
ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், “தேர்தல் முடிந்து விட்டது, புதிய அரசும் அமைத்தாகிவிட்டது, இனி மக்களுக்கான பணிகளை செய்ய வேண்டும்” என்று தெரிவித்திருந்தார். குறிப்பாக மணிப்பூரில் உள்ள பிரச்சனையை உடனடியாக தீர்க்க மத்திய அரசு கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அவர் அறிவுறுத்திருந்தார். மத்திய அரசு ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகாவத்தின் அறிவுரையை ஏற்று தற்போது மணிப்பூர் விவகாரத்தில் சுமூகமான தீர்வு காண நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளன. மணிப்பூரில் கடந்த ஒரு […]
Continue reading …
காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் அவற்றின் செயல்முறைகளின் முழுமையான வெளிப்படைத்தன்மையை தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும் அல்லது அவற்றை ஒழிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். ராகுல் காந்தி இதுகுறித்து எக்ஸ் தளத்தில், “ஜனநாயக நிறுவனங்கள் கைப்பற்றப்படும்போது, மக்களுக்கு இருக்கும் ஒரே பாதுகாப்பு வெளிப்படையான தேர்தல் முறை மட்டுமே. வாக்குப்பதிவு இயந்திரம் தற்போது கருப்பு பெட்டியாக உள்ளது. வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் அவற்றின் செயல்முறைகளின் முழுமையான வெளிப்படைத்தன்மையை தேர்தல் ஆணையம் உறுதி […]
Continue reading …
அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் பிரதமர் நரேந்திர மோடியின் கால்களில் விழுந்தது, பீகாரை அவமானப்படுத்தியுள்ளதாக விமர்சித்துள்ளார். மக்களவைத் தேர்தலில் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி 12 இடங்களை வென்று, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது. கடந்த வாரம் டில்லியில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணி கூட்டத்தில் நிதிஷ்குமார், பிரதமர் மோடியின் கால்களில் விழப் போனார். அப்போது அவரை பிரதமர் மோடி தடுத்து நிறுத்தினார். இச்சம்பவத்தை குறிப்பிட்டு, […]
Continue reading …
ஜி7 மாநாட்டில் பிரதமர் மோடி செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை ஆக்கப்பூர்வமாக உருவாக்க வேண்டும், அது அழிவிற்கு காரணமாக இருந்து விடக்கூடாது வலியுறுத்தி உள்ளார். பிரதமர் மோடி இத்தாலி பிரதமர் ஜியார்ஜியா மெலோனி அழைப்பை ஏற்று இத்தாலி சென்றார். போப் பிரான்சிஸ், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோன், உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி உள்ளிட்ட பல நாட்டுத் தலைவர்களை அவர் சந்தித்து பேசினார். போப் பிரான்சிஸை பிரதமர் மோடி ஆரத்தழுவி தனது அன்பை […]
Continue reading …
பறவைக்காய்ச்சல் கேரளாவில் கோழி, வாத்து போன்ற பறவைகளுக்கு கண்டறியப்பட்டது. தற்போது முதன்முறையாக காகங்களுக்கும் பறவைக்காய்ச்சல் உறுதியாகியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆண்டுதோறும் கேரளாவில் கோழி, வாத்துகளுக்கு பறவைக்காய்ச்சல் பரவுவதும் அதை தொடர்ந்து அவற்றை அழித்து பறவைக்காய்ச்சலை கட்டுப்படுத்துவதும் நீண்ட காலமாக நடந்து வருகிறது. இதுபோன்ற பறவைக்காய்ச்சல் நேரடியாக மனிதர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது என நம்பப்பட்டது. மெக்ஸிகோவில் முதியவர் ஒருவர் பறவைக்காய்ச்சல் தாக்கி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் பறவைகளிடமிருந்து இது மனிதர்களுக்கு தொற்றுவதற்கான வாய்ப்புகளும் உள்ளதை […]
Continue reading …
ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மூத்த தலைவர் இந்திரேஷ் குமார் பா.ஜ.க. தனிப்பெரும்பான்மை பெற முடியாமல் 241 இடங்களில் சுருங்கியதற்கு அக்கட்சி தலைவர்களின் ஆணவப்போக்கே காரணம் என்று விமர்சித்துள்ளார். 2014-ல் 282 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்து, 2019 தேர்தலில் 303 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைத்து கொண்டது. மேலும் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் 241 தொகுதிகளில் மட்டுமே வெற்றிப் பெற்றது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அருகே கனோட்டாவில் நடைபெற்ற ‘ராமரத் அயோத்தி யாத்ரா தர்ஷன் […]
Continue reading …
இன்று ஆந்திர பிரதேசத்தில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான அமைச்சரவையின் இலாக்கா அறிவிக்கப்பட்டுள்ளது. ஆந்திராவின் துணை முதல்வராக ஜனசேனா கட்சியின் தலைவர் பவன் கல்யாண் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பஞ்சாயத்து ராஜ், ஊரக வளர்ச்சித் துறை, ஊரக குடிநீர் விநியோகம், வனத்துறை, சுற்றுச்சூழல், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆந்திர முதலமைச்சரபாபு நாயுடுவின் மகன் நர லோகேஷ் அவர்களுக்கு மனித வள மேம்பாட்டு துறை, தொழில்நுட்பம் மற்றும் எலக்ட்ரானிக் துறை ஆகியவை ஒதுக்கப்பட்டுள்ளது.
Continue reading …
நேற்று குவைத்தில் நடந்த தீ விபத்தில் 41 பேர் பலியாகி உள்ளனர். இதில் பலரும் இந்தியர்கள் என்று கூறப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. மத்திய அமைச்சர் குவைத் விரைவதாகும் அங்கு மீட்பு பணியை அவர் பார்வையிட போவதாகவும் கூறப்படுகிறது. குவைத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக இந்தியர்கள் உட்பட 41 பேர் பலியாகினார். தூங்கிக் கொண்டிருக்கும் போது புகையை சுவாசித்ததால் இறந்ததாக கூறப்படுகிறது. இவர்களில் பெரும்பாலானோர் கேரளாவைச் சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது. குவைத்தில் உள்ள இந்திய தூதரகம் […]
Continue reading …
அரசியல் வல்லுநர் பிரசாந்த் கிஷோர் “அதிமுக இடத்தை வருங்காலத்தில் பாஜக பிடிக்கும். பாஜக உள்ளே நுழையக்கூடாது என்று கூறும் கட்சிகள் இதை கவனித்துக் கொள்ள வேண்டும்” என்று கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பிரசாந்த் கிஷோ “பாஜக தென்னிந்தியாவில் வேகமாக வளரும் என்று நான் இரண்டு வருடங்களுக்கு முன்பே கூறினேன், அதுதான் தற்போது நடந்துள்ளது. ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் பாஜக நல்ல வாக்கு சதவீதத்தை பெற்றுள்ளது, ஒரிசாவிலும் வளர்ந்துள்ளது, கேரளாவின் ஒரு எம்பி பெரும் அளவுக்கு பாஜக […]
Continue reading …
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அல்லது வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் தமிழிசையிடம் நடந்து கொண்டது போன்று உள்துறை அமைச்சர் அமித்ஷா நடந்து கொள்வாரா என்று திமுக எம்பி தயாநிதிமாறன் கேள்வி எழுப்பியுள்ளார். அமித்ஷாவுக்கு தமிழிசை ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் பதவியேற்பு விழாவில் வணக்கும் சொல்லிவிட்டுச் செல்லும்போது, அமித்ஷா உடனே அவரை அழைத்து கடுமையாகக் கண்டிக்கிறார். பதிலுக்குத் தமிழிசை எதோ கூற வரும்போது அதனை மறுத்து அமித்ஷா பேசும் வீடியோ வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. […]
Continue reading …