
திடீரென ஜெர்மனியில் விமான நிலைய ஊழியர்கள் திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் 35000 பயணிகள் அவதியுற்றனர். விமான நிலைய ஊழியர்கள் ஜெர்மனியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீரென வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் 300க்கும் மேற்பட்ட விமானங்கள் புறப்படுவதிலும் தரை இறங்குவதிலும் சிக்கல் ஏற்பட்டது. இந்த வேலை நிறுத்தம் காரணமாக சுமார் 35 ஆயிரம் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் உடனடியாக வேலை நிறுத்தத்தை நிறுத்த பேச்சுவார்த்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆறு சதவீதம் விலைவாசி அதிகரித்துள்ள நிலையில் விமான […]
Continue reading …
பிரபல ஓடிடி நிறுவனமான நெட்பிளிக்ஸ் உலகம் முழுதும் மிகவும் பிரபலமானது. இந்நிறுவனம் தனது சந்தாரர்களுக்கு புதிய கட்டண முறையை அறிவித்துள்ளது. இணையதள வளர்ச்சியால் மக்கள் தங்களது ஆன்ட்ராய்டு போனிலேயே முழு படங்களையும் பார்த்துக் கொள்கின்றனர். அந்த அளவிற்கு ஓடிடி வளர்ச்சியடைந்துள்ளது. அப்படியான ஓடிடி தளங்களில் முன்னிலையில் உள்ள நெட்ப்ளிக்ஸ் உலகம் முழுதும் 223 மில்லியன் சந்தாதாரர்களை கொண்டுள்ளது. நெட்ப்ளிக்ஸை சப்ஸ்க்ரைப் செய்துள்ள பலர் தங்களது லாக் இன் பாஸ்வேர்டை தனது நண்பர்களுக்கு பகிர்வதும், ஒரே பாஸ்வேர்டை வைத்து […]
Continue reading …
கிரிக்கெட் வீரர் என் பயோபிக் படத்தை ரிலீஸ் செய்தால் சட்ட நடவடிக்கை எடுப்பேன் என்று கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பாகிஸ்தானின் சோயிப் அக்தர் 161.3 கிமீ வேகத்தில் பந்துவீசி இதுவரை அதிக வேகத்தில் பந்து வீசிய பந்துவீச்சாளர் என்ற சாதனையை வைத்துள்ளார். பாகிஸ்தான் அணிக்காக அவர் விளையாடிய காலம் முழுவதும் பரபரப்புகளுக்கு பஞ்சம் இல்லாமலேயே விளையாடினார். கடந்த 2011ம் ஆண்டு இவர் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். இப்போது வர்ணனையாளராகவும் விமர்சகராகவும் செயல்பட்டு வரும் […]
Continue reading …
மின்சார ரயில்கள் பலவும் பாகிஸ்தானில் நடுவழியில் நின்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மின்சாரம் இல்லாமல் பல நகரங்கள் பாகிஸ்தான் இருளில் மூழ்கியுள்ளது. பாகிஸ்தான் நாடு கடும் பொருளாதார சிக்கலில் இருக்கிறது. இன்னும் ஒரு சில மாதங்களில் அந்நாடு திவாலாக வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் நாடு முழுவதும் உள்ள பல நகரங்களில் மின்சார பற்றாக்குறை காரணமாக இருளில் மூழ்கியுள்ளதாகவும் பல நகரங்களில் மின்சாரமின்றி நடுவழியில் ரயில்கள் நின்று கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள மின்சார […]
Continue reading …
இந்துக்கோவிலில் 3 வது முறையாக தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய நாட்டிலுள்ள இந்துக் கோவில்கள் மீது தாக்குதல் நடந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளன. சமீபத்தில், விக்டோரியா மாநிலத்தில் இந்துக் கோவிலான சிவ விஷ்ணு கோவில் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் சிலர் தாக்குதல் நடத்தினர். இந்த கோயிலில், இந்தியர்களுக்கு எதிராக சில வாசகங்கள் எழுதி, ஒரு வாரத்தில் இரண்டாம் முறையாக தாக்குதல் நடத்தப்பட்டப்பட்டது. தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையொட்டி, பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வந்த நிலையில், இந்த […]
Continue reading …
பொது இடங்களில் சிறுநீர் கழிப்பதை தடுக்கும் வகையில், லண்டனில் புதிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பல நாடுகளில் பொது இடங்களில் சிறுநீர் கழிப்பது என்பது பெரும் சுகாதார பிரச்சினையாகவே இருந்து வருகிறது. இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் கூட பலர் அதை பின்பற்றுவதில்லை. லண்டனிலும் பல பகுதிகளில் இதுபோல பொது இடங்களில் சிறுநீர் கழிக்கும் சம்பவம் பிரச்சினையாக உள்ளது. இதை தடுக்க லண்டன் புதிய உத்தியை பயன்படுத்தியுள்ளது. முதற்கட்டமாக லண்டனின் சோஹோ பகுதியில் சிறுநீர் கழித்தால் கழிப்பவர் மீதே திரும்ப […]
Continue reading …
டுவிட்டர் நிறுவனம் பெயர்களை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. தொழிலதிபர் எலான் மஸ்க் 44 பில்லியன் டாலர் கொடுத்து டுவிட்டர் நிறுவனத்தை வாங்கி உள்ளார். அவர் பல்வேறு அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறார். குறிப்பாக போலி டுவிட்டர் கணக்குகளை முடக்கும் முயற்சிகள் தீவிரமாக உள்ளார். தற்போது டுவிட்டரை பயன்படுத்தி வரும் பயனாளர்களின் பெயர்கள் முழுமையாக அல்லது பகுதியாக விற்பனை செய்ய திட்டமிட்டு இருப்பதாகவும், பெயர்கள் ஏலம் விடப்போவதாகவும் கூறப்படுகிறது.
Continue reading …
ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் பெண்கள் ஆண் மருத்துவர்களிடம் சிகிச்சை பெறக் கூடாது என உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னால் தாலிபான்கள் ஆப்கானிஸ்தான் நாட்டின் ஆட்சியைப் பிடித்ததில் இருந்தே பெண்களுக்கு பல உரிமைகள் பறிக்கப்பட்டு வருகின்றன. பெண்கள் அரசு அலுவலர்களில் வேலை செய்யக்கூடாது, பெண்கள் விளையாட்டு துறையில் ஈடுபடக்கூடாது, பெண்கள் கல்லூரியில் படிக்கக்கூடாது போன்ற கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. தற்போது பெண்கள் ஆண் மருத்துவர்களிடம் சிகிச்சை பெறக் கூடாது என தாலிபான்கள் உத்தரவு பிறப்பித்துள்ளது பெரும் […]
Continue reading …
தைவான் நாட்டிலிருந்து புறப்பட தயாராக இருந்த விமானத்தில் போன் சார்ஜர் வெடித்து தீப்பற்றிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தைவான் நாட்டில் டாவோயுவான் என்ற சர்வதேச விமான நிலையம் உள்ளது. இங்கிருந்து ஸ்கூட் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தின் டி.ஆர்.993 விமானத்தில் பயணிகள் அனைவரும் ஏறிய நிலையில், இந்த விமானம் சிங்கப்பூருக்கு புறப்பட தயாராக இருந்தது. அப்போது, பயணிகள் இருக்கையில் அமர்ந்திருந்த பயணியின் செல்போன் சார்ஜர் திடீரென்று வெடித்தது. இதைப் பார்த்து அருகில் இருந்த பயணிகள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். […]
Continue reading …
கொரோனா நோயாளிகள் சீனாவில் தற்கொலை செய்து கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அரசே கொரோனா நோயாளிகளை கொலை செய்து வருவதாக கூறப்படுகிறது. கடந்த சில நாட்களாக சீனாவில் கொரோனா வைரஸ் நோய் பாதிப்பு மிக அதிகமாக வருகிறது. இதனால் கொரோனா நோயாளிகள் தற்கொலை செய்து கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. கிராமப்புறங்களில் கொரோனா நோயாளிகளுக்கு போதிய மருந்துகள் கிடைக்காததால் பொதுமக்கள் விரக்தியில் தற்கொலை செய்து கொள்வதாக கூறப்படுகிறது. ஆனால் சீனாவில் கொரோனோ நோயாளிகளை அரசை கொன்று குவித்து வருவதாகவும் ஒரு […]
Continue reading …