Home » Archives by category » இந்தியா (Page 162)

ஓய்வூதியதாரர்களுக்கு ரூ.764 கோடி பட்டுவாடா!

Comments Off on ஓய்வூதியதாரர்களுக்கு ரூ.764 கோடி பட்டுவாடா!
ஓய்வூதியதாரர்களுக்கு ரூ.764 கோடி பட்டுவாடா!

புது டெல்லி,மே 05 ஊழியர் வருங்கால வைப்பு நிதித் திட்டத்தின் கீழ் 65 லட்சம் ஓய்வூதியதாரர்கள் உள்ளனர். நாடெங்கும் அமலில் இருக்கும் கொரோனா வைரஸ், முடக்க நிலையினால் ஓய்வூதியதாரர்களுக்கு சிக்கல் ஏதும் ஏற்படக்கூடாது என்ற நோக்கத்தில், ஏப்ரல் 2020 மாதத்திற்கான ஓய்வூதியத்தை முன்னதாகவே அளிக்க, ஊழியர் வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தின் 135 கள அலுவலகங்களும் நடவடிக்கை எடுத்துள்ளன. எல்லாப் பிரச்சனைகளையும் சமாளித்து, இந்த அலுவலகத்தின் அலுவலர்களும், பணியாளர்களும், இந்தியா முழுவதும் உள்ள ஓய்வூதியம் பட்டுவாடா செய்யும் வங்கிகளுக்கு […]

Continue reading …

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு நிவாரணப் பொருட்கள் விநியோகம்!

Comments Off on புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு நிவாரணப் பொருட்கள் விநியோகம்!
புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு நிவாரணப் பொருட்கள் விநியோகம்!

புது டெல்லி,மே 05 கொரரோனா தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்த பொது ஊரடங்கு தொடர்வதால், மத்திய அரசின் பல்வேறு கட்டுமான நிறுவனங்களில் பணிபுரிந்து வந்த ஏராளமான தொழிலாளர்கள் பல இடங்களில் தவித்து வருகின்றனர். அவர்களது சிரமத்தைக் குறைக்கும் வகையில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கான மத்திய துணைத் தலைமை தொழிலாளர் நல ஆணையர் பல்வேறு தீவிர நடவடிக்கைகளை எடுத்துள்ளார். தமிழகத்தில், சென்னை முதல் கன்னியாகுமரி வரை, 59 பணியிடங்களில் வேலை பார்த்து வந்த மொத்தம் 20,054 தொழிலாளர்கள் கண்டறியப்பட்டனர். அவர்கள் அனைவரும் வேறு  மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். […]

Continue reading …

சர்தார் பட்டேல் விருது: விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம்!

Comments Off on சர்தார் பட்டேல் விருது: விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம்!
சர்தார் பட்டேல் விருது: விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம்!

புது டெல்லி,மே 04 தேசிய  ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கு பங்களிப்பவர்களுக்கான மிக உயரிய சிவில் விருதாக சர்தார் படேல் தேசிய ஒற்றுமை விருதை, சர்தார் வல்லபாய் படேலின் பெயரில் மத்திய அரசு நிறுவியது. இந்தத் துறையில் எழுச்சியூட்டும் வகையில் குறிப்பிடத்தகுந்த பங்களித்திருக்கும் தனி நபர்கள், நிறுவனங்கள் அல்லது அமைப்புகளை அங்கீகரித்து, வலிமையான, ஒற்றுமையான இந்தியாவின் மதிப்பை வலுப்படுத்துவது இந்த விருதின் நோக்கமாகும். இந்த விருதுக்கான நியமனங்கள்/பரிந்துரைகளை வரவேற்று 20 செப்டம்பர், 2019 அன்று ஒரு அறிவிக்கை வெளியிடப்பட்டது. https://nationalunityawards.mha.gov.in என்னும் […]

Continue reading …

இடம் பெயர்ந்த தொழிலாளர்களிடம் ரயில் கட்டணம் வசூலிக்கக் கூடாது – அன்புமணி இராமதாஸ்!

Comments Off on இடம் பெயர்ந்த தொழிலாளர்களிடம் ரயில் கட்டணம் வசூலிக்கக் கூடாது – அன்புமணி இராமதாஸ்!
இடம் பெயர்ந்த தொழிலாளர்களிடம் ரயில் கட்டணம் வசூலிக்கக் கூடாது – அன்புமணி இராமதாஸ்!

சென்னை,மே 4 கொரோனா வைரஸ் பரவல் அச்சம் காரணமாக நாடு முழுவதும் மூன்றாவது கட்டமாக ஊரடங்கு  நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் வாழ வழியின்றி தவித்துக் கொண்டிருக்கும்  இடம் பெயர்ந்த தொழிலாளர்கள், சொந்த ஊர்களுக்கு திரும்ப தொடர்வண்டிகள் இயக்கப்படுகின்றன. அவற்றில் பயணிக்க கட்டணம் செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருப்பது வருத்தமளிக்கிறது. இந்தியா முழுவதும் கடந்த மார்ச் 24-ஆம் தேதி நள்ளிரவில் ஊரடங்கு ஆணை பிறப்பிக்கப்பட்டது முதல் இப்போது வரையிலான 40 நாட்களாக அவர்கள் வேலையில்லாமல் வாடுகின்றனர். […]

Continue reading …

வீர மரணமடைந்த பாதுகாப்பு படை வீரர்களுக்கு பிரதமர் அஞ்சலி!

Comments Off on வீர மரணமடைந்த பாதுகாப்பு படை வீரர்களுக்கு பிரதமர் அஞ்சலி!
வீர மரணமடைந்த பாதுகாப்பு படை வீரர்களுக்கு பிரதமர் அஞ்சலி!

புது டெல்லி,மே 04 ஜம்மு காஷ்மீரின் ஹந்த்வாராவில் வீர மரணமடைந்த துணிவுமிக்க சிப்பாய்களுக்கும் பாதுகாப்பு படை வீரர்களுக்கும் பிரதமர் நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தினார். ஹந்த்வாராவில் வீர மரணமடைந்த துணிவுமிக்க சிப்பாய்களுக்கும் பாதுகாப்பு படை வீரர்களுக்கும் அஞ்சலிகள். அவர்களின் வீரமும், தியாகமும் என்றும் மறக்கப்படாது. நாட்டுக்காக உச்சபட்ச அர்ப்பணிப்போடு சேவை புரிந்த அவர்கள், மக்களை காப்பாற்ற ஓய்வின்றி உழைத்தனர். அவர்களின் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் இரங்கல்கள், என்று பிரதமர் கூறினார்.

Continue reading …

பழங்குடியினருக்கு உதவ மத்திய அரசு அறிவுரை!

Comments Off on பழங்குடியினருக்கு உதவ மத்திய அரசு அறிவுரை!
பழங்குடியினருக்கு உதவ மத்திய அரசு அறிவுரை!

 புது டெல்லி,மே 03 கோவிட்-19 பரவல் காரணமாக ஏற்பட்டுள்ள மோசமான சூழலில் பழங்குடியினருக்கு உதவுவதற்கும், சிறு வன உற்பத்திப் பொருள்களைச் சேகரிக்க இது உச்சபட்ச காலம் என்பதைக் கருத்தில் கொண்டும், அவற்றை விரைந்து கொள்முதல் செய்யுமாறு அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய பழங்குடியினர் நல அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. சிறு வன உற்பத்திப் பொருள்களைக் கொள்முதல் செய்யும் நடவடிக்கைகளை மாநிலங்கள் மேற்கொண்டுள்ளன. 10 மாநிலங்களில் இந்த நடவடிக்கைகள் ஏற்கனவே தொடங்கிவிட்டன. 2020-21 நிதியாண்டுக்கான கொள்முதல் இதுவரை ரூ.20.30 கோடிக்கு மேற்கொள்ளப்பட்டுள்ளது. […]

Continue reading …

பேரழிவு ஏற்படும்: சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு விதிகளை தளர்த்தக் கூடாது – அன்புமணி எச்சரிக்கை!

Comments Off on பேரழிவு ஏற்படும்: சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு விதிகளை தளர்த்தக் கூடாது – அன்புமணி எச்சரிக்கை!
பேரழிவு ஏற்படும்: சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு விதிகளை தளர்த்தக் கூடாது – அன்புமணி எச்சரிக்கை!

சென்னை, மே 3 இந்தியாவில் பெரிய அளவிலான திட்டங்களை செயல்படுத்துவதற்கான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு  விதிமுறைகளை தளர்த்த மத்திய அரசு  திட்டமிட்டுள்ளது. காலநிலை மாற்றம் காரணமாக இந்தியா உள்ளிட்ட ஒட்டுமொத்த உலகமும் இனிவரும் காலங்களில் அடிக்கடி பேரழிவுகளை எதிர்கொள்ள நேரிடும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எச்சரித்துள்ள நிலையில், இந்த திட்டம் மிகவும் ஆபத்தானது. ஒரு நாட்டின் வளர்ச்சி ஆக்கப்பூர்வமானதாக இருக்க வேண்டும்; பொருளாதாரத்தை வளர்ப்பதாகக் கூறிக் கொண்டு சுற்றுச்சூழலை சீரழித்து விடக் கூடாது என்பதற்காகத் தான் தொழில்திட்டங்களுக்கும், […]

Continue reading …

வேளாண் பிரச்சினைகள்: பிரதமர் தலைமையில் ஆலோசனை கூட்டம்

Comments Off on வேளாண் பிரச்சினைகள்: பிரதமர் தலைமையில் ஆலோசனை கூட்டம்
வேளாண் பிரச்சினைகள்: பிரதமர் தலைமையில் ஆலோசனை கூட்டம்

புது டெல்லி,மே 02 வேளாண் பிரிவில் தேவைப்படும் சீர்திருத்தங்கள் மற்றும் பிரச்சினைகளைத் தீர்ப்பது குறித்து ஆலோசிப்பதற்கான கூட்டத்தை இன்று பிரதமர் நரேந்திர மோடி நடத்தினார். வேளாண் பொருள்களை சந்தைப்படுத்துதலில் செய்ய வேண்டிய சீர்திருத்தங்கள், உபரிப் பொருள்களைச் சந்தைப்படுத்துவதை மேலாண்மை செய்தல், நிறுவனக்கடன்கள் விவசாயிகளுக்குக் கிடைத்தல் மற்றும் தேவையான சட்டப்பூர்வ உரிமையுடன் பல்வேறு தடைகளில் இருந்து வேளாண் பிரிவை விடுவித்தல் போன்ற பிரச்சினைகளுக்கு இந்தக் கூட்டத்தில் முக்கியத்துவம் தரப்பட்டது. தற்போதைய சந்தைப்படுத்துதலில் உள்ள சூழல்சார் அமைப்பில் மேற்கொள்ள வேண்டிய செயல்உத்தி சார்ந்த […]

Continue reading …

சிவில் விமானப் போக்குவரத்துத் துறை செயல்பாடுகள் குறித்து பிரதமர் ஆய்வு!

Comments Off on சிவில் விமானப் போக்குவரத்துத் துறை செயல்பாடுகள் குறித்து பிரதமர் ஆய்வு!
சிவில் விமானப் போக்குவரத்துத் துறை செயல்பாடுகள் குறித்து பிரதமர் ஆய்வு!

புது டெல்லி,மே 02 இந்தியாவின் சிவில் விமானப் போக்குவரத்துத் துறையை இன்னும் செம்மையானதாக ஆக்க உதவும் திட்டங்கள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி நேற்று விரிவான ஆய்வு நடத்தினார். மக்களின் நேரத்தை மிச்சப்படுத்தும் வகையிலும், விமான நிறுவனங்களின் செலவுகளைக் குறைக்கும் வகையிலும் ராணுவ விவகாரங்கள் துறையின் ஒத்துழைப்புடன், பயண நேரத்தை செம்மையாகக் குறைப்பது, இந்தியாவின் வான்வழிப் பகுதியை செம்மையாகப் பயன்படுத்திக் கொள்வது என்று இந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. கூடுதல் வருமானம் ஈட்டவும், விமான நிலையங்களில் செயல் […]

Continue reading …

கொரோனா நிவாரணப் பணிக்கு ஓவியம் மூலம் ரூ.4.14 கோடி நிதி திரட்டிய சத்குரு!

Comments Off on கொரோனா நிவாரணப் பணிக்கு ஓவியம் மூலம் ரூ.4.14 கோடி நிதி திரட்டிய சத்குரு!
கொரோனா நிவாரணப் பணிக்கு ஓவியம் மூலம் ரூ.4.14 கோடி நிதி திரட்டிய சத்குரு!

 கோவை,மே 1 ஈஷாவின் கொரோனா நிவராணப் பணிகளுக்கு நிதி திரட்டுவதற்காக சத்குரு வரைந்த ஓவியம் ரூ.4 கோடிக்கு விற்பனையாகி  சாதனை படைத்துள்ளது. கொரோனா பிரச்சினையால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் கோவை தொண்டாமுத்தூர் பகுதி மக்களுக்கு ஈஷா கிராமப் புத்துணர்வு இயக்கம் சார்பில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. சுமார் 2 லட்சம் மக்கள் தொகை கொண்ட இந்த பகுதியில் கிட்டத்தட்ட அனைத்து கிராமங்களிலும் உணவின்றி தவிக்கும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு அவர்களின் வீட்டிற்கே சென்று உணவும், நிலவேம்பு கசாயமும் […]

Continue reading …