இலங்கை அரசு, தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராக கொச்சைப்படுத்தப்பட்ட விமர்சனங்களை அனுமதித்தது உலக நாடுகளின் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளது. இலங்கை அதிபரின் ஆணவம் தமிழ் துரோகிகளால் மெருகேற்றப்பட்டு, இந்திய அரசின் சுயநல அரசியல்வாதிகளின் ஆதரவுடன் வெளிப்படுத்த முயற்சி செய்யப்பட்டு இருக்கலாம் என்ற கருத்து உலவுகிறது. ஜெயலலிதாவை அரசியல் ரீதியாக எதிர்க்க பதுங்கும் தமிழக அரசியல் கோழைகள், இலங்கை அதிபரை உசுப்பிவிட்டு வேடிக்கை பார்த்திருக்கிறார்கள் என்ற கருத்து உலவுகிறது. உண்மையில் இந்த விமர்சனங்களால் அலறும் இலங்கை அரசியல்வாதிகள், […]
Continue reading …ஸ்காட்லாந்து: காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் வண்ணமயமான நிகழ்ச்சிகளுடன் நிறைவடைந்தது.கடந்த 23 ஆம் தேதி ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் 20வது காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் தொடங்கியது. இதன் நிறைவு விழா ஹம்ப்டன் அரங்கில், இசை நிகழ்ச்சிகள் மற்றும் வாணவேடிக்கைகளுடன் நிறைவடைந்தது. இந்திய நேரப்படி நள்ளிரவு 1.30 மணி அளவில், நிறைவு விழா நிகழ்ச்சிகள் களைகட்ட தொடங்கின.முதலில் நட்சத்திரம் வடிவிலான விழா மேடையின் எதிரே, குடில்கள் போல் வடிவமைக்கப்பட்ட பிளாஸ்டிக் கூடாரங்களை கொண்டு 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கலைஞர்கள் நடனமாடினர். பின்னர், […]
Continue reading …காமன்வெல்த் ஹாக்கி இறுதிச் சுற்றில், ஆஸ்திரேலியாவிடம் தோல்வியுற்ற இந்திய ஆடவர் அணி வெள்ளிப் பதக்கத்தை வென்றது. கிளாஸ்கோவில் இன்று நடைபெற்ற இறுதிச் சுற்றில், இந்திய ஆடவர் ஹாக்கி அணி 0-4 என்ற கணக்கில் தோல்வியைத் தழுவியது. ஆடவர் ஹாக்கி போட்டியில் இரண்டாம் இடம் வகித்ததால், இந்தியாவுக்கு வெள்ளிப் பதக்கம் கிட்டியது. முன்னதாக, 2010-ல் நடைபெற்ற இறுதிப் போட்டியிலும் இந்தியாவை ஆஸ்திரேலிய ஹாக்கி அணி தோற்கடித்தது குறிப்பிடத்தக்கது. இன்றைய போட்டியில், தனக்கு கிடைத்த மூன்று பெனால்டி கார்னர் வாய்ப்புகளையும் […]
Continue reading …நேபாளத்தின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த இந்தியா சார்பில் ரூ.6,000 கோடி கடனுதவி வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இரண்டு நாள் பயணமாக நேபாளத் தலைநகர் காத்மாண் டுக்கு ஞாயிற்றுக்கிழமை காலை சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அந்த நாட்டு பிரதமர் சுஷில் கொய்ராலா மரபை மீறி விமான நிலையத்துக்கு நேரில் வந்து வரவேற்றார். அங்கிருந்து காரில் ஹோட்டலுக்கு சென்ற மோடியை வழிநெடுகிலும் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு நின்று வரவேற்றனர். நேபாள […]
Continue reading …‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தின் கதாநாயகி ஸ்வாதி சென்னையில் உள்ள ஒரு தொழிலதிபரை ரகசியமாக திருமணம் செய்து கொள்வதாக பேசப்பட்டது. ‘வடகறி’ படத்தில் இப்போது ஸ்வாதி நடித்துக்கொண்டிருக்கிறார். நடிப்பது மட்டுமே என் தொழில். காதலைப் பற்றியோ திருமணத்தை பற்றியோ சிந்தித்தது கூட இல்லை என்று சொல்லிவிட்டார் ஸ்வாதி.
Continue reading …இதழியல் புலனாய்வில் இருபது ஆண்டுகள்… எல்லோரும் வியக்கும் இமாலய சாதனை! ஏ.எஸ். மணியென்னும் இரும்பு மனிதனின் இரத்தமும், வியர்வையும் கலந்த கலவை மொழியிது! அடக்க நினைத்த ஆட்சியாளர்கள் அடிக்க துடித்த அரசியலாளர்கள் முடக்க விரைந்த கெடுமதியாளர்கள் மூர்க்கம் நிகழ்த்திய கொடுங்கோலர்கள்! கைது, வழக்கு, சிறைகள்… கர்ண -கொடூர சித்ரவதைகள் காலாபானி சிறையில் நடந்தவை கண்முன் நடந்த காலக்கொடுமை! சதிவலைகளின் சாகச சிரிப்பில் உரிமையாளர் கைது ஓகே… உறவுகள் சுமந்த கொடுமைகள் கண்டு இரும்பு விலங்கும் இளகி அழுததே! […]
Continue reading …20 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது நெற்றிக்கண்! நவீன நெற்றிக்கண் வார இதழ், 1995 ஏப்ரல் 5ம் தேதி துவக்கப்பட்டது! பத்தொன்பது ஆண்டுகளை வெற்றிகரமாகக் கடந்து, 20வது ஆண்டில்… *வாசகர்கள்… *முகவர்கள்… *செய்தியாளர்கள் நண்பர்கள் மற்றும் நெற்றிக்கண் குடும்பத்தாரின் ஆணி வேர்கள் துணையோடு அடியெடுத்து வைக்கிறது! நெருப்பாற்றில் நீந்தும் எங்களது முயற்சிக்கு துணையாக நிற்கும் அனைவருக்கும் இதயம் கனிந்த நன்றி! ஏ.எஸ். மணி ஆசிரியர் & வெளியீட்டாளர்.
Continue reading …தமிழனாய் பிறந்தவன் எந்த நாட்டிலும் நிச்சயம் சாதனை படைப்பான். அது தமிழன் ரத்தத்தின் வீரியம். மலேசியத் தமிழர்கள் மலேசியாவிலேயே ஒரு தமிழ்ப்படத்தை உருவாக்கி வெற்றி சாதனை படைத்துள்ளனர். படத்தின் பெயர் அடுத்த கட்டம். மலர்மேனி பெருமாள், அகோர்திரன் சகாதேவன், காந்திபன் நடிப்பில் ஜெய்ராகவேந்திரா இசையில் ரஞ்சன் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்ய, முரளிகிருஷ்ணன் முனியன் இயக்கிய இந்தப்படம் இளம் பெண் ஒருத்தி கடத்தப்பட்டு அவளை மீட்கச் சென்ற அவளின் கணவனும் சிக்கி மரண எல்லையை தொட்டு உயிர் மீள்கிறார்கள். […]
Continue reading …லண்டன்: புகை பிடிக்கும் பழக்கம் உடைய ஆண்களை விட பெண்கள்தான் அதை விட ரொம்பச் சிரமப்படுகிறார்களாம். ஆண்கள் கூட எளிதாக புகை பிடிப்பதை விட்டு விட முடிகிறதாம். ஆனால் பெண்களுக்கு கூடுதல் அவகாசம் தேவைப்படுகிறதாம். எல்லாம் மூளை படுத்தும் பாடுதான் இதற்குக் காரணம் என்பது லேட்ஸ்ட் ஆய்வு கூறும் தகவலாகும்.
Continue reading …கோலிவுட்டின் டாப் நாயகியாகிவிட்டார் ஹன்சிகா. காரணம் அவர் நடித்த இரண்டு படங்களும் அடுத்தடுத்து வெற்றிப் பெற்றதுதான். தீயா வேலை செய்யணும் குமாரு, சிங்கம் 2 ஆகிய இரு படங்களும் தொடர் வெற்றிகளைப் பெற்றுள்ளன. குறிப்பாக சிங்கம் 2 இன்னும் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது.
Continue reading …