20 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது நெற்றிக்கண்! நவீன நெற்றிக்கண் வார இதழ், 1995 ஏப்ரல் 5ம் தேதி துவக்கப்பட்டது! பத்தொன்பது ஆண்டுகளை வெற்றிகரமாகக் கடந்து, 20வது ஆண்டில்… *வாசகர்கள்… *முகவர்கள்… *செய்தியாளர்கள் நண்பர்கள் மற்றும் நெற்றிக்கண் குடும்பத்தாரின் ஆணி வேர்கள் துணையோடு அடியெடுத்து வைக்கிறது! நெருப்பாற்றில் நீந்தும் எங்களது முயற்சிக்கு துணையாக நிற்கும் அனைவருக்கும் இதயம் கனிந்த நன்றி! ஏ.எஸ். மணி ஆசிரியர் & வெளியீட்டாளர்.
Continue reading …டெல்லி தமிழ்ச் சங்கம் பல வருடங்களாக தமிழ் வளர்ச்சி, தமிழன் உயர்வு என்ற காரணம் காட்டி செயல்பட்டு வருகிறது. இச்சங்கத்தில் பொறுப்பு ஏற்ற பல உறுப்பினர்கள் தமிழை வளர்த்த காலமும் உண்டு. சமீபகாலமாக அரசியல் காழ்ப்புணர்ச்சி, தனி விரோதம், வறட்டு கௌரவம் போன்ற காரணங்களால் இன்றைய தமிழ்ச் சங்கம் பிளவுபட்டு நிற்கிறது. ஒரு கோஷ்டி தனக்கு பிடித்த அரசியல் தலைவரை வைத்து விழா நடத்தினால், அதற்கு எதிர் கோஷ்டி மாற்றுக் கட்சியைச் சேர்ந்த அரசியல் தலைவரை அழைத்து […]
Continue reading …நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தல் இந்திய வாக்காளர்களை குழப்பி உள்ளது. இந்திய கட்சிகள் இந்திய மக்களின் விழிப்புணர்ச்சியைக் கண்டு மிரண்டுபோய் உள்ளன. மாநிலக்கட்சிகள் மாநில உணர்வுகளை தட்டிக்கேட்கும் மக்களுக்கு பதில் சொல்லத்தெரியாமல் திகைத்துப்போய் உள்ளார்கள். மதங்களின் போர்வையில் பிரிவினை ஏற்படுத்திய தேசிய கட்சிகள் மக்களின் மதசார்பற்ற இந்திய ஒருமைப்பாட்டைக்கண்டு அலறுகின்றன. இந்திய வாக்காளர்கள் 4 வகையாக பிரிந்துள்ளனர். செல்வாக்கு படைத்தவர்கள், நடுத்தர மக்கள், ஏழை எளியவர்கள் மற்றும் இளைய தலைமுறை. இதில் இளைய தலைமுறை பல்வேறாக பிரிந்துள்ளது. […]
Continue reading …வரப்போகும் தேர்தல் வெற்றி, தோல்விகள் இந்திய கட்சிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தப்போகிறதாம். காரணம் விலைவாசி உயர்வு, பொருளாதார சீர்கேடு, இந்திய பாதுகாப்பு, இலங்கை பிரச்சனை, அமெரிக்கா, சீனா உறவு போன்றவை அடுத்த ஆட்சியாளர்களை கவலையில் ஆழ்த்தும் நிலைக்கு கொண்டு வரும் என்கிறார்கள். பொருளாதார நிபுணர்களாக வெளிக்காட்டிய மன்மோகன்சிங், தமிழக சிதம்பரம், முன்னாள் கவர்னர் ரங்கராஜன் போன்றவர்கள் இன்றைய பொருளாதார சீர்கேட்டை உயர்த்த வழிதெரியாமல் தவிக்கிறார்கள். பா.ஜ.க.வில் முன்னாள் நிதிஅமைச்சர் யஷ்வந்த்சின்கா, ஜஸ்வந்த்சிங் போன்றவர்கள் தற்போதைய பொருளாதார நிலை உயர்வுக்கு […]
Continue reading …அரசியல்வாதிகள் இந்தியாவில் பேசுவது ஒன்று. ஆனால் செயல்படுத்துவது எதிர்மாறான செயலாகத்தான் இருக்கும். இந்திய மக்களை முட்டாளாக்கும் விதத்தில் அரசியல் கொள்கைகளை வெளிப்படுத்திய இந்திய கட்சிகள், தற்போது பொதுமக்களின் விழிப்புணர்ச்சியைக் கண்டு கலங்குகிறார்களாம். சொன்னதை செயல்படுத்தாத அரசியல்கட்சிகள் இந்த தேர்தலில் நிச்சயம் காணாமல் போய்விடுவார்கள் என்ற கருத்து உலவுகிறது. டெல்லி மாநில மக்கள் அனுபவித்த இன்னல்கள் மற்ற மாநில மக்களையும் சிந்திக்க வைத்துள்ளதாம். உயர்ந்து நிற்கும் விலைவாசி, சரிந்து கிடக்கும் பொருளாதாரம், திகைத்துநிற்கும் அதிகார வட்டங்கள், ஏமாற்றிக் கொண்டிருக்கும் […]
Continue reading …பாராளுமன்றத் தேர்தல் இந்திய கட்சிகளை கலங்க வைத்துள்ளது. இந்திய பொருளாதார சீர்கேடு, இந்திய உற்பத்திதிறன் குறைவு போன்ற காரணங்கள் இந்திய பொருளாதார நிபுணர்களை கலங்க வைத்துள்ளது. எதைத்தின்றால் பொருளாதார பித்தம் தெளியும் என்ற சூழ்நிலை இன்று உலவுகிறது. அடுத்த ஆட்சி கட்டிலில் அமரப்போகும் கட்சி டெல்லி ஆம் ஆத்மி கட்சிபோல பிசுபிசுத்துப்போகும் நிலை ஏற்படலாம் என்ற கணிப்பு உள்ளது. இந்தியாவை வலிமை ஆக்க இந்திய அதிகாரிகள் தயாரித்த நல்ல திட்டங்கள் அடிமையாகிவிட்ட அரசியல் வாதிகளால் கிடப்பில் போடப்பட்டு […]
Continue reading …பாராளுமன்றத் தேர்தல் நெருங்கிவர ஆரம்பித்துள்ளது. இந்திய கட்சிகள் கூட்டணிகளை தேட ஆரம்பித்து உள்ளன. காங்கிரஸ் தன் கைவசம் உள்ள கூட்டணிகளை இழக்காமல் காக்க நினைக்க பா.ஜ.க. மோடியின் மீது நம்பிக்கை வைத்து அதிக கூட்டணிகளை தேடுவதை தவிர்ப்பதாகக் கூறுகிறார்கள். மதவாதம், மதசார்பற்றத்தன்மை என்ற போர்வையில் இரு தேசிய கட்சிகளும் 3வது அணியை சேர்ந்த யார் வந்தாலும் பிரதமராக்க தயாராக திட்டம் தீட்டி உள்ளார்களாம். தற்போது உள்ள ஆட்சியை கைவிட்டால் இன்னும் 10 ஆண்டுகளுக்கு மத்தியில் ஆட்சியைப்பிடிக்க காங்கிரஸ் […]
Continue reading …இந்திய நாட்டின் 65வது குடியரசு தினம் வரலாறு காணாத அளவில் டெல்லி மக்களின் மற்றும் இந்தியர்களின் இந்திய உணர்ச்சிகளை வெளிப்படுத்தியது என்ற பெருமை அடைகிறது. கடுங்குளிரில் தலைநகர மக்களுடன் இணைந்த மாநில மக்கள் மற்றும் அதிகாரிகள் தங்கள் மாநிலங்களை பிரதிபலித்த ஊர்திகள் அணிவகுத்தபோது கைத்தட்டி ஆரவாரம் செய்தார்கள். வடகிழக்கு மாநில ஊர்தி சென்றபோது வடகிழக்கு மாநில அதிகாரிகள் தங்கள் மனைவிகளுடன் ஆரவாரம் செய்தனர். காஷ்மீர் மாநில ஊர்தி கடந்தபோது மத்திய அமைச்சர் பருக் அப்துல்லா தன் மனைவியுடன் […]
Continue reading …இந்திய மக்களின் சமீபகால விழிப்புணர்ச்சி இந்திய அரசியல் கட்சிகளை ரொம்பவே அதிரவைத்துள்ளது. இந்திய மக்களை ஏமாற்றி ஆதரவு பெற்றுவந்த தேசிய கட்சிகள் தற்போது தேர்தல் கொள்கைகளை அறிவிக்க பயந்து நடுங்குகிறதாம். சாதி, மதம், இனங்களை கடந்து இந்திய மக்கள் ஓட்டளித்தது உலக வரலாற்றில் முக்கிய அதிரடி திருப்பம் என்கிறார்கள். தங்களுக்குத் தேவையான எதிர்கால அரசியலை இந்தியர்கள் தீர்மானித்து விட்டார்களாம். பொருளாதார வளர்ச்சியை அடியோடு குறைத்த காங்கிரஸ், அதை உயர்த்திபிடிக்க வழிதெரியாமல் 50 ஆண்டுகள் அனுபவம் இருந்தும் திணறுகிறது. […]
Continue reading …தற்போது இந்திய அரசியலை இயக்கிக் கொண்டிருப்பது ஆம் ஆத்மி கட்சி என்கிறார்கள். சாதாரணக்குடிமகன் கட்சி என்பதன் தமிழாக்கம். இந்திய தேசிய கட்சியான பா.ஜ.க.வும், காங்கிரசும் இணைந்து பாரத நாட்டை சீரழித்த நிலையை கண்ட இந்திய மக்கள் அடித்த ஆப்பு ஆம் ஆத்மி கட்சி என்கிறார்கள். சாதி அரசியலும் மத அரசியலும் துணைக்கு அழைத்து இந்தியர்களை பிரித்து அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இந்தியர்களை பலிகொடுத்து ஆட்டம்போட்ட பா.ஜ.க., காங்கிரஸை தற்போது அதிரவைத்து ஆட்டம் காணுகிறதாம். ஆம் ஆத்மி கட்சி என்கிறார்கள். […]
Continue reading …