Home » Archives by category » சினிமா (Page 123)

வசூலில் முன்னணியில் உள்ள “காந்தாரா”!

Comments Off on வசூலில் முன்னணியில் உள்ள “காந்தாரா”!

“விக்ரம்”, “பொன்னியின் செல்வன்” போன்ற பிளாக்பஸ்டர் திரைப்படங்களின் வசூல்களை முந்தியுள்ளது “காந்தாரா” படத்தின் தெலுங்கு வெர்ஷன். “கேஜிஎப்” திரைப்படத்தின் மூலம் பிரபலமான தயாரிப்பு நிறுவனமானது ஹோம்பலே பிலிம்ஸ். அடுத்து வரிசையாக பல திரைப்படங்களை தயாரித்து வருகிறது. அவ்வகையில் அவர்களின் அடுத்த வெளியீடாக கடந்த வாரம் வெளியான “காந்தாரா” திரைப்படம் நல்ல விமர்சனங்களைக் குவித்து வருகிறது. இந்நிலையில் இப்போது ஐஎம்டிபி ரேட்டிங்கில் இந்தியளவில் முதலிடம் பிடித்துள்ளது. 9.5 மதிப்பெண்களுடன் முதலிடத்தில் உள்ளது. இந்திய அளவில் “ஜெய்பீம்” திரைப்படம் 8.9 […]

Continue reading …

புதிய அவதாரமெடுக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்!

Comments Off on புதிய அவதாரமெடுக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்!

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இந்தியா தென் ஆப்பிரிக்கா போட்டியில் வர்ணனையாளராக களமிறங்க உள்ளார் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன. கதாநாயகிகளுக்கு முக்கியத்துவமுள்ள படங்களை தேர்வு செய்து நடிப்பவர்களில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் ஆகியோருக்கு அடுத்த இடத்தில் இருப்பவர் ஐஸ்வர்யா ராஜேஷ். அவர், தற்போது நடித்துவரும் திரைப்படங்களில் ஒன்று “டிரைவர் ஜமுனா,” “சொப்பன சுந்தரி” உட்பட படங்கள் அடுத்தடுத்து ரிலீசாகக உள்ளன. இந்நிலையில் நேற்று நடந்த இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான போட்டியின் தமிழ் வர்ணனையில் […]

Continue reading …

சிவகார்த்திகேயன் திரைப்படம் கோடிக்கணக்கில் நஷ்டமா?

Comments Off on சிவகார்த்திகேயன் திரைப்படம் கோடிக்கணக்கில் நஷ்டமா?

தீபாவளிக்கு ரிலீசாகியுள்ள சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் “பிரின்ஸ்” திரைப்படம் எதிர்மறை விமர்சனங்களை பெற்றுள்ளது. நேற்று முன் தினம் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘பிரின்ஸ்’ திரைப்படம் வெளியானது. ரிலீசுக்கு முன்னதாக திடீரென இந்த திரைப்படத்தில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. ‘பிரின்ஸ்’ திரைப்படத்தின் ரன்னிங் டைம் இரண்டு மணி நேரம் இருபத்தி மூன்று நிமிடங்கள் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்தப் படத்தின் நீளம் திடீரென 12 நிமிடங்கள் குறைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளன. இந்த மாற்றமே படம் மீது ரசிகர்களின் […]

Continue reading …

ராமராஜனின் கம்பேக்!

Comments Off on ராமராஜனின் கம்பேக்!

தமிழ் சினிமாவில் 80களின் இறுதியிலும் 90களின் தொடக்கத்திலும் ரஜினி, கமல் மற்றும் விஜயகாந்த் ஆகியவர்களுக்கு இணையாக வலம் வந்தவர் நடிகர் ராமராஜன். சைக்கிளில் வந்து அவர் வீட்டில் கால்ஷீட் வாங்கி படம் தயாரித்து கோடீஸ்வரர்களான தயாரிப்பாளர்கள் உண்டு. அந்த அளவுக்கு தயாரிப்பாளர்களின் நடிகராக வலம் வந்த அவர் ஒரு கட்டத்தில் தனது படங்கள் தோல்வி அடைந்ததால் மார்க்கெட்டை இழந்தார். அதன் பின் அதிமுகவில் தீவிரமாக இயங்கிய அவர் அதன்பின் அரசியலில் இருந்தும் விலகினார். இப்போது ஓய்வில் இருக்கும் […]

Continue reading …

காந்தாராவின் சூப்பர் டூப்பர் வெற்றி!

Comments Off on காந்தாராவின் சூப்பர் டூப்பர் வெற்றி!

வெறும் 20 கோடியில் எடுக்கப்பட்ட காந்தாரா திரைப்படம் 200 கோடி வசூல் செய்திருப்பது திரையுலகினர் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டி நடித்து இயக்கிய திரைப்படம் “காந்தாரா.” இப்படம் கன்னடத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்றதையடுத்து தமிழ் மற்றும் தெலுங்கில் டப்பிங் செய்து வெளியிடப்பட்டது. படம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் 100 கோடி ரூபாய் வசூல் செய்த நிலையில் தற்போது 200 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை செய்துள்ளது. வெறும் […]

Continue reading …

ஹெச் வினோத் பதற்றம்!

Comments Off on ஹெச் வினோத் பதற்றம்!

அஜீத் நடித்துக் கொண்டிருக்கும் “துணிவு” படத்தின் கிராபிக்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. அஜீத் நடித்துவரும் “துணிவு” திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. படத்தின் அடுத்தகட்ட பணியான டப்பிங் தொடங்கி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளன. சென்னையிலுள்ள முக்கிய டப்பிங் தியேட்டரில் சமீபத்தில் “துணிவு” படத்தின் டப்பிங் பணிகள் தொடக்கத்திற்கான பூஜை நடைபெற்றது. இந்த பூஜையில் படக்குழுவினர் கலந்து கொண்டனர். இதையடுத்து இப்போது படத்தின் கிராபிக்ஸ் பணிகளும் தற்போது தொடங்கியுள்ளதாம். படத்தில் நிறைய கிராபிக்ஸ் காட்சிகள் இடம்பெற்றுள்ளதால் […]

Continue reading …

விஜய் பட ரிலீஸ் உரிமையை பெற்ற பிரபல தயாரிப்பாளர்!

Comments Off on விஜய் பட ரிலீஸ் உரிமையை பெற்ற பிரபல தயாரிப்பாளர்!

நடிகர் விஜய் நடித்துக் கொண்டிருக்கும் “வாரிசு” திரைப்படத்தின் தமிழ் ரிலீஸ் உரிமையைக் பிரபல தயாரிப்பாளர் ஒருவர் கைப்பற்றியுள்ளார். இத்திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீசாவது படக்குழு உறுதி செய்துள்ளது. “வாரிசு” திரைப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இப்படத்தில் விஜய்யுடன் ராஷ்மிகா மந்தனா, பிரபு, பிரகாஷ் ராஜ் மற்றும் ஜெயசுதா ஆகியோர் நடிக்கின்றனர். படம் 2023ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீசாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கில் “வார்சாடு” என்ற பெயரில் உருவாகி வரும் இத்திரைப்படம் […]

Continue reading …

விக்னேஷ் சிவன் – நயன்தாரா ஜோடிக்கு நெருக்கடி!

Comments Off on விக்னேஷ் சிவன் – நயன்தாரா ஜோடிக்கு நெருக்கடி!

வாடகைத்தாய் முறையில் குழந்தை பெற்றது தொடர்பாக விக்னேஷ் சிவன் & நயன்தாரா தம்பதியருக்கு விசாரணை நடந்து வரும் நிலையில் மருத்துவமனையிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. நயன்தாரா – விக்னேஷ் சிவன் இருவரும் சமீபத்தில் திருமணம் நடந்து முடிந்தது. திருமணமாகி 4 மாதங்களிலேயே தங்களுக்கு இரட்டை குழந்தை பிறந்திருப்பதாக அவர்கள் பதிவிட்டிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. அவர்கள் வாடகைத்தாய் முறையில் குழந்தை பெற்றுள்ளதாக கூறப்பட்ட நிலையில் அதில் விதிமீறல்கள் நடந்துள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இதுதொடர்பாக சுகாதாரத்துறை அமைத்த விசாரணை குழு […]

Continue reading …

இசையமைப்பாளராகும் இயக்குனர் மிஷ்கின்!

Comments Off on இசையமைப்பாளராகும் இயக்குனர் மிஷ்கின்!

இயக்குனர் மிஷ்கின் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். அதோடு ‘நான் நாவலைப் படமாக்க மாட்டேன்’ என்றும் கருத்து தெரிவித்துள்ளார். முன்னணி இயக்குனர்களில் ஒருவரான மிஷ்கின் இப்போது “பிசாசு 2” படத்தை இயக்கி வருகிறார். மிஷ்கினின் படங்களில் எப்போதும் பின்னணி இசையும் பாடல்களும் மக்கள் மத்தியில் அதிக கவனத்தை பெற்றுள்ளது. அது இளையராஜா இசையமைத்ததாக இருந்தாலும், அறிமுக இசையமைப்பாளராக இருந்தாலும் சரி. அந்தளவுக்கு இசையில் ஈடுபாடு கொண்டவர் மிஷ்கின். அவர், தனது தம்பி அதித்யா இயக்கும் புதிய திரைப்படத்துக்கு இசையமைப்பாளராக பணியாற்றவுள்ளார். […]

Continue reading …

நடிகர் கார்த்தி ரசிர்களுக்கு கூறிய நன்றி!

Comments Off on நடிகர் கார்த்தி ரசிர்களுக்கு கூறிய நன்றி!

நடிகர் கார்த்தி நடித்துள்ள “சர்தார்” திரைப்படத்தின் வெற்றிக்கு மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். பிஎஸ் மித்ரன் இயக்கத்தில், நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள படம் “சர்தார்.” இரு வேடங்களில் கார்த்தி நடித்துள்ள இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். படத்தில் ராஷி கண்ணா, ரஜிஷா விஜயன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படம் தீபாவளி பண்டிகையொட்டி நேற்று ரிலீசாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், “சர்தார்” திரைப்படம் மக்களின் வரவேற்பை பெற்றது குறித்து, கார்த்தி தனது டுவிட்டர் பக்கத்தில், “மக்களே, “சர்தார்” […]

Continue reading …