
பாஜக தொண்டர் வீட்டில் திடீரென வெடிகுண்டு வெடித்துள்ள சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது. கேரளாவில் உள்ள கண்ணூர் பகுதியில் பாஜக தொண்டர் சந்தோஷ் வீட்டில் சமையலறையில் திடீரென வெடிகுண்டு வெடித்தது. இதில் சந்தோஷ் கையில் மட்டும் காயம் ஏற்பட்டதாகவும் அவருடைய குடும்பத்தினர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் உடனடியாக வெடிகுண்டு நிபுணர்களுடன் வந்து விசாரணை செய்தனர். இந்த விவகாரத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவரிடம் விசாரணை நடத்தப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. […]
Continue reading …
சிறுமி ஒருவரிடம் மும்பையில் இளைஞர் ஒருவர் இன்ஸ்டாவில் பாலோயர்ஸை அதிகரிப்பதாகக் கூறி ரூ.55 ஆயிரம் பணம் மோசடி செய்துள்ளார். சமூக வலைதளங்களில் பொதுமக்கள் முதல் பிரபலங்கள் வரையிலும் பலரிடம் பணமோசடி அதிகரித்துள்ளது. சில தினங்களுக்கு முன் பிரபல நடிகை ஸ்வேதா மேனனிடம் மர்ம நபர்கள் வங்கி விவங்களைப் பெற்றுக்கொண்டு, அவரது வங்கிக் கணக்கில் இருந்து ரூ.50,000க்கும் அதிகமான பணத்தை மோசடி செய்தனர். இதுகுறித்து, காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்நிலையில், இன்று மும்பையில் மீண்டும் […]
Continue reading …
கடந்த 10 மாதங்களில் இந்தியாவில் கிரெடிட் கார்டு பயன்பாடு புதிய உச்சம் அடைந்துள்ளதாகவும், 20% வளர்ச்சி அடைந்துள்ளதாகவும் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இந்திய ரிசர்வ் வங்கியின் தரவுகளின்படி, கடந்த ஜனவரி மாதம் கிரெடிட் கார்டு நிலுவைத் தொகை 29.6 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும், ஜனவரியில் மொத்த நிலுவைத் தொகை 1,86,783 கோடி ரூபாய் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கிரெடிட் கார்டு பயன்பாட்டின் புதிய உச்சம் ஆகும். இது கடந்த ஆண்டு ஜனவரியில் 1,41,254 கோடி ரூபாயாக நிலுவை தொகை […]
Continue reading …
தமிழக முதலமைச்சரும், கேரள முதலமைச்சர் இருவரும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்ளும்நிகழ்ச்சி நடைபெற உள்ளதால் பாதுகாப்பு ஏற்படுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கடந்த இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 1822ம் ஆண்டு திருவதாங்கூர் மன்னர் ஆட்சி காலத்தில் ஒரு சில சமூகத்தை சேர்ந்த பெண்கள் தோல் சீலை அணியக்கூடாது என்ற கட்டுப்பாடு இருந்தது. இதற்கு தெரிவித்து நடந்த தோல்சீலை போராட்டத்தில் பெண்கள் வெற்றி பெற்றனர். இந்த போராட்டத்தின் வெற்றியை குறிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் தோல் சீலை போராட்டம் பொதுக்கூட்டம் […]
Continue reading …
சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட மசோதாவிற்கு ஒப்புதல் வழங்க தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் காலம் தாழ்த்துவதாக உச்ச நீதிமன்றத்தில் சமீபத்தில் வழக்கு தொடரப்பட்டது. தெலுங்கானா சட்டப்பேரையில் நிறைவேற்றப்பட்ட 10 மசோதாக்கள் ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் கடந்த செப்டம்பர் 14ம் தேதிக்கு பிறகு எந்த மசோதாவுக்கும் ஒப்புதல் அளிக்கவில்லை என தெரிகிறது. இதுகுறித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ள தெலுங்கானா அரசு “ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டிய கடமையை செய்யாமல் காலம் தாழ்த்துகிறார். அரசியல் அமைப்பு சட்டம் […]
Continue reading …
85 வயது முதியவர் ஒருவர் பெற்ற பிள்ளைகளால் ஏற்பட்ட விரக்தியின் காரணமாக ஒன்றரை கோடி ரூபாய் சொத்துக்களை அரசுக்கு எழுதி வைத்துள்ளார். உத்தர பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த நாத் சிங் 85 வயது முதியவர் கடைசி காலத்தில் தன்னை பெற்ற பிள்ளைகள் கவனித்துக் கொள்ளவில்லை என்று கூறியிருந்தார். இதையடுத்து அவர் பிள்ளைகளால் மனவிரக்தி அடைந்து தனக்கு சொந்தமான 1.5 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை உத்தர பிரதேச மாநில அரசுக்கு வழங்குவதாக உயிர் எழுத்து வைத்துள்ளார். அதுமட்டுமின்று […]
Continue reading …
15 வயது சிறுமி இன்ஸ்டாகிராம் மூலம் காதலில் விழுந்துள்ளார். இதனால் கர்ப்பவதியான அவர் சுயபிரசவம் செய்ததால் அவருக்கு பெரும் விபரீதம் ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய ஆணுடன் அடிக்கடி உல்லாசமாக இருந்ததன் விளைவாக அவர் சில மாதங்களிலேயே கர்ப்பமாகியுள்ளார். கர்ப்பத்தை யாருக்கும் தெரியாமல் மறைத்துள்ளார். இந்நிலையில் பிரசவத்திற்கு மருத்துவமனைக்கு சென்றால் அனைவருக்கும் தெரிந்து விடக்கூடும் என்று பயந்ததால், அவர் யூடியூபில் பார்த்து சுயபிரசவம் செய்ய முடிவு செய்துள்ளார். இதையடுத்து […]
Continue reading …
வடமாநில தொழிலாளர்கள் குறித்து பீகார் மாநிலத்தின் முக்கிய அரசியல்வாதி “நிதிஷ்குமாரின் தவறான அணுகுமுறையே காரணம்” என்று குற்றஞ்சாட்டியுள்ளார். இந்தக் குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக தமிழ்நாட்டில் வட மாநில தொழிலாளர்கள் பீகார் தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்ற போலியான வீடியோக்கள் வதந்தியாக பரவி வருகிறது. இது குறித்து தமிழக மற்றும் பீகார் மாநில அரசு தகுந்த நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும் பிகார் அரசு அனுப்பிய நான்கு நபர்கள் குழு வட மாநில தொழிலாளர்கள் மத்தியில் […]
Continue reading …
மாணவர்கள் சுற்றுலாவுக்கு சென்ற பேருந்து கவிழ்ந்ததில் விபத்து ஏற்பட்டு 40 பேர் காயமடைந்துள்ளனர். டில்லி பல்கலைக்கழக மாணவர்கள், ஆறு ஒருங்கிணைப்பாளர்கள் என மொத்தம் 44 பேர் மணாலிக்குச் சுற்றுலா பயணம் சென்றனர். அவர்கள் சென்ற பேருந்து இன்று பிலாஸூர் அருகே சண்டிகரிலிருந்து மணாலி சாலையில் சென்று கொடிருக்கும்போது, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கியது. இந்த விபத்தை அடுத்து, பேருந்தின் டிரைவரும் கண்டக்டரும் தப்பி ஓடிவிட்டதாகக் கூறப்படுகிறது. அருகில் இருந்தவர்கள் மாணவர்களை மீட்டு, அருகில் உள்ள மருத்துவமனைக்குக் […]
Continue reading …
யூடியூபை பார்த்து கள்ளநோட்டை அச்சடித்தவர் கைது செய்யப்பட்ட சம்பவம் மகாராஷ்டிரா மாநிலத்தில் நடந்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள ஜல்காவ் என்ற பகுதியில் கள்ள நோட்டுகள் புழக்கத்தில் வருவதாக போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அப்பகுதியில் ஆய்வு செய்த நிலையில் சந்தேகத்திற்கு இடமாக ராஜேந்திரன் யாதவ் என்பவரது வீட்டில் திடீரென சோதனை நடத்தினார். அப்போது அவர் ரூபாய் 1.6 லட்சம் மதிப்புள்ள கள்ள நோட்டுகள் மற்றும் அச்சடிக்கும் இயந்திரங்கள் வைத்திருந்ததை கண்டுபிடித்து அவற்றை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து […]
Continue reading …