பதான்கோட் தாக்குதல் குறித்து வழக்கு பதிவு செய்தது பாகிஸ்தான்: உள்துறை இணையமைச்சர் தகவல்

Filed under: இந்தியா |

மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு மத்திய உள்துறை இணையமைச்சர் கிரண் ரிஜிஜு அளித்த பதில் வருமாறு:

பஞ்சாப் மாநிலம் பதான்கோட் விமானப்படை தளத்தில் தீவிரவாதி கள் தாக்குதல் நடத்தினர். இதில் பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு தொடர்பு இருப்பதாகக் கூறி, அதற்கான ஆதாரங்கள் அந்நாட்டு அரசுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்தத் தாக்குத லில் தங்கள் நாட்டைச் சேர்ந்தவர் களுக்கு தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து விசாரிப்பதற்காக பாகிஸ்தான் அரசு வழக்கு பதிவு செய்துள்ளது. இதன்மூலம் இந்த விவகாரத்தில் முதன்முறையாக பாகிஸ்தான் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இதுதொடர்பான மற்றொரு கேள்விக்கு மற்றொரு உள்துறை இணையமைச்சர் ஹரிபாய் பார்த்திபாய் சவுத்ரி எழுத்து மூலம் அளித்த பதிலில், “பதான்கோட் தாக்குதலுக்கு முன்பு கிடைத்த உளவு தகவல், தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) நடத்திய விசாரணை ஆகியவற்றை வைத்துப் பார்க்கும்போது, இதில் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத இயக்கத்துக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. அந்த அமைப் பின் தலைவர் மவுலானா மசூத் ஆசார் உள்ளிட்டோர் இதற்கான சதித் திட்டத்தைத் தீட்டியதற்கான ஆதாரமும் கிடைத்துள்ளது” என கூறப்பட்டுள்ளது.