விரைவில் நடைபெற உள்ள நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நிலையில் கட்சியில் உறுப்பினர்களை சேர்க்கும் பணி தீவிரம் எடுத்து வருகிறது. தமிழக வெற்றிக் கழகம் என கட்சி பெயரை நடிகர் விஜய் தனது அரசியல் பயணத்தை அறிவித்தார். சமீபத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சிக் கொடியும் அறிமுகப்படுத்தப்பட்டது. கொடியில் இரண்டு பக்கம் யானைகள், நடுவே வெற்றியைக் குறிக்கும் வாகை பூ, மஞ்சள், சிவப்பு நிறம் கொண்ட அந்த கொடியை நடிகர் விஜய் அறிமுகப்படுத்தினார். […]
ஜெய் ஷா சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் (ஐசிசி) தலைவராக போட்டின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் (ஐசிசி) தலைவராக இருக்கும் கிரெக் பார்க்லேவின் பதவிக்காலம் வரும் நவம்பர் 30ம் தேதியுடன் முடிவடைகிறது. இரண்டு ஆண்டுகள் பதவிக்காலம் கொண்ட ஐசிசி தலைவர் பதவியில் ஒருவர் மூன்று முறை பதவி வகிக்கலாம். இப்பதவிக்கு இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயலாளரும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மகனுமான ஜெய் ஷா, போட்டியிட்டார். அவரை எதிர்த்து யாரும் நிற்காததால் அவர் […]
Continue reading …விமல் நாயகனாக நடித்து, தயாரித்து வெளியான “மன்னர் வகையறா” படத்திற்கு அரசு பிலிம்ஸ் கோபி என்பவர் ரூ.5 கோடி கடனாக கொடுத்திருந்தார். கோபியிடம் படம் வெளியாகும் சமயத்தில் வட்டியுடன் திருப்பித் தருவதாக கூறிய-ள்ளார் விமல். ஆனால் சொன்னபடி பணத்தை திருப்பி கொடுக்கவில்லை. இதனால் 2020ம் ஆண்டு சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் விமல் மீது காசோலை மோசடி வழக்கு தொடர்ந்தார் கோபி. இதனை மழுங்கடிப்பதற்காகவும், பணம் கொடுக்காமல் தப்பிப்பதற்காகவும் கோபி, சிங்காரவேலன் ஆகியோர் மீதுவிருகம்பாக்கம் காவல் நிலையத்தில் […]
Continue reading …வரும் செப்டம்பர் 5ம் தேதி விஜய் நடித்த ‘கோட்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. சமூக ஆர்வலர் இப்படத்திற்கு கூடுதல் கட்டணம் வசூலிக்க தடை விதிக்க வேண்டும் என்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகாரளித்துள்ளார். “கோட்” திரைப்படம் விஜய் நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில், ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ளது. இப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் உள்ளது. இன்னும் ஒரு சில நாட்களில் இந்த படத்திற்கான முன்பதிவு தொடங்க […]
Continue reading …இயக்குனர் பி எஸ் வினோத்ராஜ் “கூழாங்கல்” படத்தின் மூலம் நம்பிக்கைக் கொடுத்தவரானார். இவரது இரண்டாவது படமான ‘கொட்டுக்காளி’ கடந்த வாரம் ரிலீசானது. இப்படத்தில் சூரி மற்றும் அன்னா பென் ஆகிய இருவரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். மற்ற கதாபாத்திரங்களில் எல்லாம் புதுமுக நடிகர்கள் பலர் நடித்துள்ளனர். சிவகார்த்திகேயன் இத்திரைப்படத்தைத் தயாரித்துள்ளார். பின்னணி இசையில்லாமல் உருவான இந்த திரைப்படம் ரிலீசுக்கு முன்னரே பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியது. அதற்கு முக்கியக் காரணம் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்கள் பலர் இப்படத்தைப் […]
Continue reading …கடந்த மாதம் ஐதராபாத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் கூலி படத்தின் ஷூட்டிங் தொடங்கியது. இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்க, அன்பறிவ் சண்டைக் காட்சிகளை இயக்க, கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவாளராக பணியாற்றுகிறார். இத்திரைப்படம் ஒரு மல்டி ஸ்டார் படமாக உருவாகி வருவதால் பல முன்னணி நடிகர்கள் நடிக்கின்றனர். சத்யராஜ், நாகார்ஜுனா, ஸ்ருதிஹாசன் ஆகியோர் இதுவரை ஒப்பந்தமாகியுள்ளனர். சமீபத்தில் படத்தில் கன்னட நடிகர் உபேந்திரா இணைந்தார். இவர் “கூலி” படத்தின் படப்பிடிப்புத் தளத்தில் ரஜினிகாந்தோடு இருக்கும் புகைப்படம் வெளியாகி […]
Continue reading …கடந்த வெள்ளிக் கிழமையன்று மாரி செல்வராஜ் இயக்கத்தில் ‘வாழை’ படம் வெளியானது. இத்திரைப்படத்தில் கலையரசன், நிக்கிலா விமல், திவ்யா துரைசாமி மற்றும் பல குழந்தை நட்சத்திரங்கள் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, மாரி செல்வராஜ் ஹாட்ஸ்டார் நிறுவனத்தோடு இணைந்து தயாரித்துள்ளார். இந்த படம் தற்போது நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. திரைப்படத்தின் ரிலீஸுக்கு முன்பே இதற்கு ஒட்டுமொத்த தமிழ் சினிமா இயக்குனர்களும் சேர்ந்து புரமோஷன் செய்தனர். இப்போது “இறுதிச்சுற்று” மற்றும் “சூரரைப் போற்று” ஆகிய […]
Continue reading …நடிகர் ரஜினிகாந்த் சமீபத்தில் அமைச்சர் எ வ வேலு எழுதிய ‘கலைஞர் எனும் தாய்’ நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசினார். அவரது பேச்சில், அமைச்சர் துரைமுருகன் குறித்து நக்கலாகப் பேசியது வைரல் ஆனது. அதில் “துரைமுருகன் எல்லாம் கலைஞர் கண்ணிலேயே விரல்விட்டு ஆட்டியவர். அவரை எல்லாம் இப்போது முதலமைச்சர் ஸ்டாலின் சரியாக கட்டுப்பாட்டில் வைத்துள்ளார்” எனப் பேசினார். இப்பேச்சைக் கேட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிரித்து ரசித்தார். அதற்கு பதிலடியாக அமைச்சர் துரைமுருகன் ”சினிமாவில் பல்லு போன […]
Continue reading …சில் அரசியல் பிரபலங்கள் விஜய் கட்சியில் இணைய இருப்பதாக கூறப்படுகிறது. வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் போட்டியிட உள்ளது. இக்கட்சியின் முதல் மாநாடு விரைவில் நடைபெற உள்ளது. இந்த முதல் மாநாட்டில் பிற கட்சியில் உள்ள சில அரசியல் கட்சி தலைவர்கள் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஏசி சண்முகம், தடா பெரியசாமி, பண்ருட்டி ராமச்சந்திரன், பழ கருப்பையா, தமிழருவி மணியன் ஆகியோர் விஜய் கட்சியில் இணையப் போவதாக விஜய் கட்சியின் […]
Continue reading …சுரேஷ் கோபி திரைப்படங்களில் நடிக்க கூடாது என்று அழுத்தம் கொடுத்தால் அமைச்சர் பதவியிலிருந்து விலகுவேன் என தெரிவித்திருத்துள்ளார். பாஜக வேட்பாளர் சுரேஷ் கோபி சமீபத்தில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கேரளாவில் வெற்றி பெற்ற ஒருவர். அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்ட மறுநாளே அவர் தனது பதவியை ராஜினாமா செய்ததாகவும் கூறப்பட்டது. திருவனந்தபுரத்தில் கேரள திரைப்பட வர்த்தக சபையில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சுரேஷ் கோபி திரைப்படங்களில் நடிப்பதால் தன்னை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கினாலும் பரவாயில்லை […]
Continue reading …