சோனியா காந்தியை டில்லிக்கு சென்று உத்தவ் தாக்கரே சந்தித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மகாராஷ்டிரா மாநில தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதையடுத்து சோனியா காந்தி முதலமைச்சர் வேட்பாளராக அறிவிப்பார் என்று கூறப்படுகிறது. டில்லிக்கு மகாராஷ்டிரா முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே சென்றுள்ளார். அங்கு அவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, சுனிதா கெஜ்ரிவால் உள்ளிட்டவரை சந்தித்தார். அடுத்ததாக சோனியா காந்தி உடன் சந்திப்பு நடத்தி உள்ளதாகவும் இச்சந்திப்பின்போது காங்கிரஸ் மற்றும் சிவசேனா கூட்டணி, முதலமைச்சர் வேட்பாளர் குறித்து […]
Continue reading …முன்னாள் டில்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக அமலாக்கத் துறை மற்றும் சிபிஐ தொடர்ந்த இரண்டு வழக்குகளில் இருந்தும் உச்ச நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது. கடந்த ஆண்டு பிப்ரவரி 26-ம் தேதி டில்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் மணிஷ் சிசோடியாவை சிபிஐ கைது செய்தது. அதே ஆண்டு மார்ச் 9ம் தேதி அவரை பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்க துறையும் […]
Continue reading …பிரதமர் மோடி தேசியக் கொடியுடன் செல்ஃபி எடுத்து இணையதளத்தில் பகிர வேண்டுமென்று நாட்டு மக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். 77வது சுதந்திர தினம் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட இருக்கிறது. அன்றைய தினம் டில்லி செங்கோட்டையில், தேசியக்கொடி ஏற்றி நாட்டு மக்கள் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றவுள்ளார். அதற்கான பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தேசியக் கொடியுடன் மக்கள் செல்ஃபி எடுத்து இணையதளத்தில் பகிர வேண்டுமென்று பிரதமர் மோடி கோரிக்கை விடுத்துள்ளார். […]
Continue reading …இந்திய வீராங்கனை வினேஷ் போகத் மல்யுத்தத்தில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். மல்யுத்தம் என்னை வீழ்த்திவிட்டதாக வினேஷ் போகத் வேதனையுடன் பதிவு செய்துள்ளார். இதற்கு மேல் போராட தன்னிடம் பலம் இல்லை என உருக்கமாக கூறியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும், “என்னை மன்னியுங்கள் அம்மா, மல்யுத்தம் என்னை வென்றுவிட்டது, நான் தோற்றுவிட்டேன். உங்கள் கனவுகளும் என் தைரியமும் உடைந்துவிட்டது. இனியும் சண்டையிட எனக்கு வலிமை இல்லை” என்று கூறியுள்ளார். பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட […]
Continue reading …உத்தவ் தாக்கரேவை டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெதர்வால் மனைவி சுனிதா சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் இல்லத்திற்கு சிவ சேனா தலைவர் உத்தவ் தாக்கரே சென்று அவரது மனைவி சுனிதாவை சந்தித்துள்ளார். இச்சந்திப்பின்போது சிவசேனா கட்சியின் மூத்த தலைவர்கள் சிலர் மற்றும் அதேபோல் ஆம் ஆத்மி கட்சியின் சிலர் உடன் இருந்ததாகவும் கூறப்படுகிறது. மகாராஷ்டிரா, அரியானா, ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. சிவசேனா, ஆம் ஆத்மி ஆகிய […]
Continue reading …வினேஷ் போகத் ஏற்கனவே ஒலிம்பிக் போட்டியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். தற்போது இன்னொரு இந்திய மல்யுத்த வீராங்கனையும் தகுதி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். பாரிஸ் நகரில் கடந்த சில நாட்களாக ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. மல்யுத்தம் 50 கிலோ எடை பிரிவில் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற இந்திய வீராங்கனை வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது ஒலிம்பிக் விதிகளை மீறியதற்காக இந்திய மல்யுத்த வீராங்கனை ஆண்டிம் பங்கல் என்பவர் தகுதி […]
Continue reading …காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் வக்பு வாரியத்தில் இஸ்லாமியர் அல்லாதவர் உறுப்பினராக முடியும் என்பது மத சுதந்திரத்துக்கு எதிரானது என்றும் வக்பு வாரிய சட்டதிருத்தம் இஸ்லாமியர்ளுக்கு முற்றிலும் எதிரானது என்றும் மக்களவையில் விமர்சித்துள்ளன. மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ முஸ்லிம்களின் சமூக, பொருளாதார நலன்களுக்கான வக்பு வாரியத்தின் அதிகாரங்களைக் குறைக்க வகை செய்யும் சட்ட திருத்த மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்தார். இந்த மசோதாவிற்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பேசிய காங்கிரஸ் […]
Continue reading …காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில் இந்திய ஒலிம்பிக் சங்கம் கடுமையாக எதிர்த்து நாட்டின் மகளுக்கு நீதி வழங்கும் என்ற முழு நம்பிக்கை எங்களுக்கு உள்ளது என்று தெரிவித்துள்ளார். வினேஷ் போகத் ஒலிம்பிக் மல்யுத்தத்தில் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ள நிலையில் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 50 கிலோ எடை பிரிவில் பங்கேற்றுள்ள வினேஷ் போகத் கூடுதலாக 100 கிராம் எடை இருந்ததால் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. வினேஷ் […]
Continue reading …தேர்தல் ஆணையம் வருகிற செப்டம்பர் 3ம் தேதி காலியாக உள்ள 12 மாநிலங்களவை இடங்களுக்கு தேர்தல் நடைபெறும் என்று தெரிவித்துள்ளது. மொத்தம் 245 உறுப்பினர்கள் மாநிலங்களவையில் இருக்கின்றனர். இவர்களில் 233 பேர் தேர்தல் மூலமும், 12 பேர் நியமன பதவி மூலமும் தேர்ந்தெடுக்கப்படுவர். இவர்களின் பதவி காலம் 6 ஆண்டுகள் ஆகும். பியூஷ் கோயல், சர்பானந்தா சோனோவால், ஜோதிராதித்ய சிந்தியா உள்ளிட்ட மாநிலங்களவை எம்.பி.க்களாக இருந்த 10 பேர் மக்களவை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர் தெலுங்கானா, […]
Continue reading …பஞ்சாப் முதலமைச்சர் பகவத் மான் சிங் உடல் எடை அதிகமானதை அவரது பயிற்சியாளர்கள் கவனிக்கவில்லையா? அவர்கள் பயிற்சி கொடுக்க சென்றார்களா? அல்லது விடுமுறைக்கு சென்றார்களா? என ஆவேசமாக கூறியுள்ளார். பஞ்சாப் முதலமைச்சர் பகவத்மான் ஒலிம்பிக் போட்டியில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வினேஷ் போகத்தின் வீட்டுக்கு சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியுள்ளார். பின் செய்தியாளர்களிடம் அவர், “இந்த தவறு உயர்மட்ட அளவில் நடந்துள்ளது. பயிற்சியாளர்கள் லட்சக்கணக்கில் சம்பளம் பெறும் நிலையில் அவர்கள் உடல் எடையை முதலில் கவனிக்க […]
Continue reading …