Home » Archives by category » இந்தியா (Page 2)

திருப்பதியில் கிலோ கணக்கில் நகையுடன் வழிபட்ட குடும்பம்!

Comments Off on திருப்பதியில் கிலோ கணக்கில் நகையுடன் வழிபட்ட குடும்பம்!

  கிலோ கணக்கில் தங்க நகைகளை அணிந்து கொண்டு திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் சுவாமியை தரிசனம் செய்தனர். நாள்தோறும் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். மகாராஷ்டிரா மாநிலம் பூனாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் சன்னி, சஞ்சய், பிரீத்தி ஆகிய விஐபி தரிசனத்தில் ஏழுமலையானை வழிபட்டனர். அதில் ஆண்கள் இருவரும் தங்களது கழுத்து நிறைய தங்கச் சங்கிலிகளை அணிந்திருந்தனர். உடன் […]

Continue reading …

ஏர் இந்தியா நிறுவனத்திற்கு ரூ.98 லட்சம் அபராதம்!

Comments Off on ஏர் இந்தியா நிறுவனத்திற்கு ரூ.98 லட்சம் அபராதம்!

சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் போதிய பணியாளர்கள் இல்லாமல் விமானங்களை இயக்கியதாக எழுந்து புகாரில், ஏர் இந்தியா நிறுவனத்திற்கு ரூ.98 லட்சம் அபராதம் விதித்துள்ளது. சமீப காலமாக ஏர் இந்தியா நிறுவனம் பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகிறது. அவ்வகையில், சில தினங்களுக்கு முன் லண்டனில் ஓட்டல் அறையில் ஏர் இந்தியாவில் பணியாற்றும் பெண் ஊழியர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அதேபோல், நேற்று மும்பையில் இருந்து 135 பயணிகளுடன் திருவனந்தபுரம் வந்த ஏர் இந்தியா விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் […]

Continue reading …

பிரதமர் மோடி உக்ரைன் பயணம்!

Comments Off on பிரதமர் மோடி உக்ரைன் பயணம்!

பிரதமர் மோடி உக்ரைன் சென்றடைந்தார். போலாந்து பயணத்தை முடித்துக்கொண்டு உக்ரைன் சென்ற பிரதமருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. நேற்று முன்தினம் 2 நாள் அரசு முறை பயணமாக பிரதமர் மோடி போலாந்து சென்றார். 45 ஆண்டுகளுக்குப்பின் முதல் முறையாக போலாந்து சென்ற முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையை மோடி பெற்றார். போலாந்தில் உள்ள இந்திய வம்சாவளியினர் மற்றும் தொழிலதிபர்களை பிரதமர் மோடி சந்தித்தார். இதனை தொடர்ந்து போலாந்து அதிபர் ஆண்ட்ரெஜ் டூடாவையும், மோடி சந்தித்து பேசினார். […]

Continue reading …

ஜீவனாம்சம் கேட்ட பெண்ணின் வழக்கறிஞரை லெப்ட் ரைட் வாங்கிய நீதிபதி!

Comments Off on ஜீவனாம்சம் கேட்ட பெண்ணின் வழக்கறிஞரை லெப்ட் ரைட் வாங்கிய நீதிபதி!

நீதிபதி ஒருவர் மாதம் 6 லட்சத்துக்கு மேல் ஜீவனாம்சம் கேட்ட பெண்ணின் வழக்கறிஞரை லெப்ட் ரைட் வாங்கியுள்ளார். இது சம்பந்தப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பெண் ஒருவர் தனது முன்னாள் கணவரிடம் இருந்து தன்னுடைய பராமரிப்பு தொகையாக மாதம் 6 லட்சம் ரூபாய் ஜீவனாம்சம் கேட்டு கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இவ்வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போது பெண்ணின் வழக்கறிஞர் தனது கட்சிக்காரரின் பிசியோதெரபி செலவு, யோகா செலவு, மருத்துவ செலவு, காலணிகள் […]

Continue reading …

கணவர் பதவிக்கு மனைவி நியமனம்!

Comments Off on கணவர் பதவிக்கு மனைவி நியமனம்!

கேரள மாநில தலைமைச் செயலாளர் பணியில் இருந்து ஓய்வு பெறும் அதே நாளில் அந்த பதவிக்கு அவருடைய மனைவி நியமனம் செய்யப்பட்டுள்ளார். கேரள மாநிலத்தின் தலைமைச் செயலாளராக இருக்கும் டாக்டர் வேணு என்பவர் ஆகஸ்ட் 31ம் தேதி ஓய்வு பெறுகிறார். இதையடுத்து அவருடைய மனைவி சாரதா முரளிதரன் அடுத்த தலைமை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளார். கணவர் ஓய்வு பெறும் அதே தலைமைச் செயலாளர் பதவியில் மனைவி உட்கார இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கணவர் வகித்த […]

Continue reading …

பிரதமருக்கு மம்தா கடிதம்!

Comments Off on பிரதமருக்கு மம்தா கடிதம்!

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக மத்திய அரசு கடுமையான சட்டத்தை இயற்ற வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார். கொல்கத்தாவில் பயிற்சி பெண் மருத்துவர், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. பிரதமர் நரேந்திர மோடிக்கு மம்தா பானர்ஜி கடிதம் எழுதியுள்ள கடிதத்தில், “நாடு முழுவதும் நடக்கும் பாலியல் வன்கொடுமை குறித்த வழக்குகள் கவலையளிப்பதாக உள்ளன. கிடைக்கக்கூடிய தரவுகளின்படி […]

Continue reading …

யுபிஎஸ்சி நேரடி நியமன முறைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வரவேற்பு!

Comments Off on யுபிஎஸ்சி நேரடி நியமன முறைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வரவேற்பு!

  தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசுப் பணிகளில் மூத்த அதிகாரிகளின் நேரடி நியமனத்துக்கான நடைமுறை ரத்து செய்யப்பட்டதற்கு வரவேற்பு தெரிவித்துள்ளார். மத்திய அரசுப் பணிகளில் மூத்த அதிகாரிகளின் நேரடி நியமனத்துக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. இதைத்தொடர்ந்து நேரடி நியமனத்துக்கான நடைமுறையை நிறுத்தி வைக்கும்படி, யுபிஎஸ்சி தலைவருக்கு மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் கடிதம் எழுதியுள்ளார். இதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வலைதளப்பதிவில், “சமூக நீதிக்கு வெற்றி. இந்தியா கூட்டணியின் […]

Continue reading …

சிறுமி கூட்டு பலாத்காரம்! 5 பேர் கைது!

Comments Off on சிறுமி கூட்டு பலாத்காரம்! 5 பேர் கைது!

16 வயது சிறுமி பேருந்து ஓட்டுனர்கள், நடத்துனர் உள்ளிட்டோரால் கூட்டு பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 11ம் தேதி பஞ்சாப் மாநிலம் மொராதாபாத் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி மொரதாபாத்தில் இருந்து உத்தரகாண்ட்க்கு பேருந்தில் சென்றுள்ளார். உத்தரகாண்ட் மாநிலம் டெராடூனில் உள்ள பேருந்து நிலையத்திற்கு அதிகாலை 2.30 மணிக்கு சிறுமி வந்தடைந்துள்ளார். சிறுமி பேருந்தில் தனியாக இருப்பதை கவனித்த அந்த அரசு பேருந்தின் டிரைவரும், நடத்துனரும் மேலும் சில டிரைவர்களும் சேர்ந்து […]

Continue reading …

கேரள முதலமைச்சர் வங்கிகள் மீது அதிருப்தி!

Comments Off on கேரள முதலமைச்சர் வங்கிகள் மீது அதிருப்தி!

கேரள முதலமைச்சர் நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட நிதி உதவி தொகையை வங்கிகள் கடனுக்காக பிடித்தம் செய்து கொண்டதாக செய்தி வெளியானது குறித்து தனது அதிர்ச்சியை தெரிவித்துள்ளார். சமீபத்தில் கேரள மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக ஏராளமானோர் தங்களது வீடு உடைமைகளை இழந்துள்ளனர்.அவர்களுக்கு உதவி தொகை வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது. ஆனால் உதவி தொகையிலிருந்து வங்கிகள் தங்களுக்கான கடன் தவணைகளை பிடித்தம் செய்துள்ளதாக வெளியான தகவல் குறித்து முதலமைச்சர் தனது அதிருப்தியை தெரிவித்துள்ளார். […]

Continue reading …

ரசகுல்லா சாப்பிட்ட சிறுவன் உயிரிழப்பு!

Comments Off on ரசகுல்லா சாப்பிட்ட சிறுவன் உயிரிழப்பு!

  ஜார்கண்ட் மாநிலத்தில் படுத்து கொண்டே ரசகுல்லா சாப்பிட்ட 17 வயது சிறுவன் தொண்டையில் ரசகுல்லா சிக்கி உயிரிழந்தார். 17 வயது சிறுவன், படுக்கையில் செல்போனில் கேம் விளையாடிக் கொண்டே சாப்பிட்ட ரசகுல்லா தொண்டையில் திடீரென அடைத்துக்கொண்டதை அடுத்து மூச்சு திணறி அச்சிறுவன் உயிரிழந்தார். ரசகுல்லா தொண்டையில் அடைத்ததும் சில நிமிடங்கள் மூச்சு விட சிரமப்பட்டதாகவும் அதன் பிறகு உயிர் இழந்ததாகவும் அந்த சிறுவனின் பெயர் அமித் சிங் என்றும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. வெளியூரில் வேலை […]

Continue reading …