பப்புவா நியூ கினியாவின் உள்ள ஒரு கிராமத்தில் ஏற்பட்ட நிலச்சரிவால் 100 க்கும் மேற்பட்டோர் பலி. தென் பசிபிக் தீவு நாட்டின் தலைநகரான போர்ட் மோர்ஸ்பிக்கு வடமேற்கே சுமார் 600 கிலோமீட்டர் (370 மைல்) தொலைவில் உள்ள உள்ள காகலம் கிராமத்தில் உள்ளூர் நேரப்படி அதிகாலை 3 மணியளவில் (15:00 GMT) நிலச்சரிவு ஏற்பட்டதாக ஏபிசி நிறுவனம் தெரிவித்துள்ளது. அதிகாரிகள் இறப்பு எண்ணிக்கையை உறுதிப்படுத்தவில்லை என்றாலும், இறப்பு எண்ணிக்கையின் தற்போதைய மதிப்பீடுகள் 100 க்கு மேல் இருப்பதாக […]
Continue reading …நேற்று ஹெலிகாப்டரில் ஈரான் நாட்டின் அதிபர் இப்ராஹீம் ரைசி பயணம் செய்தார். அவர் பயணம் செய்த ஹெலிகாப்டர் மலையில் மோதி விபத்துக்குள்ளானதில் அவர் காலமானதாக அறிவிக்கப்பட்டது. இச்சம்பவத்தால் துணை அதிபர் முகமது முக்தர் இன்று அதிபராக பதவியேற்று கொண்டார். ஈரான் நாட்டின் அதிபர் மரணத்தை அந்நாட்டு பெண்கள் பட்டாசு வெடித்து கொண்டாடி உள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்த வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஈரான் நாட்டு அதிபர் சர்வாதிகாரி போலவும் பழமைவாதியாகவும் நடந்து கொண்டார். அவரது மரணத்திற்கு […]
Continue reading …விண்கள் ஒன்று ஐரோப்பிய கண்டத்தை சேர்ந்த ஸ்பெயின், போர்ச்சுக்கல் நாடுகளை கடந்து சென்றதால் வானம் அதிபிரகாசமானது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. ஏராளமான கோள்களும், விண்மீன்களும், விண்கற்களும் பூமிக்கு வெளியே விண்வெளியில் உள்ளன. பிரபஞ்சம் முழுவதுமே சிறியது முதல் எவரெஸ்ட்டை விட பெரிய சைஸிலான விண்கற்கள் கூட சர்வசாதரணமாக சுற்றி வருகின்றனர். சூரிய குடும்பத்தை தாண்டி சென்றால் உள்ள இண்டெஸ்டெல்லார் பெல்ட் என்பது இப்படியான விண்கற்களால் உருவான ஒரு மாபெரும் வளையம்தான். பூமியை நாள்தோறு […]
Continue reading …இலங்கையில் அதானி நிறுவனம் மேற்கொண்டுள்ள காற்றாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இலங்கையின் வடகிழக்கு பிராந்தியத்தில் உள்ள மன்னார், பூணெரின் ஆகிய இடங்களில் 484 மெகா வாட் காற்றாலை மின்நிலையங்களை உருவாக்கும் அதானியின் திட்டங்களுக்கு அந்நாட்டு அரசு சமீபத்தில் அங்கீகாரம் வழங்கியது. இதற்காக இலங்கை அரசு அதானி கிரீன் எனர்ஜி இடையே 20 ஆண்டுகால ஒப்பந்தம் கையெழுத்தானத்தை அடுத்து, பூர்வாங்க பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இலங்கையின் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் அதானி நிறுவனம் […]
Continue reading …இன்று தைவான் நாட்டில் நடைபெற்ற பாராளுமன்ற கூட்டத்தில் பெண் எம்பிக்கள் உள்பட எம்பிக்கள் ஒருவரையொருவர் தாக்கி கட்டிப்புரண்டு சண்டை போட்டுக் கொண்டுள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன் தைவான் நாட்டில் அதிபர் தேர்தல் நடைபெற்றது. சீன ஆதரவு பெற்ற கோமின் டாங் என்பவரை எதிர்த்து போட்டியிட்ட வில்லியம் சிங் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இருப்பினும் அவருக்கு ஆட்சி அமைக்க தனி பெரும்பான்மை கிடைக்கவில்லை. பாராளுமன்றத்தில் புதிய மசோதா ஒன்று நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இது குறித்து விவாதம் இன்று […]
Continue reading …அவ்வப்போது இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டனர் என்ற செய்தி தான் வெளிவந்து கொண்டிருக்கிறது. தற்போது இலங்கை மீனவர்கள் 14 பேர் இந்திய கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்ததாக 14 இலங்கை கடற்படையினர் கைது செய்யப்பட்டதாகவும் அவர்களுக்கு சொந்தமான ஐந்து படகுகளை இந்திய கடற்படை பறிமுதல் செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்கள் 14 பேர் அவர்களது படகுகளை நாகை கடலோர பாதுகாப்பு குழும போலீசாரிடம் ஒப்படைக்கவுள்ளனர். எல்லை […]
Continue reading …ஆஸ்டிராஜெனிகா நிறுவனம் இந்தியாவில் கொரோனாவுக்காக செலுத்தப்பட்ட கோவிஷீல்டு தடுப்பூசியால் பக்கவிளைவுகள் ஏற்படும் வாய்ப்புள்ளதை இறுதியாக ஒப்புக் கொண்டுள்ளது. உலகம் முழுவதும் கடந்த 2019ம் ஆண்டு இறுதியில் பரவத் தொடங்கிய கொரோனாவால் அடுத்த 2 ஆண்டுகளுக்கு உலகமே முடங்கியது. இந்தியாவில் பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் மக்களுக்கு முன்னெச்சரிக்கையாக கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது. இதில் கோவிஷீல்டு தடுப்பூசியை பிரிட்டனை சேர்ந்த ஆஸ்ட்ராஜெனிகா நிறுவனம் தயாரித்திருந்தது. இந்தியாவில் அதன் தயாரிப்பு பணிகள் புனேவில் உள்ள சீரம் நிறுவனத்தால் […]
Continue reading …இந்தோனேஷியாவில் தீவு ஒன்றில் எரிமலை வெடித்ததை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு எழுந்துள்ளது. குட்டிக் குட்டித் தீவுகள் உள்ள இந்தோனேஷியாவில் கணிசமான அளவில் வெடிக்கும் நிலையில் எரிமலைகளும் உள்ளன. நிலத்தகடுகள் சந்திக்கும் இடத்தில் உள்ளதால் அடிக்கடி இந்தோனேசியாவில் நிலநடுக்கம், எரிமலை வெடிப்பு நடக்கிறது. கடந்த 16ம் தேதி ருயாங்க் தீவில் எரிமலை ஒன்று வெடித்து சிதறியதால் ஏராளமான மக்கள் வெளியேற்றப்பட்டனர். இன்று மீண்டும் ருயாங் தீவில் உள்ள எரிமலை மீண்டும் வெடித்து சிதறியுள்ளது. இம்முறை […]
Continue reading …28 ஊழியர்களை கூகுள் நிறுவனம் மற்றும் இஸ்ரேல் இடையிலான கிளவுட் கம்ப்யூட்டிங் ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தற்காக நீக்கியுள்ளது. ப்ராஜக்ட் நிம்பஸ் என்று அழைக்கப்படும் இந்த ஒப்பந்தத்தை எதிர்த்து 28 ஊழியர்கள், நியூயார்க் மற்றும் சன்னிவேல் அலுவலங்களில் சுமார் எட்டு மணி நேரத்துக்கும் மேலாக உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினர். கூகுள் கிளவுட் சிஇஓ தாமஸ் குரியனின் அலுவலகத்தை விட்டு அகல மறுத்து ஊழியர்கள் சிலர் கைது செய்யப்பட்டதாகவும் கூகுள் தரப்பில் கூறப்படுகிறது. இச்சம்பவத்தையடுத்து கூகுள் நிறுவனம் போராட்டம் நடத்திய […]
Continue reading …கடந்த இரண்டு நாட்களாக துபாயில் பெய்த கனமழை காரணமாக விமான சேவை முடங்கியதோடு, மழை நீர் இன்னும் வடியாததால் அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு நாட்களாக துபாயில் பேய் மழை கொட்டி தீர்த்தது. வரலாறு காணாத அளவிற்கு பெய்த மழையால் துபாய் நகரம் இன்னும் வெள்ளத்தில் சிக்கித் தவித்து வருகிறது. பெருமழை குறித்து அந்நாட்டு செய்தி நிறுவனமான WAM இது ‘வரலாறு காணாத வானிலை நிகழ்வு’, கடந்த 1949-ம் ஆண்டு முதல் […]
Continue reading …