ஐஏஎஸ் பயிற்சி அதிகாரியாக இருந்த பூஜா கேட்கர் தலைமறைவாக இருந்ததாக கூறப்பட்டது. தற்போது அவர் வெளிநாட்டுக்கு தப்பி ஓடி விட்டதாக கூறப்படுகிறது. பூஜா கேட்கர் புனேவில் உதவி கலெக்டராக நியமனம் செய்யப்பட்டிருந்தார். கலெக்டரின் அதிகாரத்தில் தலையிடுவதாக குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து அவர் மோசடி செய்துதான் ஐஏஎஸ் பயிற்சியில் தேர்ச்சி பெற்றுள்ளார் என்ற விபரங்கள் கண்டுபிடிக்கப்பட்டது.இந்த விவகாரத்தில் விசாரணை நடத்தியபோது பல அதிர்ச்சி தரும் செய்திகள் வெளியாகின. ஐஏஎஸ் தேர்வு எழுதுவதற்கு முன் அவர் தன்னுடைய பெயரை மாற்றி […]
Continue reading …காவிரியில் நீர்வரத்து 5 ஆண்டுகளுக்கு பின், 2 லட்சம் கனஅடியை தாண்டியுள்ளது. இதனால் ஒகேனக்கல் பகுதியில் தீவாக மாறியுள்ளது. இதனால் ஒகேனக்கல் பகுதியில் எங்கு பார்த்தாலும் தண்ணீராக காட்சியளிப்பதாகவும் கூறப்படுகிறது. கடந்த 2019ம் ஆண்டு 2 லட்சம் கன அடிக்கு மேல் நீர்வரத்து வந்தது. 5 ஆண்டுகள் கழித்து தற்போது 2 லட்சம் கன அடியை தாண்டியுள்ளது. திரும்பும் திசை எல்லாம் கடல் போல் ஒகேனக்கல் காட்சி அளிப்பதாகவும், கரையோர வீடுகளை காவிரி நீர் சூழ்ந்துள்ளதாகவும் செய்திகள் […]
Continue reading …நடிகர் சூர்யா வயநாடு நிலச்சரிவால் பாதிப்படைந்த மக்களுக்கு இரங்கல் தெரிவித்தார். தற்போது சூர்யா, ஜோதிகா, கார்த்தி தரப்பில் ஒரு மிகப்பெரிய தொகையை நிவாரண நிதியாக வழங்கியிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வயநாடு பகுதியில் உள்ள 3 கிராமங்களில் நேற்று முன்தினம் அதிகாலை நிலச்சரிவு ஏற்பட்டு பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. இதன் காரணமாக ஏராளமான மக்கள் மண்ணில் உயிரோடு புதைந்திருப்பதாகவும் இதுவரை கிட்டத்தட்ட 200க்கும் மேற்பட்ட உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்யும் விதமாக நடிகர்கள் […]
Continue reading …இந்திய வீரர் ஸ்வப்னில் குசாலே பாரிஸ் ஒலிம்பிக் ஆடவர் 50 மீட்டர் ரைபிள் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார். பிரான்ஸ் தலைநகரான பாரிஸில் 33-வது ஒலிம்பிக் திருவிழா நடைபெற்று வருகிறது. 26-ம் தேதி தொடங்கிய ஒலிம்பிக் திருவிழா ஆகஸ்ட் மாதம் 11-ம் தேதி வரை நடைபெற உள்ளது. 50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷன்ஸ் இறுதிச் சுற்றில், இந்திய வீரர் ஸ்வப்னில் குசாலே வெண்கலம் வென்று அசத்தியுள்ளார். அவர் 451.4 புள்ளிகள் பெற்று 3-ம் இடம் […]
Continue reading …கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவுக்கு ஆளுநர் தாவர்சந்த் கெலாட் மனைவி பார்வதிக்கு, மைசூருவில் 14 வீட்டு மனைகள் ஒதுக்கியதில் முறைகேடு நடந்ததாக எழுந்து புகாரில் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளார். கர்நாடக மாநிலம் மைசூரிலுள்ள மூடா எனும் மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் பயனாளிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தில் 4,000 கோடி ரூபாய்க்கு முறைகேடு நடந்து இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. கர்நாடக முதலமைச்சரின் மனைவி பார்வதிக்கு மைசூரு விஜயநகர் பகுதியில் 14 வீட்டு மனைகள் ஒதுக்கப்பட்டன. இதில், […]
Continue reading …சைபர் கிரைம் காவல்துறை டில்லியைச் சேர்ந்த மோசடி நபரை அதிரடியாக கைது செய்துள்ளது. தேனி, கெங்குவார்பட்டியை சேர்ந்த பானுமதி (74) சென்னை ஐஐடி மற்றும் அமெரிக்காவில் உள்ள நார்த் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் முதுகலை ஆராய்ச்சியாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரிடம் மும்பை காவல் நிலையத்திலிருந்து பேசுவதாக கூறி அவரின் ஆதார் எண் மூலம் சிம் கார்ட் வாங்கப்பட்டிருப்பதாகவும், அந்த சிம் வாட்ஸ் அப் மூலம் pornographic images பொதுமக்களுக்கு அனுப்பப்பட்டிருக்கிறதாகவும், மும்பை கனரா வங்கிகணக்குடன் இணைக்கப்பட்டிருப்பதாகவும் அதன் […]
Continue reading …முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கனமழை மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள கேரள அரசுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் ரூ.5 கோடி நிதி உதவி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். கேரள மாநிலம் வயநாடு பகுதியில் கடுமையான மழைப்பொழிவின் காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் விலைமதிக்க முடியாத உயிரிழப்புகளும், பொதுச் சொத்துக்களுக்கு சேதமும் ஏற்பட்டுள்ளது. இன்று கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயனை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசினார். இந்த இயற்கை […]
Continue reading …