
அமலாக்கத் துறை டில்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்ததால் வழக்கு விசாரணையை வரும் 14ம் தேதிக்கு ஒத்திவைத்து டில்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரவிந்த் கெஜ்ரிவால் டில்லியில் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில், அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு, டில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மக்களவை தேர்தல் பிரச்சாரத்திற்காக அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 21 நாட்கள் இடைக்கால ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. தேர்தல் பிரச்சாரம் முடிவடைந்து கடந்த 2ம் தேதி […]
Continue reading …
சந்திரபாபு நாயுடு மனைவியின் சொத்து மதிப்பு 5 நாளில் 579 கோடியாக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. ஆந்திர மாநிலத்தில் ஆட்சியைப் பிடித்துள்ள சந்திரபாபு நாயுடுவின் மனைவி நாரா புவனேஸ்வரி வைத்திருக்கும் சில நிறுவனங்களில் பங்குகள் மிகப்பெரிய அளவில் உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. ஜூன் ஒன்றாம் தேதி தேர்தல் கருத்துக்கணிப்பு வெளியான போது அவர் வைத்திருந்த பங்குகளின் விலை கணிசமாக உயர்ந்ததாகவும், வாக்கு எண்ணிக்கையின் போது அனைத்து நிறுவனங்களின் பங்குகள் சரிந்தும் கூட புவனேஸ்வரி நிறுவனத்தின் […]
Continue reading …
ஆந்திர முதல்வராக பதவியேற்க இருக்கும் சந்திரபாபு நாயுடுவும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகிய இருவரும் ஏற்கனவே பல ஆண்டுகால நண்பர்கள். சந்திரபாபு நாயுடு மீண்டும் ஆட்சியை பிடித்ததற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைத்தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த வாழ்த்துக்கு சந்திரபாபு நாயுடு நன்றி என கூறியிருந்தார். பாஜக கூட்டணி 293 தொகுதிகள் பெற்றிருந்தாலும் பாஜக தனித்து ஆட்சி அமைக்க வாய்ப்பு இல்லை என்பதும் கூட்டணி கட்சிகளின் ஆதரவில் தான் ஆட்சி அமைக்க வேண்டும் என்ற நிலையில் […]
Continue reading …
ஆட்சி அமைக்கிறது பா.ஜ.க. *பிரதமர் மோடி இல்லத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பா.ஜ.க. ஆட்சியமைப்பதற்கான ஆதரவு கடிதங்களை நிதிஷ் சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்கள் வழங்கியுள்ளனர்.*
Continue reading …
இன்று காலை முதல் நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளிவந்து கொண்டிருக்கிறது. பாஜக தனித்து ஆட்சியமைக்க வழி இல்லை என்பதால் பங்குச்சந்தை படுமோசமாக சரிந்துள்ளது. இதனால் முதலீட்டாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர் பாஜக கூட்டணி 295 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி 233 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளது. காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய இரண்டு கட்சிகளுமே தனித்து ஆட்சி அமைக்க வழி இல்லை என்றும் கூட்டணி ஆட்சிக்கு மட்டுமே சாத்தியம் என்பதும் தெரிய வந்துள்ளது. இதனை அடுத்து பங்குச்சந்தை இன்று காலை […]
Continue reading …
பாராளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் ஆந்திர மாநிலத்தில் நடைபெற்றது. சட்டமன்ற தேர்தலில் ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி படுதோல்வியடைந்ததை அடுத்து முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளது. ஆந்திர சட்டசபை தேர்தலில் முடிவின்படி தெலுங்கு தேசம் கட்சி 133 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளன. ஜனசேனா கட்சி 21 தொகுதிகளிலும் பாஜக எட்டு தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன. இந்த மூன்று கட்சிகளும் கூட்டணியாக போட்டியிட்டன. ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி வெறும் 13 தொகுதிகளில் […]
Continue reading …
பாஜக சார்பில் இமாச்சல பிரதேசத்தில் போட்டியிட்ட கங்கனா ரனாவத் வெற்றி பெற்றுள்ளார். அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என பேச்சுகள் எழுந்துள்ளது. இந்தியாவில் உள்ள 543 தொகுதிகளுக்கான தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இன்று வாக்குகள் எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. பிரபல இந்தி நடிகையான கங்கனா ரனாவத் பல ஆண்டுகளாக பாஜகவுக்கு ஆதரவான கருத்துகளை தொடர்ந்து பேசி வந்தவர். இம்முறை தேர்தலில் பாஜக சார்பில் அவரது சொந்த மாநிலமான இமாச்சல பிரதேசத்தில் மண்டி தொகுதியில் போட்டியிட்டார். […]
Continue reading …
தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மக்களவை தேர்தலில் கருத்துக்கணிப்பில் தவறான முடிவை வெளியிட்டதற்காக கருத்துக்கணிப்பு நிபுணர் கதறி அழுத சம்பவம் தற்போது வைரலாகியுள்ளது. 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் நடந்து முடிந்து இன்று முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. கடந்த 1ம் தேதி 7வது கட்ட தேர்தலும் முடிந்த கையோடு பல கருத்துக்கணிப்பு நிறுவனங்களும் இந்தியாவில் பாஜக, காங்கிரஸ் கூட்டணிகள் எவ்வளவு இடங்களில் வெற்றிபெறும், யார் ஆட்சி அமைப்பார்கள் என்பது குறித்த கருத்துக்கணிப்புகளை வெளியிட்டு வந்தனர். அவ்வாறாக கருத்துக்கணிப்பில் ஈடுபட்டு ஆக்ஸிஸ் […]
Continue reading …
இன்று நடந்து முடிந்த வாக்கு எண்ணிக்கையில் பாஜக கூட்டணி 293 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி 233 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன. பாஜக தனித்து ஆட்சி அமைக்க முடியாத நிலையில் கூட்டணி ஆட்சி தான் அமைக்க வேண்டி உள்ளது. ஆனால் அதே நேரத்தில் இந்தியா கூட்டணியில் உள்ள தலைவர்கள் சிலர் பாஜக கூட்டணியில் உள்ள தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக சந்திரபாபு நாயுடு உடன் காங்கிரஸ் கட்சியின் தலைவர் கார்கே பேச்சுவார்த்தை நடத்தினார். அவர் வெற்றி […]
Continue reading …