Home » Archives by category » இந்தியா (Page 124)

இந்தியாவில் 201 நாட்களுக்குப் பின் குறைந்த கொரோனா பாதிப்பு

Comments Off on இந்தியாவில் 201 நாட்களுக்குப் பின் குறைந்த கொரோனா பாதிப்பு

புதுடெல்லி, செப் 28: நம் நாட்டில், 201 நாட்களுக்குப் பின், கொரோனாவால் ஏற்படும் தினசரி பாதிப்புகளின் எண்ணிக்கை, 20,000க்கும் கீழ் பதிவாகி உள்ளது. இந்தியாவில், கொரோனா வைரசால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை, குறைந்து காணப்படுகிறது. இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில், கொரோனாவால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து, மத்திய சுகாதாரத் துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில்: நாட்டில், கடந்த 24 மணி நேரத்தில், 18,795 பேர், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை, […]

Continue reading …

மத்திய அமைச்சருடன் தமிழக வனத்துறை அமைச்சர் சந்திப்பு

Comments Off on மத்திய அமைச்சருடன் தமிழக வனத்துறை அமைச்சர் சந்திப்பு

புதுடெல்லி, செப் 28: மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவை, தமிழ்நாடு அரசின் வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் நேற்று சந்தித்துப் பேசினார். டெல்லிக்கு அரசுமுறைப் பயணமாக சென்றுள்ள தமிழ்நாடு அரசின் வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தனின்பேரில், மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவை நேற்று (27.09.2021) சந்தித்தார். சரம் சக்தி பவனில் நடந்த இந்த சந்திப்பில், தமிழ்நாடு அரசின் […]

Continue reading …

வலுவிழக்கும் ‘குலாப்’ புயல்: வானிலை ஆய்வு மையம் தகவல்

Comments Off on வலுவிழக்கும் ‘குலாப்’ புயல்: வானிலை ஆய்வு மையம் தகவல்

புதுடெல்லி, செப் 27: ‘மேற்கு நோக்கி நகர்ந்து வரும் ‘குலாப்’ புயல், அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும்’ என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த ‘குலாப்’ புயல், ஆந்திரா மற்றும் ஒடிசா இடையே நேற்று இரவு கரையை கடந்தது. இதன் காரணமாக கடலோர பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. பல இடங்களில் மரங்கள், மின்கம்பங்கள் வேரோடு விழுந்தன. பின், இந்த புயல் ஒடிசாவின் கோராபுட் மாவட்ட கடல் […]

Continue reading …

வேளாண் சட்டங்களுக்கு எதிராக முழு அடைப்பு போராட்டம்

Comments Off on வேளாண் சட்டங்களுக்கு எதிராக முழு அடைப்பு போராட்டம்

புதுடெல்லி, செப் 27: வேளாண் சட்டங்களை திரும்பப்பெறக்கோரி, நாடு முழுவதும் விவசாய சங்கங்கள் சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது. மத்திய அரசின் மூன்ற் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த ஆண்டு முதல், விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். குறிப்பாக, டில்லி எல்லைப் பகுதியில், பஞ்சாப், ஹரியானா, பீஹார், உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள், தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், அந்த மூன்று வேளாண் சட்டங்களுக்கும் எதிர்ப்பு தெரிவித்து, […]

Continue reading …

இந்தியாவில் 26,041 பேர் கொரோனாவால் பாதிப்பு

Comments Off on இந்தியாவில் 26,041 பேர் கொரோனாவால் பாதிப்பு

புதுடெல்லி, செப் 27: நம் நாட்டில், கடந்த ஒரே நாளில், 26,041 பேர், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில், கொரோனா வைரசால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை, குறைந்து காணப்படுகிறது. இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில், கொரோனாவால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து, மத்திய சுகாதாரத் துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில்: நாட்டில், கடந்த 24 மணி நேரத்தில், 26,041 பேர், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். 29,621 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். கடந்த ஒரே நாளில், […]

Continue reading …

புதிய பாராளுமன்ற கட்டுமான பணிகளை பிரதமர் நேரில் ஆய்வு

Comments Off on புதிய பாராளுமன்ற கட்டுமான பணிகளை பிரதமர் நேரில் ஆய்வு

புதுடெல்லி, செப் 27: டெல்லியில் புதிதாக கட்டப்பட்டு வரும் பாராளுமன்ற கட்டிடத்தின் கட்டுமான பணிகளை பிரதமர் மோடி நேற்று இரவு நேரில் சென்று ஆய்வு செய்தார். தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் பாராளுமன்ற கட்டிடத்தில், போதிய இடவசதி இல்லாததால், புதிய பாராளுமன்ற கட்டிடத்தை கட்ட மத்திய அரசு முடிவு செய்தது. இதற்காக சென்ட்ரல் விஸ்டா திட்டத்தை உருவாக்கி அதன் கட்டுமான பணிகளை மத்திய அரசு தொடங்கி உள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், பழைய பாராளுமன்ற கட்டிடத்துக்கு அருகிலேயே, ரூ.971 […]

Continue reading …

திருச்சி என்.ஐ.டி : 57 வது பட்டமளிப்பு விழா!

Comments Off on திருச்சி என்.ஐ.டி : 57 வது பட்டமளிப்பு விழா!

25.09.2021: டாட்டா ஸ்டீல் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநரும், இந்திய தொழில்நிறுவனக் கூட்டமைப்பின் தலைவருமான  டி.வி. நரேந்திரன், தேசிய தொழில்நுட்ப கழகம், திருச்சிராப்பள்ளியின் (என்.ஐ.டி திருச்சி)  57 வது பட்டமளிப்பு விழாவில் உரையாற்றினார். அவர் உரையாற்றுகையில், கற்றலுக்கு முடிவே இல்லை; ஒருவர் தனது வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் கற்றுக்கொண்டே இருக்கின்றார் என்றார், அவர் மாணவர்களை விடாமுயற்சியுடன் தங்கள் கனவுகளைத் தொடருமாறு கூறினார். அவர் மாணவர்களை உறவுகளை கட்டமைக்கவும்,வளர்க்கவும், அவைளிடமிருந்து கற்றுக்கொள்ளவும் வலியுறுத்தினார். தான் […]

Continue reading …

சாதிவாரி கணக்கெடுப்பு சாத்தியமானது, அவசியமானது, தவிர்க்கவே முடியாதது – பா.ம.க. நிறுவனர் இராமதாஸ்!

Comments Off on சாதிவாரி கணக்கெடுப்பு சாத்தியமானது, அவசியமானது, தவிர்க்கவே முடியாதது – பா.ம.க. நிறுவனர் இராமதாஸ்!

இந்தியாவில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பை சாதிவாரியாக நடத்துவதில் பல்வேறு சிக்கல்கள் இருப்பதாகவும், அத்தகைய கணக்கெடுப்புகளின் மூலம் துல்லியமான விவரங்களைத் திரட்ட முடியாது என்றும் மத்திய அரசு கூறியிருக்கிறது. அதுமட்டுமின்றி, சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவதில்லை என்று 1951-ஆம் ஆண்டே கொள்கை முடிவு எடுக்கப்பட்டு விட்டதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய அரசின் இந்த நிலைப்பாடு காலத்திற்கு சற்றும் பொருந்தாதது ஆகும். 2021-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பாக நடத்த ஆணையிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் மராட்டிய அரசு […]

Continue reading …

யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியீடு: ஐ.ஐ.டி., பட்டதாரி முதலிடம்

Comments Off on யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியீடு: ஐ.ஐ.டி., பட்டதாரி முதலிடம்

புதுடெல்லி, செப் 25: யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வில் மும்பை ஐ.ஐ.டி. இன்ஜினியரிங் பட்டதாரி சுபம்குமார் முதலிடம் பிடித்துள்ளார். ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட பதவிகளுக்கு அதிகாரிகளை தேர்வு செய்வதற்கான யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்துகிறது. இது முதல் நிலை தேர்வு, பிரதான தேர்வு, நேர்முகத் தேர்வு என்று 3 கட்டங்களாக நடத்தப்படுகிறது. 2020ம் ஆண்டுக்கான சிவில் சர்வீஸ் தேர்வு, கடந்த ஆண்டு அக்டோபர் 4ம் தேதி நடைபெற்றது. இத்தேர்வை நாடு […]

Continue reading …

இந்தியாவில் 29,616 பேர் கொரோனாவுக்கு பாதிப்பு

Comments Off on இந்தியாவில் 29,616 பேர் கொரோனாவுக்கு பாதிப்பு

புதுடெல்லி, செப் 25: நம் நாட்டில், கடந்த ஒரே நாளில், 29,616 பேர், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில், கொரோனா வைரசால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை, குறைந்து காணப்படுகிறது. இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில், கொரோனாவால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து, மத்திய சுகாதாரத் துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில்: நாட்டில், கடந்த 24 மணி நேரத்தில், 29,616 பேர், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். 28,046 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். கடந்த ஒரே நாளில், […]

Continue reading …