டீசல் பெட்ரோல் கார்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் உலக நாடு எது?

Filed under: உலகம் |

உலகில் இப்போதைய நிலையில் கொரோனாவுக்கு அடுத்து பெரும் சிக்கலாகப் பேசப்படுவது சுற்றுச்சூழல் சீர்கேடுகள்தான். ஆம். நாளுக்கு நாள் காற்று, சுற்றுப்புறம் மாசடைந்து கொண்டே இருக்கின்றன.

கொரோனா கால லாக்டெளன் நேரத்தில் போக்குவரத்து குறைவானது. அதனால், காற்றில் மாசு பெருமளவு குறைந்த செய்திகளைப் படித்திருப்போம்.

காற்றில் கார்பன் டை ஆக்ஸைடை அதிகரிப்பதில் வாகனங்களில் வெளிவரும் புகைக்குப் பெரும் பங்கு இருக்கிறது. வளர்ந்த நாடுகளில் வீட்டுக்கு குறைந்த பட்சம் ஒரு காராவது இருக்கிறது. அதனால், காற்று மாசுபடுதல் அதிகமாகவும் இருக்கிறது. இங்கிலாந்து அந்நாடுகளில் ஒன்று.

இங்கிலாந்து பிரதமர் போரீஸ் ஜான்சன் இதற்கு ஒரு தீர்வை அறிவித்திருக்கிறார்.

ஏற்கெனவே இங்கிலாந்தின் திட்டப்படி 2040 ஆண்டு முதல் அந்நாட்டில் யாரும் டீசல், பெட்ரோலால் இயக்கப்படும் கார்களை யாரும் பயன்படுத்தகூடாது என்பதே நிலை. ஆனால், அதற்கு இன்னும் நிறைய ஆண்டுகள் இருக்கிறதே என்று 2035 ஆண்டுக்குப் பிறகு யாரும் டீசல், பெட்ரோலால் இயங்கும் காரை இயக்கக் கூடாது என்று அறிவித்தார். இன்னும் அந்தத் திட்டத்தை துரிதப்படுத்தும் விதமாக, 2030 ஆண்டு முதலே இந்தத் தடை தொடங்கும் என்று கூறியிருக்கிறார்.

அப்படிப் பார்த்தால் 2020 ஆம் ஆண்டு முடிய இன்னும் ஒரு மாதம்தான் இருக்கிறது. அப்படியெனில், இன்னும் 9 ஆண்டுகளில்  இங்கிலாந்தில் டீசல், பெட்ரோலால் இயங்கும் கார்களுக்குத் தடா.

இந்த வகை கார்களுக்கு பதிலாக மின்சாரத்தால் இயங்கும் கார்களை உற்பத்தி செய்வதில் வேகம் காட்ட முயற்சிகளை எடுக்க விருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.