Home » Archives by category » இந்தியா (Page 79)

வடமாநில தொழிலாளர்களின் பேட்டி!

Comments Off on வடமாநில தொழிலாளர்களின் பேட்டி!

வடமாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் நாங்கள் பாதுகாப்பாகவே உள்ளோம் என்று பேட்டி அளித்துள்ளனர். வடமாநில தொழிலாளர்கள் தமிழகத்தில் தாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. பீகார் மாநில சட்டமன்றத்தில் இது குறித்த பிரச்சனை எழுப்பப்பட்டது. ஆனால் தமிழக டிஜேபி சைலேந்திரபாபு தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படவில்லை என்றும் அவர்கள் பாதுகாப்பாகத்தான் இருக்கிறார்கள் என்றும் தெரிவித்திருந்தார். “ஹோலி பண்டிகை கொண்டாட வட மாநிலத்திற்கு செல்லும் வட மாநில தொழிலாளர்கள் பேட்டியளித்தபோது ஹோலி பண்டிகை கொண்டாட நாங்கள் சொந்த ஊருக்கு செல்கிறோம். பண்டிகை முடித்துவிட்டு […]

Continue reading …

அம்பானியின் வேலைவாய்ப்பு உறுதி!

Comments Off on அம்பானியின் வேலைவாய்ப்பு உறுதி!

ரிலையன்ஸ் நிறுவனர் அம்பானி 50,000 பேருக்கு வேலைவாய்ப்பு உறுதியாக கிடைக்கும் என்று கூறியுள்ளார். இன்று ஆந்திராவில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரிலையன்ஸ் தலைவர் முகேஷ் அம்பானி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய போது ஆந்திராவில் ரிலையன்ஸ் நிறுவனம் மூலம் ஐம்பதாயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்று அவர் உறுதி அளித்தார். மேலும் 20 செக்டர்களுக்கு 340 முதலீட்டாளர்களிடமிருந்து ரூ.13 லட்சம் கோடி வரை ஆந்திராவில் முதலீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்து மாநில […]

Continue reading …

அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் கருத்து!

Comments Off on அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் கருத்து!

அலகாபாத் உயர்நீதிமன்றம் பசுவை கொல்பவர்கள் நரகத்திற்கு செல்வார்கள் என்று வழக்கு ஒன்றில் கருத்து தெரிவித்துள்ளது. அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் மேலும் கூறிய போது பசுவை கொல்பவர்கள் மற்றும் பசுவை கொல்வதை அனுபதிப்பவர்கள் நரகத்தில் சித்திரவதை அனுபவிப்பார்கள் என்று தெரிவித்தனர். மேலும் நாட்டில் பசுவதையை தடை செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பசுவை பாதுகாக்கப்பட்ட விலங்காகவும், தேசிய விலங்காக அறிவிக்கப்பட வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும் இந்தியா மதச்சார்பற்ற நாடு என்பதால் அனைத்து […]

Continue reading …

மணீஷ் சிசோடியாவுக்கு சிபிஐ காவல் நீட்டிப்பு!

Comments Off on மணீஷ் சிசோடியாவுக்கு சிபிஐ காவல் நீட்டிப்பு!

மணீஷ் சிசோடியாவை கடந்த 26ம் தேதி கைது செய்தது. நீதிமன்றம் தற்போது அவருக்கு மேலும் 2 நாட்களுக்கு காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐக்கு அனுமதி வழங்கியுள்ளது. டெல்லி யூனியனில், புதிய மதுபான கொள்கை முறைகேடு புகாரில் மணீஷ் சிசோடியாவை சிபிஐ கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய நிலையில் அவருக்கு 5 நாள் சிபிஐ காவல் அளிக்கப்பட்டது. மணீஷ் சிசோடியா தரப்பில் உச்சநீதிமன்றத்தில் சில நாட்களுக்கு முன் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் உச்ச […]

Continue reading …

அரியானா விபத்தில் 7 பேர் பலி!

Comments Off on அரியானா விபத்தில் 7 பேர் பலி!

அரியானாவில் டிரக் ஒன்று பேருந்தின் மீது மோதிய விபத்தில் 7 பேர் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அரியானா மாநிலத்தில் அம்பாலாவில் பேருந்து மீது டிரக் மோதி விபத்து ஏற்பட்டது. இவ்விபத்தில், 7 பேர் பலியானதாக தகவல் வெளியாகிறது. யமுனா நகர் & பஞ்ச்குலா நெடுஞ்சாலையில் நேற்று பேருந்து ஒன்று சென்று கொண்டிருக்கும்போது, பின்னால் லோடு ஏற்றி வந்த லாரி அந்தப் பேருந்தின் மீது மோதி விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் லாரி கவிழ்ந்த […]

Continue reading …

வைரஸ் தொற்று பற்றி ஐ.எம்.ஏ. எச்சரிக்கை!

Comments Off on வைரஸ் தொற்று பற்றி ஐ.எம்.ஏ. எச்சரிக்கை!

ஐசிஎம்ஆர் விஞ்ஞானிகள் இந்தியாவில் பரவி வரும் “எச்3என்2” வகை வைரத்தொற்று- பற்றி எச்சரித்துள்ளனர். கடந்த 3 மாதங்களாக இந்தியா முழுவதிலும் காய்ச்சல் பரவி வருகிறது. இதுகுறித்து, “இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 3 மாதங்களாக எச்3என்2 வகையைச் சேர்ந்த இன்புளூயன்சா ஏ வைரஸ் பாதிப்பு பரவி வருவதால், மக்கள் பலர் இருமல், காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மற்ற இன்புளூயன்சாவைவிட இவ்வகை இன்புளூயன்சாவினால்தான் மக்கள் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். […]

Continue reading …

பாஜக எம்.எல்.ஏ. மகன் வீட்டில் அதிகாரிகள் சோதனை!

Comments Off on பாஜக எம்.எல்.ஏ. மகன் வீட்டில் அதிகாரிகள் சோதனை!

லோக் ஆயுக்த அதிகாரிகள் நடத்திய சோதனையில் பாஜக எம்.எல்.ஏ மகன் வீட்டில் ரு.6 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பெங்களூருவில் பசவராஜ் பொம்மை தலைமையிலான ஆட்சியில் பல ஊழல்கள் முறைகேடுகள் நடந்து வருவதாக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் குற்றம் காட்டி வருகின்றன. இந்நிலையில் பெங்களூர் பாஜக எம்எல்ஏ மாதல் விருபாக்ஷப்பாவின் மகன் பிரசாந்த் மாதல் வீட்டில் லோக் ஆயுக்த அதிகாரிகள் இன்று திடீரென அதிரடி சோதனை நடத்தினர். இச்சோதனையில் ரூபாய் ஆறு கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டதை அடுத்து […]

Continue reading …

சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி!

Comments Off on சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி!

இன்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார். அதனால் டில்லியில், உள்ள சர்கங்காராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது, அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். சோனியா காந்தியின் உடல்நிலை குறித்து, கங்காராம் மருத்துவர்கள், ‘அவரது உடல்நிலை சீராக உள்ளது’ என்று தெரிவித்துள்ளனர். கடந்த ஜனவரி மாதம் 4ம் தேதி சுவாசப் பாதையில் ஏற்பட்ட தொற்றினால் கங்கா ராம் […]

Continue reading …

நொய்டாவில் காதல் ஜோடி மீது தாக்குதல்!

Comments Off on நொய்டாவில் காதல் ஜோடி மீது தாக்குதல்!

காதல் ஜோடி மீது தாக்குதல் நடத்திய இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர். உத்தரபிரதேச மாநிலத்தில் நொய்டாவிலுள்ள ராகிணி பூங்காவில், நேற்று மாலையில், 20 வயதுடைய காதல் ஜோடி அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த சில இளைஞர்கள், காதல் ஜோடியுடன் தகராறு செய்து, அவர்களை தாக்கியுள்ளனர். இதுகுறித்த வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இத்தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று பலரும் குரல் கொடுத்தனர். இந்நிலையில், செக்டர் 49 காவல் நிலையத்தைச் […]

Continue reading …

சிக்கன் சமைக்காததால் வீட்டை கொளுத்திய கணவர்!

Comments Off on சிக்கன் சமைக்காததால் வீட்டை கொளுத்திய கணவர்!

மனைவி சிக்கன் சமைத்து தருவதற்கு மறுத்ததால் வீட்டையே கொளுத்தியுள்ளார் கணவர். மத்திய பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த உஜ்ஜையின் அருகே மது போதையில் வீட்டுக்கு வந்த கணவர் தனக்கு சிக்கன் குழம்பு வைக்க வேண்டும் என மனைவியிடம் கேட்டதற்கு சிக்கன் வைக்க முடியாது ஏற்கனவே பருப்பு சமைத்து விட்டதால் அதை சாப்பிடும் படி மனைவி கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கணவர் மது போதையில் மனைவியை தாக்கி வீட்டை விட்டு வெளியேற்றி வீட்டுக்கு தீ வைத்துள்ளார். இதன் காரணமாக வீட்டின் […]

Continue reading …