகேதனின் சுவாமி சித்தானந்த் சரஸ்வதி, கைவல்யதாமா யோகா நிறுவனத்தின் தலைவராக தற்போது உள்ள எஸ். ஓபி திவாரி, சஹாஜ் மார்க்கின் கமலேஷ் பட்டேல், மோக்ஷயாதன் யோக சன்ஸ்தானின் சுவாமி பாரத் பூஷன் மற்றும் மொரார்ஜி […]
Continue reading …
புதுடெல்லி, அக் 2: மகாத்மா காந்தியின், 153வது பிறந்தநாளை முன்னிட்டு, குடியரசு தலைவர், துணை குடியரசு தலைவர், பிரதமர் ஆகியோர், காந்தியின் நினைவிடத்திற்கு நேரில் சென்று மலர்தூவி மரியாதை செலுத்தினர். தேச பிதா மகாத்மா காந்தியின் 153வது பிறந்த நாள் விழா, இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, அவருக்கு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள், பொதுமக்கள், என பலரும் மரியாதை செலுத்தி வருகின்றனர். டெல்லியின் ராஜ்காட்டில் அமைந்துள்ள காந்தியின் நினைவிடத்தில், குடியரசு தலைவர் ராம் நாத் […]
Continue reading …
புதுடெல்லி, அக் 1: நம் நாட்டில், கடந்த ஒரே நாளில், 24,354 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில், கடந்த 24 மணி நேரத்தில், கொரோனாவால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து, மத்திய சுகாதாரத் துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில், “நாட்டில், கடந்த 24 மணி நேரத்தில், 24,354 பேர், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை, 3,37,91,061 ஆக உயர்ந்துள்ளது. 25,455 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். இதையடுத்து, கொரோனாவில் […]
Continue reading …
கொச்சின் துறைமுகத்தில் 15 நாள் தூய்மை பணி கடந்த செப்டம்பர் மாதம் 16ம் தேதி முதல் 30ம் தேதி வரை மேற்கொள்ளப்பட்டது. பணி செய்யும் இடங்கள், அலுவலக வளாகங்கள், படகுகள் மற்றும் இழுவை படகுகள், துறைமுகத்தின் பொது பகுதிகளை ஊழியர்கள் சுத்தம் செய்தனர். இதன் நிறைவு நாளான நேற்று, துறைமுக பகுதிக்குள் தூய்மையை பராமரிக்க ஊழியர்கள் மற்றும், வில்லிங்டன் தீவு பகுதியில் உள்ள இரண்டு மாநகராட்சி வார்டு ஊழியர்களுக்கு தூய்மை படுத்துவதற்கான உபகரணங்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியை கொச்சி துறைமுக கழக […]
Continue reading …
தொலை தொடர்புத்துறை செயலாளராக இருந்த அன்சு பிரகாஷ் ஐ.ஏ.எஸ்., நேற்றுடன் ஒய்வு பெற்றதையடுத்து, புதிய செயலாளராக கே.ராஜாராமன் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். இதற்கு முன்பாக இவர், மத்திய நிதியமைச்சக்தின் பொருளாதார விவகாரத்துறையில் கூடுதல் செயலாளராக பணியாற்றினார். கடந்த 1989 ஆண்டு தமிழக பிரிவு ஐ.ஏ.எஸ்., அதிகாரியான இவர், மத்திய அரசின் பல பதவிகளை வகித்துள்ளார். தமிழக அரசிலும், சென்னை மெட்ரோ ரயில்வே நிறுவன நிர்வாக இயக்குனர், வணிகவரித்துறை ஆணையர் உட்பட பல பதவிகளை வகித்துள்ளார்.
Continue reading …
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, நாட்டு மக்களுக்கு குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள செய்தியில் கூறியிருப்பதாவது: ‘‘தேசத்தந்தை – மகாத்மா காந்தியின் பிறந்த தினத்தை முன்னிட்டு, நாட்டு மக்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்’’ அநீதிக்கு எதிராக புதிய போராட்ட வழியை, மகாத்மா காந்தி காட்டினார் – அது உண்மை மற்றும் அகிம்சை மற்றும் இது மனிதகுலத்தின் மீது ஒரு நிரந்தர முத்திரையை விட்டுச்சென்றது. சத்தியாகிரகம் மற்றும் அகிம்சை முறையில், […]
Continue reading …
சோபியன், அக் 1: ஜம்மு – காஷ்மீரில், பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டான். ஜம்மு – காஷ்மீரின் சோபியன் மாவட்டத்தில், பயங்கரவாதிகள் சிலர் பதுங்கி இருப்பதாக, போலீசாருக்கு ரகசிய தகவல்கள் கிடைத்தன. இதையடுத்து, அப்பகுதியில், போலீசாரும், பாதுகாப்புப் படையினரும் இணைந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் சிலர், பாதுகாப்புப் படையினர் மீது திடீர் தாக்குதல் நடத்தினர். இதற்கு, நம் வீரர்கள் தக்க பதிலடி கொடுத்தனர். பின், […]
Continue reading …