
கிம் ஜாங்-உனின் சகோதரி கிம் யோ-ஜாங் புதன்கிழமை தென் கொரிய வெளியுறவு மந்திரி காங் கியுங்-வா-விற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். காரணம் வேறொன்றுமில்லை. வட கொரியா தங்கள் நாட்டில் கொரோனாவே இல்லை என கூறி வருகிறது. அது குறித்து தென்கொரொயா சந்தேகம் எழுப்பியுள்ளது. தென் கொரிய வெளியுறவு மந்திரி காங் கியுங்-வா சென்ற வார இறுதியில், தங்கள் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று பரவலே இல்லை என்ற வட கொரியாவின் கூற்றை நம்புவது கடினம் என்று கூறினார். தொற்றுநோயை […]
Continue reading …
சீன கம்யூனிச அரசு, உய்குர் இன முஸ்லீம்களை, சிறைவைப்பதிலும், அவர்கள் மீது பயங்கரவாத முத்திரையை குத்துவதும், மிகப்பெரிய அளவில், நவீன திட்டங்களை வகுத்து செயல்படுத்துவதாக, சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்தது. சீனாவின் தன்னாட்சி பெற்ற மாகாணங்களில் ஒன்றான சிஞ்ஜியாங்கில் சில ஆண்டுகளாக, ராணுவ துருப்புகளை குவித்திருக்கும் சீன அரசு, அங்குவாழும் உய்குர் முஸ்லீம்களை, தடுப்பு முகாம்களில் அடைத்துவைத்தும், பிரிவினைவாதிகள் என அடையாளப்படுத்தி, மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டிருப்பதாக, அமெரிக்கா போன்ற நாடுகள் தொடர்ந்து குற்றம்சாட்டி […]
Continue reading …
சீனாவின் செங்குடு நகரில் செயற்கை நிலவை உருவாக்கும் முயற்சியின் தொடர்ச்சியாக சீனா கையில் எடுத்த ‘செயற்கை சூரியன்’ என்று அழைக்கப்பட்ட ’அணுக்கரு இணைவு உலை’யை வெற்றிகரமாக ’சுவிட்ஸ் ஆன்’ செய்து அதை இயக்கியுள்ளது. இந்த செயற்கை சூரியனிலிருந்து வெளிப்படும் வெப்பம் சூரியனை விடவும் 10 மடங்கு அதிகமாக உள்ளதாக கூறப்படுகிறது. தற்போது பயன்பாட்டில் உள்ள அணு உலைகளில் அணுக்கரு பிளவு வினை மூலம் தான் ஆற்றல் பெறப்படுகிறது. அணு உலைகளில், யுரேனியம் அல்லது புளூட்டோனியத்தை நியூட்ரான் மூலம் […]
Continue reading …
பொதுமக்களுக்கு இலவசமாக கரோனா தடுப்பு மருந்துகள் வழங்க வழி செய்யும் மசோதா ஜப்பான் ஜப்பான் நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது. இதுகுறித்து ஜப்பான் ஊடகங்கள் வெளியிட்ட செய்தியில், ‘ அனைத்து பொதுமக்களுக்கும் கரோனா தடுப்பூசியை இலவசமாக வழங்கும் மசோதாவை ஜப்பான் நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது. இதனைத் தொடர்ந்து 1 கோடிக்கும் அதிகமானவர்கள் கரோனா தடுப்பு மருந்தை பெற உள்ளனர்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பானில் டோக்கியாவில்தான் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதனைத் தொடர்ந்து அங்கு கரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. உலகையே […]
Continue reading …
உலக புகழ்பெற்ற ஹார்வெர்ட் மருத்துவப் பள்ளியின் (Harvard Medical School) கீழ் இயங்கும் பெத் இஸ்ரேல் மருத்துவ மையத்தில் (Beth Israel Deaconess Medical Center – BIDMC) ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குருவின் பெயரில் புதிதாக ஒரு மருத்துவ ஆராய்ச்சி மையம் தொடங்கப்பட்டுள்ளது. ‘Sadhguru Center for a Conscious Planet’ என்ற பெயரில் தொடங்கப்பட்டுள்ள இந்த மையம் மனிதர்களின் விழிப்புணர்வு, அறிவாற்றல் மற்றும் கருணை ஆகிய 3 முக்கிய அம்சங்கள் மூலம் ஒருவரின் ஆரோக்கியம் […]
Continue reading …
உலகில் இப்போதைய நிலையில் கொரோனாவுக்கு அடுத்து பெரும் சிக்கலாகப் பேசப்படுவது சுற்றுச்சூழல் சீர்கேடுகள்தான். ஆம். நாளுக்கு நாள் காற்று, சுற்றுப்புறம் மாசடைந்து கொண்டே இருக்கின்றன. கொரோனா கால லாக்டெளன் நேரத்தில் போக்குவரத்து குறைவானது. அதனால், காற்றில் மாசு பெருமளவு குறைந்த செய்திகளைப் படித்திருப்போம். காற்றில் கார்பன் டை ஆக்ஸைடை அதிகரிப்பதில் வாகனங்களில் வெளிவரும் புகைக்குப் பெரும் பங்கு இருக்கிறது. வளர்ந்த நாடுகளில் வீட்டுக்கு குறைந்த பட்சம் ஒரு காராவது இருக்கிறது. அதனால், காற்று மாசுபடுதல் அதிகமாகவும் இருக்கிறது. […]
Continue reading …
அமெரிக்காவை சேர்ந்த நிறுவனம் தயாரித்துள்ள கொரோனா நோய் தடுப்பு மருந்து 95% வெற்றி என அறிவிப்பு. அமெரிக்காவின் மார்டனா என்ற நிறுவனம் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசி வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. கொரோனா நோய் தொற்றை தடுப்பதில் அமெரிக்க மருந்து 95% வெற்றிகரமாக செயல்படுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
Continue reading …
தேர்வாளர் பேரவையில் (Electoral College) பைடனுக்குக் கிடைத்துள்ள இடங்களின் அடிப்படையில் ஊடகங்கள் அமெரிக்க ஊடகங்கள் அவரது வெற்றியை அறிவித்துள்ளன. இன்னும் சில சாங்கியங்கள், சம்பிராதாயங்கள் உள்ளன. ஒவ்வொரு மாநிலமும் தங்கள் மாநிலத்தில் ஒவ்வொரு கட்சிக்கும் தேர்வாளர் பேரவைக்கும் கிடைத்துள்ள இடங்களைச் சான்றளிக்க வேண்டும். பின் அந்த தேர்வாளர்கள் டிசம்பர் மாதம் வாக்களித்து அதிபரைத் தேர்வு செய்வார்கள். இதெல்லாம் சம்பிரதாயங்கள்தான். அதனால் இறுதி முடிவில் ஏதும் மாற்றங்கள் இராது. அதே போல ஊடகங்கள் “முடிவை” வெளியிடுவதும் வழக்கம்தான் ஆனால் […]
Continue reading …
இதுவரை அமெரிக்க வரலாற்றிலேயே அதிக வாக்குகளை பெற்று ஜோ பைடன் சாதனை படைத்துள்ளார். அமெரிக்க வரலாற்றில், அதிக மக்கள் வாக்குகளை பெற்ற முதல் அதிபர் வேட்பாளர் என்ற பெருமை ஜோ பைடனுக்கு கிடைத்துள்ளது. இதுவரை எண்ணப்பட்ட வாக்குகளில், அதிபர் வேட்பாளர் ஜோ பைடனும், துணை அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ் இருவரும் சேர்ந்து 7.2 கோடி வாக்குகளை பெற்றுள்ளனர். குடியரசு கட்சி வேட்பாளரான டிரம்புக்கு 6.86 கோடி வாக்குகள் கிடைத்துள்ளது. 12 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த அமெரிக்க […]
Continue reading …
அமெரிக்க அதிபர் தேர்தலில் தற்போதுவரை முடிவுகள் தெரியாத நிலையில் அங்கு நடந்த அதிபர் தேர்தலில் பல்வேறு சுவாரசிய சம்பவங்கள் அரங்கேறியுள்ளன இந்நிலையில், டெலாவேர் மாகாணத்தி ல் ஜனநாயக கட்சியை சேர்ந்த சாரா மெக்ப்ரைட் என்ற திருநங்கை செனட் உறுப்பினராக வெற்றிபெற்றுள்ளார். இதன்படி டெலாவேர் செனட்டில் முதல் திருநங்கை உறுப்பினர் என்ற பெயர் சாரா மெக்ப்ரைடுக்கே. சாராவை எதிர்த்து போட்டியிட்ட குடியரசு கட்சி வேட்பாளர் ஸ்டீவ் வாஷிங்டன் தோல்வியடைந்துள்ளார். டெலாவேரில் வடக்கு வில்மிங்டன் முதல் பென்சில்வேனியா எல்லை வரை முழுக்க முழுக்க ஜனநாயகக் கட்சிக்கு ஆதரவான பகுதிகளாகும். […]
Continue reading …