Home » Archives by category » உலகம் (Page 29)

அமெரிக்காவில் பறக்கும் பொருட்கள்!

Comments Off on அமெரிக்காவில் பறக்கும் பொருட்கள்!

சமீபத்தில் அமெரிக்காவின் வானில் தோன்றி வரும் உளவு பொருட்களை அமெரிக்கா சுட்டு வீழ்த்துவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அமெரிக்காவின் ராணுவ அணு சக்தி தளம் மீது கடந்த பிப்ரவரி 10ம் தேதியன்று பறந்து சென்ற உளவு பலூன் ஒன்றை கடல் பரப்பில் வைத்து அமெரிக்க ராணுவம் சுட்டு வீழ்த்தியது. அதேநாளில் அலாஸ்காவிலும் மர்ம பொருள் ஒன்று தோன்ற அதையும் அமெரிக்க வான்படை சுட்டு வீழ்த்தியது. அதன்பின்னர் அண்டை தேசமான கனடாவிலும் பறக்கும் பொருள் ஒன்றை தாங்கள் […]

Continue reading …

கூகுள் நிறுவனத்திற்கு குண்டு மிரட்டல்!

Comments Off on கூகுள் நிறுவனத்திற்கு குண்டு மிரட்டல்!

உலகின் முன்னணி நிறுவனமான கூகுளுக்கு தொலைப்பேசியில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் புனே நகரில் கூகுளின் கிளை அலுவலகம் உள்ளது. இங்குள்ள முந்த்வா பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி வளாகத்தின் 11வது மாடியிலிருந்த அலுவலகத்தில் நேற்றிரவு ஒரு அழைப்பு வந்தது. அதில், நிறுவனத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து. போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, காவல்துணை ஆணையர் விக்ராந்த் தேஷ்முக் தலைமையிலான போலீசார், சம்பந்தப்பட்ட இடத்தில் குவிக்கப்பட்டு, சோதனை செய்தனர். அதில், வெடிகுண்டு மிரட்டல் […]

Continue reading …

நடுவானத்தில் விமான தீ விபத்து!

Comments Off on நடுவானத்தில் விமான தீ விபத்து!

டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானம் ஸ்காட்லாந்து நாட்டிலிருந்து அமெரிக்காவுக்குச் சென்று கொண்டிருந்தபோது நடுவானில் தீப்பிடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இங்கிலாந்து நாட்டின் ஸ்காட்லாந்தில் இருந்து அமெரிக்க நாட்டின் நியூயார்க் நகருக்கு டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான போயிங் விமானம் ஒன்று நடுவானில் பறந்துகொண்டிருந்தது. அப்போது, திடீரென்று விமானத்தின் எஞ்சின் தீப்பற்றியது. இதைக் கண்ட விமானிகள் உடனே அவசரமாக பிரேஸ்டவிக் விமான நிலையத்தில் விமானத்தை தரையிறக்கினர். அங்கிருந்த பாதுகாப்புக் குழுவினர் பயணிகளை மீட்டு வெளியே கொண்டு […]

Continue reading …

பாகிஸ்தான் டிரோன் இந்திய எல்லையிலா?

Comments Off on பாகிஸ்தான் டிரோன் இந்திய எல்லையிலா?

எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் டிரோனைசுட்டு வீழ்த்தியுள்ளனர். பஞ்சாப் மாநிலத்தில் உள்ள இந்திய பாகிஸ்தான் சர்வதேச எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் நாட்டின் டிரோன் ஒன்று வருவதை எல்லை பாதுகாப்பு படையினர் பார்த்தனர். இதையடுத்து அந்த டிரோனை எல்லை பாதுகாப்பு வீரர்கள் சுட்டு வீழ்த்தியுள்ளனர். சுட்டு வீழ்த்தப்பட்ட டிரோனில் 3 கிலோ ஹெராயின் மற்றும் சீனாவில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகள் தோட்டாக்கள் ஆகியவை இருந்ததாக கூறப்படுகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி […]

Continue reading …

கடலில் வீசப்பட்ட 12 தங்கக்கட்டிகள்!

Comments Off on கடலில் வீசப்பட்ட 12 தங்கக்கட்டிகள்!

இரண்டு நாள் தேடலுக்கு பிறகு மீனவர்கள் கடலில் வீசியெறிந்த தங்க கட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இலங்கையிலிருந்து மீன்பிடி பைபர் படகில் தங்கம் கடத்திவரப்பட்டதாக ரகசிய தகவல் கிடைத்ததை அடுத்து சுங்கத்துறையினர் அந்த படகை சுற்றி வளைத்தனர். இதையடுத்து மீனவர்கள் அந்த தங்க கட்டிகளை கடலில் தூக்கி எறிந்ததாக கூறப்பட்டது, கடலில் தூக்கி எறியப்பட்ட தங்க கட்டிகளை தேடும் பணியில் சுங்கத்துறை அதிகாரிகள் இரண்டு நாள் தேடலுக்கு பிறகு தற்போது 12 கிலோ தங்க கட்டிகள் […]

Continue reading …

‘துருக்கி’ பூகம்பத்தை கணித்த விஞ்ஞானியின் எச்சரிக்கை!

Comments Off on ‘துருக்கி’ பூகம்பத்தை கணித்த விஞ்ஞானியின் எச்சரிக்கை!

மூன்று நாட்களுக்கு முன்பே துருக்கி நிலநடுக்கத்தை சரியாக கணித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்த விஞ்ஞானி அடுத்த நிலநடுக்கம் இந்தியா மற்றும் பாகிஸ்தானில் தான் என எச்சரித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிராங்க் ஹுகர்பீட்ஸ் என்பவர் நெதர்லாந்தை சேர்ந்த புவியில் ஆராய்ச்சி விஞ்ஞானி. இவர் துருக்கி சிரியா ஆகிய பகுதிகளில் மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்படும் என்று தனது டுவிட்டர் பக்கத்தில் மூன்று நாட்களுக்கு முன்பே பதிவு செய்திருந்தார். அதை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளாத நிலையில் […]

Continue reading …

பணிநீக்க பட்டியலில் இணைந்த நிறுவனம்!

Comments Off on பணிநீக்க பட்டியலில் இணைந்த நிறுவனம்!

பல முன்னணி நிறுவனங்கள் சமீபத்தில் ஆயிரக்கணக்கான ஊழியர்களை வேலைநீக்கம் செய்துள்ளது. அந்த பட்டியலில் தற்போது ஜூம் நிறுவனமும் இணைந்தள்ளது. உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான ஜூம் 1300 ஊழியர்களை பணி நீக்கம் செய்யப் போவதாக அறிவித்துள்ளது. இந்நிறுவனத்தின் சி.இ.ஓ எரிக் யுவான் சற்று முன் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு 16 வாரத்திற்கான சம்பளம் மற்றும் மருத்துவ உதவிகள் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். உலகின் முன்னணி நிறுவனங்கள் ஒவ்வொன்றாக ஊழியர்களை வேலை […]

Continue reading …

துருக்கி, சிரியா நிலநடுக்கத்தில் 9500 பலி!

Comments Off on துருக்கி, சிரியா நிலநடுக்கத்தில் 9500 பலி!

கடந்த இரண்டு நாட்களில் அடுத்தடுத்து துருக்கி மற்றும் சிரியாவில் பலமுறை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பலி எண்ணிக்கை 9,500 ஆக உயர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. துருக்கி மற்றும் சிரியா நாடுகளில் அடுத்தடுத்து பலமுறை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் தரைமட்டமாகின. இடிபாடுகளுக்குள் சிக்கி இதுவரை 9,500 பிணங்கள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் இன்னும் ஏராளமான மீட்பு பணிகள் நடைபெற இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது. பூகம்பம் நிகழ்ந்த முதல் நாளிலேயே அமெரிக்க புவியியல் ஆராய்ச்சி மையம் பத்தாயிரம் […]

Continue reading …

துருக்கி நாட்டு தூதர் இந்தியாவிற்கு புகழாரம்!

Comments Off on துருக்கி நாட்டு தூதர் இந்தியாவிற்கு புகழாரம்!

துருக்கி நாட்டு தூதர் இந்தியா செய்த உதவியை நாங்கள் மறக்க மாட்டோம் என்று தெரிவித்துள்ளார். நேற்று அதிகாலை துருக்கியில் நிலநடுக்கம் ஏற்பட்டு ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்ததோடு மட்டுமல்லாம் படுகாயமும் அடைந்துள்ளனர். இந்த செய்தி வெளியான ஒரு சில மணி நேரங்களில் இந்தியா உதவி கரம் நீட்டியது. இந்தியாவிலிருந்து இரண்டு குழுக்கள் புறப்பட்டு சென்றன. அவர்களுடன் மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருத்துவ பொருட்களும் சென்றன. இந்நிலையில் பூகம்பம் ஏற்பட்ட சில மணி நேரங்களில் துருக்கிக்கு இந்தியா செய்த உதவியை நாங்கள் […]

Continue reading …

துருக்கி நிலநடுக்கத்திற்கு வைரமுத்துவின் கவிதை..!

Comments Off on துருக்கி நிலநடுக்கத்திற்கு வைரமுத்துவின் கவிதை..!

பூகம்பம் காரணமாக துருக்கியில் சுமார் 5000க்கும் மேற்பட்டோர் பலியானதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஏராளமான பேர் காயம் அடைந்துள்ளதாகவும் அறிக்கைகள் வெளியாகி உள்ளன. துருக்கி நாட்டிற்கு ஏற்பட்ட துரதிஷ்டமான இந்நிலைக்கு பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். கவிப்பேரரசு வைரமுத்து தனது டுவிட்டரில் கவிதை வடிவில் இரங்கல் தெரிவித்துள்ளார். துருக்கியின் கீழே பூமி புரண்டு படுத்துவிட்டது ரிக்டர் கருவிகள் வெடித்துவிட்டன வான்தொட்ட கட்டடங்கள் தரைதட்டிவிட்டன மனித உடல்கள் மீது வீடுகள் குடியேறிவிட்டன மாண்டவன் மானுடன்; உயிர் பிழைத்தவன் உறவினன் […]

Continue reading …