Home » Archives by category » இந்தியா (Page 80)

நொய்டாவில் காதல் ஜோடி மீது தாக்குதல்!

Comments Off on நொய்டாவில் காதல் ஜோடி மீது தாக்குதல்!

காதல் ஜோடி மீது தாக்குதல் நடத்திய இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர். உத்தரபிரதேச மாநிலத்தில் நொய்டாவிலுள்ள ராகிணி பூங்காவில், நேற்று மாலையில், 20 வயதுடைய காதல் ஜோடி அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த சில இளைஞர்கள், காதல் ஜோடியுடன் தகராறு செய்து, அவர்களை தாக்கியுள்ளனர். இதுகுறித்த வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இத்தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று பலரும் குரல் கொடுத்தனர். இந்நிலையில், செக்டர் 49 காவல் நிலையத்தைச் […]

Continue reading …

சிக்கன் சமைக்காததால் வீட்டை கொளுத்திய கணவர்!

Comments Off on சிக்கன் சமைக்காததால் வீட்டை கொளுத்திய கணவர்!

மனைவி சிக்கன் சமைத்து தருவதற்கு மறுத்ததால் வீட்டையே கொளுத்தியுள்ளார் கணவர். மத்திய பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த உஜ்ஜையின் அருகே மது போதையில் வீட்டுக்கு வந்த கணவர் தனக்கு சிக்கன் குழம்பு வைக்க வேண்டும் என மனைவியிடம் கேட்டதற்கு சிக்கன் வைக்க முடியாது ஏற்கனவே பருப்பு சமைத்து விட்டதால் அதை சாப்பிடும் படி மனைவி கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கணவர் மது போதையில் மனைவியை தாக்கி வீட்டை விட்டு வெளியேற்றி வீட்டுக்கு தீ வைத்துள்ளார். இதன் காரணமாக வீட்டின் […]

Continue reading …

ராகுல்காந்தி கேம்பிரிஜ் பல்கலையில் உரை..!

Comments Off on ராகுல்காந்தி கேம்பிரிஜ் பல்கலையில் உரை..!

கேம்பிரிட் பல்கலைக்கழகத்தில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி உரையாற்ற உள்ளார். இந்திய தேசிய ஒற்றுமை பயணம் நடத்திய ராகுல் காந்தி அந்த பயணம் முடியும் வரை தாடியுடன் இருந்தார். இந்நிலையில் தற்போது அவர் தாடியை டிரீம் செய்து புதிய அட்டகாசமான லுக்கில் தோற்றமளிக்கிறார். இந்த புதிய லுக்குடன் அவர் தான் படித்த இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள கேம்பிரிட் பல்கலைக்கழகத்தில் உரையாற்றுகிறார். இதற்காக அவர் லண்டன் சென்றுள்ளதாகவும் 21ம் நூற்றாண்டில் கேட்க கற்றுக் கொள்ளுங்கள் என்ற தலைப்பில் […]

Continue reading …

மகளிர் ஐபிஎல் தொடக்கவிழா!

Comments Off on மகளிர் ஐபிஎல் தொடக்கவிழா!

மார்ச் 4ம் தேதி முதல் மகளிர் ஐபிஎல் போட்டிகள் தொடங்கவுள்ளது. தொடக்க விழாவில் பிரபல பாலிவுட் நடிகைகள் கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவ்வாண்டு முதல் மகளிர் ஐபிஎல் போட்டிகள் நடைபெற உள்ளது. 5 அணிகள் இதில் கலந்து கொள்ள இருப்பதாகவும் இந்த அணிகளுக்கான வீராங்கனைகள் சமீபத்தில் ஏலம் எடுக்கப்பட்டனர். மகளிர் ஐபிஎல் போட்டிகள் மார்ச் 4ம் தேதி முதல் தொடங்கவிருப்பது என்பதும் முதல் போட்டியில் குஜராத் மற்றும் மும்பை அணிகள் மோதவுள்ளன. போட்டியை 7:30 மணிக்கு […]

Continue reading …

மத்தியில் அமைச்சருக்கு வேறு துறை ஒதுக்கீடு!

Comments Off on மத்தியில் அமைச்சருக்கு வேறு துறை ஒதுக்கீடு!

மணீஸ் சிசோடியாவை டில்லி யூனியனில், புதிய மதுபான கொள்கை முறைகேடு புகாரின் பேரில் சிபிஐ கைது செய்துள்ளது. இதையடுத்து மணீஸ் சிசோடியா, சத்யேந்தர் ஜெயின் இருவரும் பதவியை ராஜினாமா செய்தனர். அவர்களின் துறைகள் வேறு அமைச்சர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. நேற்று முன்தினம் மணீஸ் சிசோடியா நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட நிலையில் அவருக்கு 5 நாள் சிபிஐ காவல் அளிக்கப்பட்டது. மணீஷ் சிசோடியா தரப்பில் உச்சநீதிமன்றத்தில் இன்று ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. இவ்வழக்கில் […]

Continue reading …

வியாழனும், வெள்ளியும் இணையும் நிகழ்வு!

Comments Off on வியாழனும், வெள்ளியும் இணையும் நிகழ்வு!

வானில் வியாழனும், வெள்ளியும் ஒரே நேர்க்கோட்டில் சந்திக்கும் நிகழ்வு இன்று நடைபெறுகிறது. இதை ஆங்கிலத்தில் ‘கன்ஜக்ஷன்’ என்று அழைக்கின்றனர் அதாவது கன்ஜக்ஷன் என்றால் இணைதல் என்று பொருள். ஒரு கோள், நிலவு, நட்சத்திரம் அல்லது பிற கோளுடன் அருகில் தோன்றும் நிகழ்வு என்பது கன்ஜக்ஷன் எனப்படும். சூரிய குடும்ப கோள்களில் மிகப்பெரியதான வியாழன் (ஜூப்பிடர்), பிரகாசமானதான வெள்ளி (வீனஸ்) ஆகிய கோள்கள் இணைந்து ஒரு அற்புதமான காட்சியை வானத்தில் நிகழ்விக்கும் என நாசா தெரிவிக்கிறது. “இதுகுறித்து கடந்த […]

Continue reading …

பிரதமரின் சகோதரர் மருத்துவமனையில் அனுமதி!

Comments Off on பிரதமரின் சகோதரர் மருத்துவமனையில் அனுமதி!

சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பிரதமர் மோடியின் சகோதரர் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் பிரதமர் மோடியின் இளைய சகோதரர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பிரதமர் மோடியின் இளைய சகோதரர் தாமோதரதாஸ் மோடி. இவர் கடந்த சில மாதங்களாக இந்தியா முழுவதும் ஆன்மீக சுற்றுப்பயணம் செய்து வரும் நிலையில் தமிழகத்தில் கன்னியாகுமரி ராமேஸ்வரம் மதுரை உள்ளிட்ட கோவில்களுக்கும் குடும்பத்துடன் சென்றுள்ளார். தற்போது அவர் சென்னையில் ஓய்வு எடுத்து வரும் நிலையில் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. […]

Continue reading …

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வாக்குறுதி!

Comments Off on காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வாக்குறுதி!

கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி தேர்தல் வாக்குறுதியாக ஒவ்வொரு மாதமும் 10 கிலோ இலவச அரிசி வழங்குவதாக வாக்குறுதி அளித்துள்ளது. அடுத்த ஆண்டு சட்டமன்ற பொது தேர்தல் கர்நாடக மாநிலத்தில் நடைபெற இருக்கிறது. ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள பாரதிய ஜனதா கட்சியும் ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ் கட்சியும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இம்முறை காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடித்து ஆக வேண்டும் என்று தீவிர முயற்சி செய்து வருகிறது. அதற்காக இப்பொழுது முதலே பிரச்சாரத்தை தொடங்கி உள்ளது. […]

Continue reading …

பணிநீக்க நடவடிக்கையில் அடுத்த இடத்தை பிடித்தது இந்தியா!

Comments Off on பணிநீக்க நடவடிக்கையில் அடுத்த இடத்தை பிடித்தது இந்தியா!

சமீபத்தில் உலகம் முழுவதிலும் முன்னணி நிறுவனங்கள் பணி நீக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. இதில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் இந்திய நிறுவனங்கள் இடம் பிடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கடந்த சில மாதங்களாக கூகுள் மைக்ரோசாப்ட் உள்பட பல நிறுவனங்கள் பணி நீக்க நடவடிக்கையை எடுத்து வருகின்றன. அவ்வகையில் உலகிலேயே அதிகளவில் தங்களது ஊழியர்களை பணி நீக்கம் செய்த நிறுவனங்கள் அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனங்கள்தான் என புள்ளி விவரப்பட்டியலில் தெரிய வந்துள்ளது. அமெரிக்கா இந்தியா நெதர்லாந்து […]

Continue reading …

மாணவியை பழிவாங்க நடந்த பகீர் சம்பவம்!

Comments Off on மாணவியை பழிவாங்க நடந்த பகீர் சம்பவம்!

கல்லூர் மாணவி ஒருவர் பெண் ஒருவரின் புகைப்படத்தை ஆபாசமாக மார்பிங் செய்து பரப்பியுள்ள சம்பவத்தில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. டில்லியைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து மர்ம நபர்கள் சமூக வலைதளங்களில் வெளியிடுவதாகவும், புதிய எண்களில் இருந்து ஆபாச எஸ்எம்எஸ் செய்தி அனுப்புவதாகவும் காவல்துறையில் புகாரளித்துள்ளார். இதையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் படங்கள் வெளியிடப்பட்ட ஐபி அட்ரஸை வைத்து குற்றவாளியை தேடினர். அதில் கல்லூரி படிக்கும் இளம்பெண் ஒருவர்தான் இதை செய்தார் […]

Continue reading …