Home » Archives by category » இந்தியா (Page 3)

ரத்தன் டாட்டாவின் புதிய நகரம் தமிழகத்திலா?

Comments Off on ரத்தன் டாட்டாவின் புதிய நகரம் தமிழகத்திலா?

    ரத்தன் டாடா தமிழகத்தில் ஓசூர் அருகே டாடா புதிய நகரத்தை உருவாக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. ஏற்கனவே டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் தமிழகத்தின் ஓசூரில் அமைந்துள்ளது. அதுமட்டுமின்றி தற்போது உற்பத்தி துறையை விரிவுபடுத்தும் வகையில் டாடா குழுமம் ஓசூரில் இரண்டு புதிய உற்பத்தி மையங்களை அமைக்க திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது. இதையடுத்து தங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் பணியாளர்கள் தங்குவதற்காக ஒரு புதிய நகரம் அமைக்கப்பட இருப்பதாகவும் ஓசூர் அருகே டாடா தனது […]

Continue reading …

கேரள வங்கி அறிவிப்பு!

Comments Off on கேரள வங்கி அறிவிப்பு!

கேரள வங்கி வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் வங்கியில் கடன் வாங்கி இருந்தால் அந்த கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என அதிரடியாக அறிவித்துள்ளது. திடீரென கடந்த மாதம் 30ம் தேதி வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக 400க்கும் அதிகமான பொதுமக்கள் பலியாகினர். ஆயிரக்கணக்கானோர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்திய ராணுவம் உள்பட மீட்பு படையினர் கடந்த பத்து நாட்களுக்கு மேலாக மீட்புப் பணியில் ஈடுபட்டனர். உயிரிழப்பு போக ஏராளமான பொருட்கள் சேதமடைந்திருப்பது அப்பகுதி […]

Continue reading …

சோனியா காந்தி &- உத்தவ் தாக்கரே சந்திப்பு?

Comments Off on சோனியா காந்தி &- உத்தவ் தாக்கரே சந்திப்பு?

சோனியா காந்தியை டில்லிக்கு சென்று உத்தவ் தாக்கரே சந்தித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மகாராஷ்டிரா மாநில தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதையடுத்து சோனியா காந்தி முதலமைச்சர் வேட்பாளராக அறிவிப்பார் என்று கூறப்படுகிறது. டில்லிக்கு மகாராஷ்டிரா முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே சென்றுள்ளார். அங்கு அவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, சுனிதா கெஜ்ரிவால் உள்ளிட்டவரை சந்தித்தார். அடுத்ததாக சோனியா காந்தி உடன் சந்திப்பு நடத்தி உள்ளதாகவும் இச்சந்திப்பின்போது காங்கிரஸ் மற்றும் சிவசேனா கூட்டணி, முதலமைச்சர் வேட்பாளர் குறித்து […]

Continue reading …

மணீஷ் சிசோடியாவுக்கு நிபந்தனை ஜாமீன்!

Comments Off on மணீஷ் சிசோடியாவுக்கு நிபந்தனை ஜாமீன்!

முன்னாள் டில்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக அமலாக்கத் துறை மற்றும் சிபிஐ தொடர்ந்த இரண்டு வழக்குகளில் இருந்தும் உச்ச நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது. கடந்த ஆண்டு பிப்ரவரி 26-ம் தேதி டில்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் மணிஷ் சிசோடியாவை சிபிஐ கைது செய்தது. அதே ஆண்டு மார்ச் 9ம் தேதி அவரை பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்க துறையும் […]

Continue reading …

நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி கோரிக்கை!

Comments Off on நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி கோரிக்கை!

பிரதமர் மோடி தேசியக் கொடியுடன் செல்ஃபி எடுத்து இணையதளத்தில் பகிர வேண்டுமென்று நாட்டு மக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். 77வது சுதந்திர தினம் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட இருக்கிறது. அன்றைய தினம் டில்லி செங்கோட்டையில், தேசியக்கொடி ஏற்றி நாட்டு மக்கள் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றவுள்ளார். அதற்கான பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தேசியக் கொடியுடன் மக்கள் செல்ஃபி எடுத்து இணையதளத்தில் பகிர வேண்டுமென்று பிரதமர் மோடி கோரிக்கை விடுத்துள்ளார். […]

Continue reading …

ஓய்வை அறிவித்த வினேஷ் போகத்!

Comments Off on ஓய்வை அறிவித்த வினேஷ் போகத்!

இந்திய வீராங்கனை வினேஷ் போகத் மல்யுத்தத்தில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். மல்யுத்தம் என்னை வீழ்த்திவிட்டதாக வினேஷ் போகத் வேதனையுடன் பதிவு செய்துள்ளார். இதற்கு மேல் போராட தன்னிடம் பலம் இல்லை என உருக்கமாக கூறியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும், “என்னை மன்னியுங்கள் அம்மா, மல்யுத்தம் என்னை வென்றுவிட்டது, நான் தோற்றுவிட்டேன். உங்கள் கனவுகளும் என் தைரியமும் உடைந்துவிட்டது. இனியும் சண்டையிட எனக்கு வலிமை இல்லை” என்று கூறியுள்ளார். பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட […]

Continue reading …

உத்தவ் தாக்கரேவை அரவிந்த் கெஜ்ரிவால் மனைவியுடன் சந்திப்பு?

Comments Off on உத்தவ் தாக்கரேவை அரவிந்த் கெஜ்ரிவால் மனைவியுடன் சந்திப்பு?

உத்தவ் தாக்கரேவை டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெதர்வால் மனைவி சுனிதா சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் இல்லத்திற்கு சிவ சேனா தலைவர் உத்தவ் தாக்கரே சென்று அவரது மனைவி சுனிதாவை சந்தித்துள்ளார். இச்சந்திப்பின்போது சிவசேனா கட்சியின் மூத்த தலைவர்கள் சிலர் மற்றும் அதேபோல் ஆம் ஆத்மி கட்சியின் சிலர் உடன் இருந்ததாகவும் கூறப்படுகிறது. மகாராஷ்டிரா, அரியானா, ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. சிவசேனா, ஆம் ஆத்மி ஆகிய […]

Continue reading …

இன்னொரு இந்திய வீராங்கனை தகுதிநீக்கம்!

Comments Off on இன்னொரு இந்திய வீராங்கனை தகுதிநீக்கம்!

வினேஷ் போகத் ஏற்கனவே ஒலிம்பிக் போட்டியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். தற்போது இன்னொரு இந்திய மல்யுத்த வீராங்கனையும் தகுதி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். பாரிஸ் நகரில் கடந்த சில நாட்களாக ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. மல்யுத்தம் 50 கிலோ எடை பிரிவில் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற இந்திய வீராங்கனை வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது ஒலிம்பிக் விதிகளை மீறியதற்காக இந்திய மல்யுத்த வீராங்கனை ஆண்டிம் பங்கல் என்பவர் தகுதி […]

Continue reading …

வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதா மக்களவையில் காரசார விவாதம்!

Comments Off on வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதா மக்களவையில் காரசார விவாதம்!

காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் வக்பு வாரியத்தில் இஸ்லாமியர் அல்லாதவர் உறுப்பினராக முடியும் என்பது மத சுதந்திரத்துக்கு எதிரானது என்றும் வக்பு வாரிய சட்டதிருத்தம் இஸ்லாமியர்ளுக்கு முற்றிலும் எதிரானது என்றும் மக்களவையில் விமர்சித்துள்ளன. மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ முஸ்லிம்களின் சமூக, பொருளாதார நலன்களுக்கான வக்பு வாரியத்தின் அதிகாரங்களைக் குறைக்க வகை செய்யும் சட்ட திருத்த மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்தார். இந்த மசோதாவிற்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பேசிய காங்கிரஸ் […]

Continue reading …

வினேஷ் போகத் தகுதி நீக்கம்; ராகுல் காந்தி வருத்தம்!

Comments Off on வினேஷ் போகத் தகுதி நீக்கம்; ராகுல் காந்தி வருத்தம்!

காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில் இந்திய ஒலிம்பிக் சங்கம் கடுமையாக எதிர்த்து நாட்டின் மகளுக்கு நீதி வழங்கும் என்ற முழு நம்பிக்கை எங்களுக்கு உள்ளது என்று தெரிவித்துள்ளார். வினேஷ் போகத் ஒலிம்பிக் மல்யுத்தத்தில் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ள நிலையில் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 50 கிலோ எடை பிரிவில் பங்கேற்றுள்ள வினேஷ் போகத் கூடுதலாக 100 கிராம் எடை இருந்ததால் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. வினேஷ் […]

Continue reading …