8 நாடுகளுக்குச் சொந்தமான 31 செயற்கைக்கோள் மற்றும் இந்தியாவின் ஹைசிஸ் செயற்கைக்கோளைச் சுமந்து பிஎஸ்எல்வி சி-43 ராக்கெட் இன்று காலை விண்ணில் பாய்ந்தது. ஆந்திர மாநிலம் சிறிஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் பிஎஸ்எல்வி சி-43 ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்கான 28 மணி நேர கவுன்ட்டவுன் நேற்று அதிகாலை 5.58 மணிக்கு தொடங்கியது. கவுன்ட்டவுன் முடிந்தவுன், இஸ்ரோ உருவாக்கிய ஹைசிஸ் (Hyper Spectral Imaging Satellite) செயற்கைக்கோளுடன் பிஎஸ்எல்வி சி-43 ராக்கெட் முதலாவது ஏவுதளத்தில் இருந்து […]
Continue reading …சேலம், மிகப் பெரிய ஜனநாயக நாடாக உள்ள இந்திய திருநாட்டின் 14வது ஜனாதிபதித் தேர்தல் வருகின்ற ஜூலை 17ம் தேதி நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் பொதுவாக மத்தியில் ஆளும் கட்சியினர் ஆதரவானவர்களே ஜனாதிபதியாக அமர முடியும் என்பதால், தற்போது மத்தியில் ஆளும் பி.ஜே.பி.யின் ஆதரவில் பலரும் ஜனாதிபதி கனவில் மிதந்தபடி உள்ளனர். அதேபோல் நாங்களும் சளைத்தவர்களல்ல என்பதுபோல ஜனாதிபதி தேர்தலில் தங்களின் நெருக்கடி இருக்கும் என்பது போல காங்கிரசும் தனது பங்கிற்கு செயல்பட்டுக்கொண்டுள்ளது. ஆளும் பி.ஜே.பி. சார்பில் 3 […]
Continue reading …தொலைத் தொடர்பு சேவைத் துறை வர்த்தகத்தில் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், ஏர்செல் நிறுவனங்கள் ஒன்றாக இணைகின்றன.இதனையடுத்து அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் கம்பியில்லா தொலைத்தொடர்பு சேவைப்பிரிவு ஏர்செல்லுடன் இணைக்கப்படவுள்ளது. இரண்டு நிறுவனங்களும் சேர்ந்து உருவாக்கும் நிறுவனத்தில் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் மற்றும் ஏர்செல்லின் தலைமை நிறுவனமான மேக்சிஸ் நிறுவனம் ஆகியவை தலா 50% பங்குகளை சரிசமமாக வைத்திருக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. இணைப்புக்குப் பிறகு இந்த நிறுவனங்களின் பயனாளர்கள் எண்ணிக்கை 19 கோடியாக இருக்கலாம். ஏர்டெல் நிறுவனம் 25 கோடி வாடிக்கையாளர்களைக் கொண்ட நிறுவனமாகும்.இந்த […]
Continue reading …சந்தாதாரர்களின் கடும் எதிர்ப்பின் எதிரொலியாக, வருங்கால வைப்பு நிதியில் (பிஎப்) உள்ள தொகையை திரும்பப் பெறுதலில் புதிய விதிமுறைகள் ஜூலை 31 வரை அமல்படுத்தப்பட மாட்டாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இப்போதைய விதிமுறைகளின்படி, ஒரு நிறுவனத்தின் பணியிலிருந்து விலகிய ஒரு ஊழியர் தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கு வேலையில்லாமல் இருந்தால், தனது பிஎப் கணக்கில் உள்ள முழு தொகையையும் (100%) திரும்பப் பெற முடியும். இந்நிலையில், மத்திய தொழிலாளர் நலத் துறை அமைச்சகம் கடந்த பிப்ரவரி மாதம் […]
Continue reading …இந்தியா – வங்கதேசம் அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் ஆட்டத்தில், இந்திய அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி கண்டது. கடைசி ஓவரில் வெற்றிக்கு 11 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் வங்கதேச அணி 6 விக்கெட்டுகளுக்கு 136 ரன்களை எடுத்திருந்தது. களத்தில் மஹமதுல்லாவும், முஸ்தஃபிர் ரஹிமும் இருக்க, பாண்டியா பந்துவீசினார். முதல் பந்தில் மஹமதுல்லா 1 ரன் எடுக்க, அடுத்த இரண்டு பந்துகளும் பவுண்டரிக்கு விரைந்தது. ஆட்டம் முடிந்தது, வங்கதேசம் வென்றுவிடும் என்று ரசிகர்கள் […]
Continue reading …நான் நாட்டை விட்டு தப்பி ஓடவில்லை. இந்திய நாடாளுமன்றத்தின் எம்.பி.யாக நாட்டின் சட்டதிட்டங்களை மதித்து அவற்றிற்கு முழுமையாக கட்டுப்பட்டவன் என தொழிலதிபர் விஜய் மல்லையா தனது ட்விட்டர் பக்கத்தின் வாயிலாக தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் (@TheVijayMallya) மேலும் கூறியிருப்பதாவது: “நான் ஒரு சர்வதேச தொழிலதிபர். தொழில் நிமித்தமாக இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு அவ்வப்போது சென்று வருவது வழக்கம். நான் நாட்டை விட்டு தப்பி ஓடவில்லை. நான் பயந்தவனும் இல்லை. இந்திய நாடாளுமன்றத்தின் எம்.பி.யாக, நாட்டின் சட்டதிட்டங்களை மதித்து அவற்றிற்கு […]
Continue reading …மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு மத்திய உள்துறை இணையமைச்சர் கிரண் ரிஜிஜு அளித்த பதில் வருமாறு: பஞ்சாப் மாநிலம் பதான்கோட் விமானப்படை தளத்தில் தீவிரவாதி கள் தாக்குதல் நடத்தினர். இதில் பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு தொடர்பு இருப்பதாகக் கூறி, அதற்கான ஆதாரங்கள் அந்நாட்டு அரசுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்தத் தாக்குத லில் தங்கள் நாட்டைச் சேர்ந்தவர் களுக்கு தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து விசாரிப்பதற்காக பாகிஸ்தான் அரசு வழக்கு பதிவு செய்துள்ளது. இதன்மூலம் இந்த விவகாரத்தில் முதன்முறையாக பாகிஸ்தான் அரசு […]
Continue reading …2014-15 மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது இணங்க தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் இடத்தை அரசு விரைவில் உறுதி செய்ய வேண்டும் என முதல்வர் ஜெயலலிதா பிரதமருக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக புதன்கிழமை அவர் பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில், “2014-15 மத்திய பட்ஜெட்டில் தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியானது. அதனைத் தொடர்ந்து 2014 ஜூலை 17-ல் நான் தங்களுக்கு எழுதிய கடிதத்தில், பட்ஜெட் அறிவிப்புக்கு நன்றி தெரிவித்திருந்தேன். அதுமட்டுமல்லாது தமிழகத்தில் எய்ம்ஸ் […]
Continue reading …ஒலிம்பிக் போட்டியை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் என்று இந்தியாவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா கூறியுள்ளார். பெண்களுக்கான இரட்டையர் டென்னிஸ் போட்டியில் இந்த ஆண்டு 10 சாம்பியன் பட்டங்களை வென்று சாதனை படைத்துள்ளார் சானியா மிர்சா. இதன்மூலம் இரட்டையர் பிரிவில் உலகின் முதல் நிலை வீராங்கனையாக இருக்கும் சானியா மிர்சா, ‘தி இந்து’ ஆங்கில நாளிதழுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: பெண்களுக்கான இரட்டையர் டென்னிஸில் நானும் மார்டினா ஹிங்கிசும் நம்பர் ஒன் ஜோடியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது […]
Continue reading …புதுடெல்லி: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வோம் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறி உள்ளார். வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த பகுதி காரணமாக தமிழ்நாட்டில், சென்னை உள்ளிட்ட பல வட மாவட்டங்களில் கனமழை பெய்தது. இந்த மழையால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் மாவட்டங்களில் உயிர்ச்சேதமும், பொருட்சேதமும் ஏற்பட்டது. ரூ.8,500 கோடி அளவுக்கு வெள்ளச்சேதம் ஏற்பட்டிருப்பதாக கூறி, மத்திய குழுவை அனுப்பி ஆய்வு செய்ய வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் […]
Continue reading …