பிரதமர் மோடி உக்ரைன் சென்றடைந்தார். போலாந்து பயணத்தை முடித்துக்கொண்டு உக்ரைன் சென்ற பிரதமருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. நேற்று முன்தினம் 2 நாள் அரசு முறை பயணமாக பிரதமர் மோடி போலாந்து சென்றார். 45 ஆண்டுகளுக்குப்பின் முதல் முறையாக போலாந்து சென்ற முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையை மோடி பெற்றார். போலாந்தில் உள்ள இந்திய வம்சாவளியினர் மற்றும் தொழிலதிபர்களை பிரதமர் மோடி சந்தித்தார். இதனை தொடர்ந்து போலாந்து அதிபர் ஆண்ட்ரெஜ் டூடாவையும், மோடி சந்தித்து பேசினார். […]
Continue reading …நீதிபதி ஒருவர் மாதம் 6 லட்சத்துக்கு மேல் ஜீவனாம்சம் கேட்ட பெண்ணின் வழக்கறிஞரை லெப்ட் ரைட் வாங்கியுள்ளார். இது சம்பந்தப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பெண் ஒருவர் தனது முன்னாள் கணவரிடம் இருந்து தன்னுடைய பராமரிப்பு தொகையாக மாதம் 6 லட்சம் ரூபாய் ஜீவனாம்சம் கேட்டு கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இவ்வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போது பெண்ணின் வழக்கறிஞர் தனது கட்சிக்காரரின் பிசியோதெரபி செலவு, யோகா செலவு, மருத்துவ செலவு, காலணிகள் […]
Continue reading …கேரள மாநில தலைமைச் செயலாளர் பணியில் இருந்து ஓய்வு பெறும் அதே நாளில் அந்த பதவிக்கு அவருடைய மனைவி நியமனம் செய்யப்பட்டுள்ளார். கேரள மாநிலத்தின் தலைமைச் செயலாளராக இருக்கும் டாக்டர் வேணு என்பவர் ஆகஸ்ட் 31ம் தேதி ஓய்வு பெறுகிறார். இதையடுத்து அவருடைய மனைவி சாரதா முரளிதரன் அடுத்த தலைமை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளார். கணவர் ஓய்வு பெறும் அதே தலைமைச் செயலாளர் பதவியில் மனைவி உட்கார இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கணவர் வகித்த […]
Continue reading …மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக மத்திய அரசு கடுமையான சட்டத்தை இயற்ற வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார். கொல்கத்தாவில் பயிற்சி பெண் மருத்துவர், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. பிரதமர் நரேந்திர மோடிக்கு மம்தா பானர்ஜி கடிதம் எழுதியுள்ள கடிதத்தில், “நாடு முழுவதும் நடக்கும் பாலியல் வன்கொடுமை குறித்த வழக்குகள் கவலையளிப்பதாக உள்ளன. கிடைக்கக்கூடிய தரவுகளின்படி […]
Continue reading …தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசுப் பணிகளில் மூத்த அதிகாரிகளின் நேரடி நியமனத்துக்கான நடைமுறை ரத்து செய்யப்பட்டதற்கு வரவேற்பு தெரிவித்துள்ளார். மத்திய அரசுப் பணிகளில் மூத்த அதிகாரிகளின் நேரடி நியமனத்துக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. இதைத்தொடர்ந்து நேரடி நியமனத்துக்கான நடைமுறையை நிறுத்தி வைக்கும்படி, யுபிஎஸ்சி தலைவருக்கு மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் கடிதம் எழுதியுள்ளார். இதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வலைதளப்பதிவில், “சமூக நீதிக்கு வெற்றி. இந்தியா கூட்டணியின் […]
Continue reading …16 வயது சிறுமி பேருந்து ஓட்டுனர்கள், நடத்துனர் உள்ளிட்டோரால் கூட்டு பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 11ம் தேதி பஞ்சாப் மாநிலம் மொராதாபாத் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி மொரதாபாத்தில் இருந்து உத்தரகாண்ட்க்கு பேருந்தில் சென்றுள்ளார். உத்தரகாண்ட் மாநிலம் டெராடூனில் உள்ள பேருந்து நிலையத்திற்கு அதிகாலை 2.30 மணிக்கு சிறுமி வந்தடைந்துள்ளார். சிறுமி பேருந்தில் தனியாக இருப்பதை கவனித்த அந்த அரசு பேருந்தின் டிரைவரும், நடத்துனரும் மேலும் சில டிரைவர்களும் சேர்ந்து […]
Continue reading …கேரள முதலமைச்சர் நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட நிதி உதவி தொகையை வங்கிகள் கடனுக்காக பிடித்தம் செய்து கொண்டதாக செய்தி வெளியானது குறித்து தனது அதிர்ச்சியை தெரிவித்துள்ளார். சமீபத்தில் கேரள மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக ஏராளமானோர் தங்களது வீடு உடைமைகளை இழந்துள்ளனர்.அவர்களுக்கு உதவி தொகை வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது. ஆனால் உதவி தொகையிலிருந்து வங்கிகள் தங்களுக்கான கடன் தவணைகளை பிடித்தம் செய்துள்ளதாக வெளியான தகவல் குறித்து முதலமைச்சர் தனது அதிருப்தியை தெரிவித்துள்ளார். […]
Continue reading …ஜார்கண்ட் மாநிலத்தில் படுத்து கொண்டே ரசகுல்லா சாப்பிட்ட 17 வயது சிறுவன் தொண்டையில் ரசகுல்லா சிக்கி உயிரிழந்தார். 17 வயது சிறுவன், படுக்கையில் செல்போனில் கேம் விளையாடிக் கொண்டே சாப்பிட்ட ரசகுல்லா தொண்டையில் திடீரென அடைத்துக்கொண்டதை அடுத்து மூச்சு திணறி அச்சிறுவன் உயிரிழந்தார். ரசகுல்லா தொண்டையில் அடைத்ததும் சில நிமிடங்கள் மூச்சு விட சிரமப்பட்டதாகவும் அதன் பிறகு உயிர் இழந்ததாகவும் அந்த சிறுவனின் பெயர் அமித் சிங் என்றும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. வெளியூரில் வேலை […]
Continue reading …ரத்தன் டாடா தமிழகத்தில் ஓசூர் அருகே டாடா புதிய நகரத்தை உருவாக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. ஏற்கனவே டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் தமிழகத்தின் ஓசூரில் அமைந்துள்ளது. அதுமட்டுமின்றி தற்போது உற்பத்தி துறையை விரிவுபடுத்தும் வகையில் டாடா குழுமம் ஓசூரில் இரண்டு புதிய உற்பத்தி மையங்களை அமைக்க திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது. இதையடுத்து தங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் பணியாளர்கள் தங்குவதற்காக ஒரு புதிய நகரம் அமைக்கப்பட இருப்பதாகவும் ஓசூர் அருகே டாடா தனது […]
Continue reading …