
சென்னை,மே 15 ஏர் இந்தியாவுக்கு சொந்தமான AI 1244 விமானம் டாக்காவிலிருந்து வந்து, வியாழனன்று சென்னை சர்வதேச விமான நிலையத்தில் தரை இறங்கியது. இந்த விமானத்தில் வந்த பயணிகள் சுமுகமாக வெளியேற சென்னை சுங்கத்துறை ஏற்பாடு செய்தது. 157 பயணிகளுடன் வந்த இந்த விமானம் மதியம் ஒரு மணிக்குத் தரையிறங்கியது. வந்தே பாரத் மிஷன் மூலம் சென்னைக்கு வந்தடைந்த ஏழாவது மீட்பு விமானமாகும் இது. இந்த மீட்பு விமானத்தில் மூலம் வந்த 157 பயணிகளில் 121 பேர் ஆண்கள் 36 பேர் பெண்கள். கோவிட்-19 பாதுகாப்பு நடவடிக்கைகள் அனைத்தையும் பின்பற்றி அனைத்து பயணிகளும் சுமுகமாக வெளியேற சென்னை விமான […]
Continue reading …
சென்னை,மே 15 கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கின் காரணமாக வெளி மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் சிக்கித் தவிக்கும் தமிழர்களை மீட்டு, தமிழகத்துக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் விரைவுபடுத்தப்பட்டு வருகின்றன. அதேநேரத்தில் மராட்டிய மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படாதது வருத்தமளிக்கிறது என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் அறிக்கை. திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டத்தைச் சேர்ந்த பெண்கள் உட்பட 216 பேர் வேலை தேடி கடந்த சில மாதங்களுக்கு முன் மராட்டியத்திற்கு […]
Continue reading …
கனிகா கபூர் பிளாஸ்மா தானத்தை ஏற்க மறுத்த மருத்துவர்கள் காரணம் என்ன? கொரோனா தொற்றில் இருந்து நீண்டநாள் சிகிச்சைக்கு பின்பு மீண்ட கனிகா கபூர் பிளாஸ்மா தானம் அளிக்க முன்வந்த நிலையில் ஏற்க மருத்துவர்கள் மறுத்துள்ளனர். மும்பையைச் சேர்ந்த பிரபல பின்னணிப் பாடகி கனிகா கபூர் கடந்த மார்ச் 15 ஆம் தேதி லண்டன் சென்றுவிட்டு லக்னோ திரும்பினார். அவருக்கு கொரோனா அறிகுறிகள் இருந்ததால் அவரை வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு இருக்கும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அதன் பின் […]
Continue reading …
இந்திய இராணுவம் உலகில் மூன்றாவது மிக பெரிய இராணுவம், 130 கோடிக்கு அதிகமான மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் தாக்களின் போது கணிசமான தொகை இராணுவத்திற்கு ஒதுக்கப்படுகிறது. மத்தியில் பாஜக அரசு ஆட்சி அமைத்தது முதல் பல்வேறு சீர்திருத்தங்களை இராணுவத்தில் செய்து வருகிறது, இந்திய இராணுவ வீரர்களுக்கு தேவையான உடைகள் மற்றும் காலணிகள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட நிலையில் இந்தியாவிலேயே தற்போது தயாரிக்கப்பட்டு இராணுவ வீரர்களுக்கு அளிக்கப்படுகிறது. தற்போது அதில் மேலும் […]
Continue reading …
கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தை மீண்டும் மீட்டெடுக்கும் வகையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்ட அறிவிப்புகளுக்கு பிரதமர் மோடி வரவேற்றுள்ளார். நேற்று முன்தினம் தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி உரையாற்றினார். அதில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட இந்திய பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில் ரூபாய் 20 லட்சம் கோடி சலுகை திட்டங்கள் செயல்படுத்தப்படும் என அறிவித்தார். இதனைத்தொடர்ந்து நேற்று நிதி அமைச்சர் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் டெல்லியில் முக்கிய அறிவிப்புக சிலவற்றை வெளியிட்டார். […]
Continue reading …
இந்தியாவின் பொருளாதாரம் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளதால் இதனை சீராக்க ரூபாய்.20 லட்சத்திற்கான புதிய திட்டத்தை பற்றி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளிட்டு பேசிவருகிறார். இந்த திட்டதை பல்வேறு தரப்பினரோடு கலந்து ஆலோசித்து தான் இந்த பொருளாதார தொகுப்பை உருவாகியுள்ளது. மேலும் திட்டத்தின் மூலம் இந்தியாவின் பொருளாதாரத்தை கட்டமைக்க அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவின் வளச்சியை உண்டாகும் வகையில் “சுயசார்பு பாரதம்” என்ற பெயரில் தொலை நோக்கு திட்டத்தை பிரதமர் மோடி அறிவித்தார். ஜன்தன், ஆதார் மூலம், […]
Continue reading …
புது டெல்லி,மே 13 வந்தே பாரத் மிஷன் திட்டத்தின் கீழ் மே 7, 2020 ல் இருந்து 5 நாட்களுக்குள் ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பிரத்யேகமாக இயக்கிய விமானங்கள் மூலம் 6037 இந்தியர்கள் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியுள்ளனர். வெளிநாடுகளில் சிக்கிக்கொண்ட இந்தியக் குடிமக்களைத் திரும்ப இந்தியாவுக்கு அழைத்து வருவதற்கான மிகப் பெரிய முன்னெடுப்பு முயற்சியாக வந்தே பாரத் மிஷன் திட்டத்தை இந்திய அரசு மே 7, 2020 இல் தொடங்கியது. இந்தத் […]
Continue reading …
மும்பை, மே 13 கொரோனா ஊரடங்கு காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் வேலை நிமித்தமாக, தங்களது சொந்த ஊரை விட்டு வந்த பல தொழிலாளர்கள், தங்களது சொந்த ஊருக்குத் திரும்ப முடியாமல் கடந்த 50 நாட்களுக்கும் மேலாக முடங்கிக் கிடந்தனர். மும்பையில் அப்படி வந்து தவித்த சுமார் 350 வெளிமாநிலத் தொழிலாளர்களை, வில்லன் நடிகர் சோனு சூட் 10 பேருந்துகளில் அவர்களது சொந்த ஊருக்கு நேற்று அனுப்பி வைத்தார். அவர்களுக்குத் தேவையான உணவு, தண்ணீர் ஆகியவற்றையும் அப்போது அவர் […]
Continue reading …
சென்னை, மே 12 மத்திய ரயில்வே துறை, புதுடில்லி – சென்னை மற்றும் சென்னை- புதுடில்லி ராஜதானி எக்ஸ்பிரஸ் 13.5.2020லிருந்து இயக்கப்படும் என்று அறிவித்து இருந்தது. நேற்று பாரத பிரதமர் தலைமையில் நடைபெற்ற காணொலி காட்சியின் போது, தமிழ்நாடு முதலமைச்சர் 31.5.2020 வரை வழக்கமாக இயக்கப்படும் ரயில் சேவைகளை தொடங்காமலிருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இருப்பினும், ஏற்கனவே முன் பதிவு செய்யப்பட்ட காரணத்தால் இரு தினங்களில் (14.5.2020 மற்றும் 16.5.2020) ரயில் சேவைகள் இயக்கப்படும் என ரயில்வேதுறை […]
Continue reading …
சென்னை,மே 12 வாழ்வாதாரம் தேடி குவைத்துக்கு சென்ற தமிழர்கள் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கான இந்தியர்கள் எந்த நேரமும் கொரோனா தாக்குதலுக்கு ஆளாகக்கூடும் என்ற அச்சத்தில் தவித்து வருகின்றனர். அவர்கள் இந்தியா திரும்புவதற்கான செலவுகளை ஏற்றுக்கொள்வதாக குவைத் அரசு உறுதியளித்துள்ள போதிலும், அவர்களை தாயகம் அழைத்து வருவதில் தாமதம் காட்டப்படுவது கவலையளிக்கிறது என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் அறிக்கை. வளைகுடா நாடுகளில் ஒன்றான குவைத்தில் சுமார் 10 லட்சம் இந்தியர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் தமிழகத்தையும், கேரளத்தையும் […]
Continue reading …