Home » Archives by category » இந்தியா (Page 20)

டில்லியில் மருத்துவமனைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

Comments Off on டில்லியில் மருத்துவமனைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

மின்னஞ்சல் மூலம் டில்லியில் உள்ள 4 மருத்துவமனைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நாடு முழுவதும் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. கடந்த சில வாரங்களாக டில்லி, குஜராத், ராஜஸ்தான் மாநிலங்களில் உள்ள பள்ளிகள், மருத்துவமனைகள், விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படும் சம்பவங்கள் தொடர்ந்து வருகின்றன. டில்லி மற்றும் தேசிய தலைநகர் பிராந்தியத்தில் கடந்த 1-ம் தேதி சுமார் 100 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டன. இதன் காரணமாக, […]

Continue reading …

மும்பை விளம்பர பலகை விபத்து!

Comments Off on மும்பை விளம்பர பலகை விபத்து!

நேற்று திடீரென மும்பையில் புழுதி புயல் வீசியதால் பெரும் சேதம் ஏற்பட்டது. குறிப்பாக ஒரு மிகப்பெரிய விளம்பர பலகை விழுந்ததில் 14 பேர் உயிரிழந்ததாகவும் 70-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்ததாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன. இவ்விவகாரத்தில் ஏற்கனவே அந்த விளம்பர பலகையை அகற்ற வேண்டும் என்று கடந்த ஆண்டு பிரதமர் மோடிக்கு அப்பகுதியில் உள்ள குடியிருப்பு சங்கத்தினர் புகார் மனு அனுப்பியதாகவும் ஆனால் அந்த புகார் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஒரு […]

Continue reading …

பங்குச்சந்தை குறித்து பிரச்சாரத்தில் அமித்ஷா பேச்சு

Comments Off on பங்குச்சந்தை குறித்து பிரச்சாரத்தில் அமித்ஷா பேச்சு

உள்துறை அமைச்சர் அமித்ஷா இப்போதே பங்குகளை வாங்கி கொள்ளுங்கள் ஜூன் 4-க்குப் பிறகு வாங்க முடியாது என்று தேர்தல் பிரச்சாரத்தில் கூறியுள்ளார். கடந்த சில நாட்களாக பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. தேர்தல் முடிவில் பாஜக மீண்டும் ஆட்சியமைத்தால் பங்குச்சந்தை மிகப்பெரிய அளவில் உயரும் என்று கூறப்படுகிறது. ஆனால் கடந்த சில நாட்களாக பங்குச்சந்தை சரிந்து வருவதால் பாஜக தோல்வியடைய வாய்ப்பிருப்பதாகவும் ஒரு வதந்தி பரவி வருகிறது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று தேர்தல் […]

Continue reading …

ஹிஜாப் அணிந்த பெண்தான் பிரதமர்; ஓவைசி பேச்சு!

Comments Off on ஹிஜாப் அணிந்த பெண்தான் பிரதமர்; ஓவைசி பேச்சு!

ஓவைசி பிரச்சாரத்தில், “ஹிஜாப் அணிந்த பெண் ஒருவர் இந்தியாவின் பிரதமர் ஆவார், ஆனால் அதை நான் பார்ப்பேனா என்று தெரியாது, ஆனால் கண்டிப்பாக என் கனவு ஒருநாள் நடக்கும்” என்று பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது ஓவைசி கடந்த சில நாட்களாக தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத் தொகுதியில் தீவிரமாக பிரச்சாரம் செய்தார். நேற்று ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியில் ஓவைசி, “இந்தியாவின் முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் பிரதமர் வருவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளது. […]

Continue reading …

ஆந்திர வாக்குச்சாவடியில் கலவரம்!

Comments Off on ஆந்திர வாக்குச்சாவடியில் கலவரம்!

ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், தெலுங்கு தேசம் கட்சியினர் இடையே ஆந்திர மாநிலம் வாக்குச்சாவடியில், மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இன்று நாட்டின் ஒருசில மாநிலங்களில் நான்காம் கட்ட பொதுத்தேர்தல் நடைபெற்று வருகிறது. ஆந்திராவில் இன்று பாராளுமன்ற தேர்தலோடு சட்டமன்ற தேர்தலில் நடைபெற்று வருகிறது. இதில் பாஜக, தெலுங்கு தேசம், பவன் கல்யாண் கட்சி, காங்கிரஸ் மற்றும் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் ஆகிய மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது. இன்று காலை 7 மணி முதல் ஆந்திராவில் பரபரப்பாக வாக்குகள் […]

Continue reading …

மீண்டும் சரியும் பங்குச்சந்தை!

Comments Off on மீண்டும் சரியும் பங்குச்சந்தை!

கடந்த சில நாட்களாக பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. இன்று வாரத்தின் முதல் நாள் பங்குச்சந்தை சென்செக்ஸ் 600 புள்ளிகளுக்கு மேல் சரிந்து உள்ளது முதலீட்டாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இன்று காலை மும்பை பங்குச்சந்தை தொடங்கியது முதலில் சரிவிலிருந்து வருகிறது. சற்று முன் 645 புள்ளிகள் சரிந்து 72,021 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது. அதேபோல் தேசிய பங்குச்சந்தை நிப்டி 193 புள்ளிகள் குறைந்து 21,822 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. […]

Continue reading …

உணவு சமைத்து பரிமாறிய பிரதமர் மோடி!

Comments Off on உணவு சமைத்து பரிமாறிய பிரதமர் மோடி!

சமூக வலைதளங்களில் பீகாரில் பிரதமர் நரேந்திர மோடி சீக்கியர்களுக்கு உணவு சமைத்து பரிமாறும் வீடியோ தற்போது வேகமாகப் பரவி வருகிறது. நாடு முழுவதும் 9 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசம் உட்பட்ட மொத்தம் 96 தொகுதிகளில் 4-ம் கட்ட மக்களவை தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. மக்களவை தேர்தல் பிரச்சாரத்துக்காக பீகார் சென்ற பிரதமர் நரேந்திர மோடி, பாட்னாவில் உள்ள சீக்கியர்களின் புனித தலமான குருத்வாராவுக்கு சென்றார். குருத்வாராவில் வழிபாடு […]

Continue reading …

பெண்களின் முகத்தை காட்ட சொன்ன பாஜக வேட்பாளர்!

Comments Off on பெண்களின் முகத்தை காட்ட சொன்ன பாஜக வேட்பாளர்!

பாஜக வேட்பாளர் மாதவி லதா மக்களவைத் தேர்தலில் வாக்களிக்க வந்த முஸ்லிம் பெண் வாக்காளர்களிடம் அடையாள அட்டையை வாங்கி சோதனை செய்ததால் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இன்று மக்களவைத் தேர்தலுக்கான நான்காம் கட்ட வாக்கு பதிவு நடைபெற்றது. ஹைதராபாத் மக்களவை தொகுதியில் பாஜக சார்பில் மாதவி லதா போட்டியிடுகிறார். கடந்த சில நாட்களுக்கு முன் தேர்தல் பிரச்சாரத்தின்போது மசூதியை பார்த்து அம்பு எய்வதுபோல் சைகை காட்டி சர்ச்சைக்குள்ளானார். இதற்கிடையே நான்காம் கட்டத் தேர்தலில் வாக்களிக்க பர்தா […]

Continue reading …

விபத்தால் சாலையில் சிதறிய பணக்கட்டுகள்!

Comments Off on விபத்தால் சாலையில் சிதறிய பணக்கட்டுகள்!

ஆந்திர மாநிலத்தில் உள்ள கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் நல்லஜார்லா பகுதியில் லாரி மீது மினி வேன் மோதி விபத்துக்குள்ளானது. மினி வேனில் மூட்டை மூட்டையாக இருந்த கோடிக்கணக்கான பணம் சாலையில் சிதறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தேர்தல் நேரம் என்பதால் பறக்கும் படையினர் கெடுபிடி அதிகமாக உள்ளது என்பதும் 50 ஆயிரம் மட்டுமே ரொக்கமாக பணம் கொண்டு செல்ல வேண்டும், அதற்கு மேல் கொண்டு சென்றால் உரிய ஆவணங்கள் காண்பிக்கப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. ஒரு மினி […]

Continue reading …