புது டெல்லி, ஏப்ரல் 22 நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஊடகத் துறை பணியில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு கொரோனா நோய்த் தொற்று கண்டறியப்பட்ட சமீபத்திய நிகழ்வுகளைக் கருத்தில் கொண்டு, பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்சி ஊடகங்களுக்கு தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் ஓர் அறிவுறுத்தலை வழங்கியுள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் கோவிட்-19 தொடர்பான செய்திகளைச் சேகரிக்கச் செல்லும், செய்தியாளர்கள், கேமராமேன்கள், புகைப்பட செய்தியாளர்கள் உள்ளிட்ட ஊடகத் துறையினர், நோய் பாதிப்பு அதிகம் உள்ள ஹாட்ஸ்பாட் பகுதிகள் மற்றும், நோய் பாதித்த பிற பகுதிகளுக்குச் […]
Continue reading …புது டெல்லி, ஏப்ரல் 22 சர்வதேச பூமி தினத்தை ஒட்டி அன்னை பூமிக்கு பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளார். நமக்கு அளவற்ற ஆரோக்கியமும், கருணையும் காட்டும் நம் அன்னை பூமிக்கு, சர்வதேச பூமி தினத்தை ஒட்டி, நாம் அனைவரும் நன்றி செலுத்துவோம். தூய்மையான, ஆரோக்கியமான மற்றும் அதிக வளமான பூமியை உருவாக்கப் பாடுபடுவதற்கு நாம் அனைவரும் உறுதியேற்போம். கோவிட்-19 நோய்த் தாக்குதலை முறியடிக்க முன்களத்தில் நின்று போராடும் அனைவருக்கும் உரத்த குரலில் நன்றி செலுத்துவோம் […]
Continue reading …புது டெல்லி : மக்கள் நிர்வாகப்பணியில் இருக்கும் அதிகாரிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். குடிமைப் பணிகள் நாளை ஒட்டி இன்று சர்தார் பட்டேலுக்கு பிரதமர் மரியாதை செலுத்தினார். குடிமைப் பணிகள் நாளான இன்று, மக்கள் நிர்வாகப் பணிகளில் உள்ள அனைத்து அதிகாரிகள் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். கோவிட்-19 நோய்த்தாக்குதலை வெற்றிகரமாக இந்தியா முறியடிப்பதை உறுதி செய்வதில் இந்த அதிகாரிகளின் பங்களிப்பை நான் பாராட்டுகிறேன். அவர்கள் 24 மணி […]
Continue reading …புது டெல்லி, ஏப்ரல், 20 மாலத்தீவு அதிபர் இப்ராகிம் முகமது சொலிஹ் உடன், பாரத பிரதமர் நரேந்திர மோடி இன்று தொலைபேசியில் உரையாடினார். தங்களது நாடுகளில் தற்போதைய கொவிட்-19 பாதிப்பு நிலைமைகளைப் பற்றி இரு தலைவர்களும் ஒருவருக்கொருவர் தகவல்களை பரிமாறிக்கொண்டனர். சார்க் நாடுகளுக்கிடையே ஒத்துக்கொள்ளப்பட்ட ஒருங்கிணைப்பு முறைகள் நன்றாக அமல்படுத்தப்படுத்தப்படுவதாக அவர்கள் திருப்தி தெரிவித்தனர். மாலத்தீவுக்கு ஏற்கனவே அனுப்பப்பட்ட இந்திய மருத்துவக் குழுவும், இந்தியாவால் அன்பளிப்பாக அளிக்கப்பட்ட அத்தியாவசிய மருந்துகளும், தீவுகளில் நோய் பரவலைக் கட்டுப்படுத்துவதில் பங்காற்றியதை அறிந்து பிரதமர் மகிழ்ச்சி அடைந்தார். மாலத்தீவைப் போன்ற சுற்றுலாவை சார்ந்த பொருளாதாரத்துக்கு பெரும் தொற்று விடுத்துள்ள கடினமான சவால்களைப் பற்றி பேசிய பிரதமர், கொவிட்-19இன் சுகாதார மற்றும் பொருளாதார பாதிப்பை குறைக்க இந்தியாவின் ஆதரவு தொடருமென மாலத்தீவு அதிபருக்கு உறுதி அளித்தர். தற்போதைய சுகாதார சிக்கல்களால் ஏற்படும் பிரச்சினைகள் […]
Continue reading …கொவிட்-19 முடக்க நிலை காலத்தில், இந்திய ரெயில்வே ஏழைகளுக்கும் தேவையுள்ளவர்களுக்கும் இது வரையிலும் 20.5 லட்சத்திற்கும் கூடுதலான உணவுப் பொட்டலங்களை விநியோகித்துள்ளது. வடக்கு, மேற்கு, கிழக்கு, தெற்கு மற்றும் தென்மத்திய ரெயில்வே மண்டலங்களில் உள்ள புதுதில்லி, பெங்களூர், ஹுப்ளி, மத்திய மும்பை, அகமதாபாத், பூசாவல், ஹௌரா, பாட்னா, கயா, ராஞ்சி, கதிஹார், தீன் தயாள் உபாத்யாய நகர், பாலசோர், விஜயவாடா, குர்தா, காட்பாடி, திருச்சிராப்பள்ளி, தன்பத், கௌகாத்தி, சமஸ்திபூர், பிரயாக்ராஜ், இட்டாசி, விசாகப்பட்டினம், செங்கல்பட்டு, பூனா, ஹாஜிப்பூர், ராய்பூர் மற்றும் டாட்டாநகர் […]
Continue reading …கர்வாரில் உள்ள இந்திய கடற்படையின், மருத்துவமனையான பதஞ்சலி, உத்தர கன்னட மாவட்டத்தில் இருக்கும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து, கொவிட்-19க்கு எதிரான போரில் முன்னணியில் நிற்கிறது. கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்ட நோயாளிகளின் முதல் குழுவை வரவேற்க, 24 மணி நேரத்தில் அனைத்து விதத்திலும் இந்தியக் கடற்படையின் கப்பல் மருத்துவமனையான பதஞ்சலி தயார்படுத்தப்பட்டது. இது வரை அனுமதிக்கப்பட்ட கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்ட ஒன்பது நோயாளிகளின் பராமரிப்பை, மூன்று மருத்துவர்கள், ஒன்பது மருத்துவப் பணியாளர்கள் மற்றும் ஒன்பது ஆதரவுப் பணியாளர்களைக் […]
Continue reading …புது டெல்லி : அஞ்சலக ஊழியர்களுக்கு, அவர்கள் பணியில் இருக்கும்போது நோய்த் தொற்று ஏற்பட்டால், அவர்களுக்கு இழப்பீடாக ரூ.10 லட்சம் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. மத்திய உள்துறையின் அறிவிப்பு : அஞ்சல்துறையானது, இன்றியமையாத சேவைகளின் கீழ் வருகிறது என்பதை உறுதி செய்கிறது. கிராம அஞ்சல் சேவகர்கள் உள்ளிட்ட அஞ்சல்துறை ஊழியர்கள், வாடிக்கையாளர்களுக்கு தபால்களை விநியோகிப்பது, அஞ்சல் அலுவலக சேமிப்பு கணக்கு, அஞ்சலக ஆயுள் காப்பீடு, AePS வசதியின் கீழ் எந்த வங்கியில் இருந்தும் எந்தக் […]
Continue reading …புது டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி இன்று தொலைபேசி மூலம் பூட்டான் பிரதமர் மாண்புமிகு டாக்டர் லோட்டாய் ட்ஷெரிங் உடன் கலந்துரையாடினார். கோவிட்-19 நோய்த்தொற்றை அடுத்து இந்தப் பிராந்தியத்தில் உள்ள நிலைமை குறித்து இரு பிரதமர்களும் விவாதித்தனர். இதன் பாதிப்புகளைக் கட்டுப்படுத்துவதற்கு தங்கள் நாடுகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்த தகவல்களை இரு தலைவர்களும் பகிர்ந்து கொண்டனர். பூட்டானில் கோவிட்-19 நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்துவதில் பூட்டான் மன்னரும், டாக்டர் ட்ஷெரிங்கும் முன்னின்று மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் […]
Continue reading …புதுடெல்லி : உலக சுகாதார அமைப்பின் (WHO) மூத்த அதிகாரிகள் மற்றும் கள அலுவலர்களுடனும், மத்திய மாநில அரசுகளின் சுகாதார அலுவலர்களுடனும், கோவிட்-19 நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் குறித்து, காணொளிக் காட்சி மூலம் மத்திய சுகாதாரம், குடும்ப நலத் துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்த்தன் இன்று கலந்துரையாடினார். உலக சுகாதார அமைப்பின் அதிகாரிகளுக்குப் பாராட்டு தெரிவித்த டாக்டர் ஹர்ஷ் வர்த்தன், நெருக்கடியான காலக்கட்டத்தை நாம் சந்தித்திருக்கிறோம். போலியோ மற்றும் தட்டம்மையை ஒழித்ததைப் போல இந்த […]
Continue reading …கோவிட்-19க்கு எதிரான நடவடிக்கைகளில் லே பகுதியில் இருந்து மருத்துவப் பரிசோதனைக்கான மாதிரிகளை எடுத்துக்கொண்டு இந்திய விமானப்படையின் சீட்டா ஹெலிகாப்டர் ஹின்டோனில் இருந்து சண்டீகருக்குப் புறப்பட்டுச் சென்றது. ஹின்டோனில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்ட காரணத்தால் வெளிவட்டச்சாலை நெடுஞ்சாலையில் அந்த ஹெலிகாப்டர் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. விமானிகள் சரியான முடிவை, சரியான நேரத்தில் எடுத்துள்ளனர். பொருள் சேதம் எதுவும் ஏற்படவில்லை. ஹின்டோனில் இருந்து ஹெலிகாப்டரை மீட்பதற்கான பணிகள் உடனே தொடங்கப்பட்டன. பழுது நீக்கம் செய்து, முறையாக, […]
Continue reading …