Home » Archives by category » இந்தியா (Page 19)

பம்பையில் பார்க்கிங் …! அதிரடி உத்தரவிட்ட கேரளா உயர் நீதி மன்றம்.

Comments Off on பம்பையில் பார்க்கிங் …! அதிரடி உத்தரவிட்ட கேரளா உயர் நீதி மன்றம்.

பம்பையில் பார்க்கிங் …! அதிரடி உத்தரவிட்ட கேரளா உயர் நீதி மன்றம். சபரிமலை பம்பையில் வாகன பார்க்கிங்கிற்கு கேரள உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. அதேநேரம் கனரக வாகனங்கள் நிலக்கல்லில்தான் நிறுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. இதனால் ஐயப்ப பக்தர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். சபரிமலைக்கு வரும் வாகனங்கள் அனைத்தும் நிலக்கல்லில் நிறுத்தப்படுகின்றன. தரிசனம் முடிந்து வரும் பக்தர்கள், கேரள அரசு பஸ்களில் நிலக்கல் வந்து ஊர் திரும்ப வேண்டும். இதற்கு பக்தர்கள் பம்பையில் பார்க்கிங் வசதி வேண்டும் என கோரிக்கை […]

Continue reading …

“க்யூட்-யுஜி” தேர்வு டில்லியில் மட்டும் ஒத்திவைப்பு!

Comments Off on “க்யூட்-யுஜி” தேர்வு டில்லியில் மட்டும் ஒத்திவைப்பு!

தேசிய தேர்வு முகமை தமிழகம் உள்ளிட்ட நாடு முழுவதும் இன்றைய க்யூட்-யுஜி தேர்வு நடைபெறுகிறது. டில்லியில் மட்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை பட்டப்படிப்பு படிக்க க்யூட்-யுஜி தேர்வு கட்டாயம். இன்று காலை நாடு முழுவதும் இத்தேர்வு நடைபெற்றது. ஆனால் டில்லியில் மட்டும் தவிர்க்க முடியாத சில காரணங்களால் இத்தேர்வு ஒத்திவைக்கப்படுவதாகவும் இன்று நடைபெற இருந்த வேதியியல், உயிரியல், ஆங்கிலம் மற்றும் பொது அறிவுக்கான தேர்வு மே 29ம் தேதி டில்லியில் நடைபெறும் என்றும் தேசிய […]

Continue reading …

பாஜகவுக்கு ராகுல் காந்தி எச்சரிக்கை!

Comments Off on பாஜகவுக்கு ராகுல் காந்தி எச்சரிக்கை!

அரசியலமைப்பு சட்டப்புத்தகத்தை கிழித்து எறிய முயற்சித்தால், நாடும் காங்கிரஸ் கட்சியும் பாஜகவை என்ன செய்யும் என்பதை பாருங்கள் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எச்சரித்துள்ளார். நாடு முழுவதும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. தேர்தலையொட்டி அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஒடிசா மாநிலம் பலங்கிரில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய ராகுல் காந்தி, “இந்தியாவின் பிற்படுத்தப்பட்ட, தலித்துகள், பழங்குடியினர் மற்றும் ஏழை பொது […]

Continue reading …

இன்று சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடை திறப்பு?

Comments Off on இன்று சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடை திறப்பு?

சபரிமலை ஐயப்பன் கோவில் ஒவ்வொரு மாதமும் தமிழ் மாத முதல் ஐந்து நாட்கள் திறக்கப்படும். வைகாசி மாதம் பூஜைக்காக இன்று சபரிமலை ஐயப்பன் கோயில் திறக்கப்பட இருப்பதாகவும் மே 19ம் தேதி வரை பக்தர்கள் தரிசனம் செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கோவில் நிர்வாகம் இன்று காலை 5 மணிக்கு கணபதி ஹோமம் உள்ளிட்ட வழக்கமான பூஜைகளுடன் நடை திறக்கப்பட்டது. 19ம் தேதி இரவு 10 மணி வரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். தினந்தோறும் காலை நெய் […]

Continue reading …

இந்தியாவில் குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்!

Comments Off on இந்தியாவில் குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்!

மத்திய அரசு இந்தியாவில் குடியுரிமை திருத்த சட்டம் அமல்படுத்தப்படுவதாக அதிகாரபூர்வமாக அறிவித்தது. தற்போது முதல் கட்டமாக 14 பேருக்கு குடியுரிமை வழங்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. நாடாளுமன்றத்தில் கடந்த 2019ம் ஆண்டு குடியுரிமை திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இச்சட்டத்தின்படி 2014ம் ஆண்டுக்கு முன்பு வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வந்த முஸ்லிம் அல்லாத சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த சட்டத்துக்கு எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வந்தாலும் மத்திய அரசு […]

Continue reading …

எச்.ராஜா மீதான வழக்கை ரத்து செய்ய உச்சநீதிமன்றம் மறுப்பு!

Comments Off on எச்.ராஜா மீதான வழக்கை ரத்து செய்ய உச்சநீதிமன்றம் மறுப்பு!

பாஜகவின் எச்.ராஜா பெண்களுக்கு எதிராக ஆபாச கருத்து தெரிவித்ததாக தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்ய கோரிய மனு மீது உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. பா.ஜ.க மூத்த தலைவர் எச்.ராஜா தனது டிவிட்டர் பக்கத்தில் கடந்த 2018ல் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்துக்களை பதிவிட்டார். இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜ் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் ஈரோடு மாவட்ட காவல்துறையில் புகார் அளித்தனர். புகாரின் […]

Continue reading …

டில்லி ஐடி அலுவலகத்தில் தீ விபத்து!

Comments Off on டில்லி ஐடி அலுவலகத்தில் தீ விபத்து!

டில்லியில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இவ்விபத்தில் அங்கிருந்த 7 ஊழியர்களை தீயணைப்பு வீரர்கள் மூலம் பத்திரமாக மீட்கப்பட்டனர். டில்லியில் உள்ள மாநில காவல்துறை தலைமை அலுவலகத்திற்கு எதிரில் உள்ள வருமானவரித்துறை அலுவலகத்தில் வழக்கம்போல் ஊழியர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். இக்கட்டிடத்தின் 4வது மாடியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும் 21 தீயணைப்பு வாகனங்களில் சம்பவ இடத்திற்கு தீயணைப்பு துறையினர் விரைந்தனர். தீ விபத்து சிக்கிய 7 […]

Continue reading …

பிரதமர் மோடி இன்று வேட்புமனு தாக்கல்!

Comments Off on பிரதமர் மோடி இன்று வேட்புமனு தாக்கல்!

வாரணாசி தொகுதியில் போட்டியிடும் மோடி இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். பாஜக ஆட்சி இந்தியாவில் கடந்த 10 ஆண்டு காலமாக நடந்து வருகிறது. 3வது முறையாக பாஜக தொடர்ந்து ஆட்சி அமைக்குமா என்ற எதிர்பார்ப்பு உள்ளது. கடந்த 2 தேர்தல்களிலும் வாரணாசி தொகுதியில் போட்டியிட்ட பிரதமர் மோடி, மூன்றாவது முறையும் வாரணாசி தொகுதியிலேயே களமிறங்குகிறார். இன்று வாரணாசியில் வேட்புமனு தாக்கல் செய்யும் முன்பாக புனித நதியான கங்கையில் பிரதமர் மோடி நீராடி பிரார்த்தனை செய்து சிறப்பு […]

Continue reading …

டில்லியில் மருத்துவமனைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

Comments Off on டில்லியில் மருத்துவமனைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

மின்னஞ்சல் மூலம் டில்லியில் உள்ள 4 மருத்துவமனைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நாடு முழுவதும் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. கடந்த சில வாரங்களாக டில்லி, குஜராத், ராஜஸ்தான் மாநிலங்களில் உள்ள பள்ளிகள், மருத்துவமனைகள், விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படும் சம்பவங்கள் தொடர்ந்து வருகின்றன. டில்லி மற்றும் தேசிய தலைநகர் பிராந்தியத்தில் கடந்த 1-ம் தேதி சுமார் 100 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டன. இதன் காரணமாக, […]

Continue reading …