
கருணாஸ் ராஜ ராஜ சோழன் காலத்தில் ஏது இந்து? ஏது இந்தியா? என கேள்வியெழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியபோது, “ராஜராஜசோழன் காலத்தில் ஏது இந்து? ஏது இந்தியா? இந்தியா என்ற பெயரே ஆங்கிலேயர்கள் வணிகத்திற்காக உருவாக்கியது; இந்து மதத்தையும் அவர்களே உருவாக்கினார்கள். இந்தியா என்பது ஒரு தேசமில்லை. அது பல தேசங்களின் ஒன்றியம் ஆரியம் எப்போதும் ஒன்றை எதிர்க்கும். அது முடியாது என்று தெரிந்து விட்டால் அதை தனதாக்கிக் கொள்ளும்; அப்படித்தான் எல்லாவற்றையும் தனக்கானதாகவே மாற்றிக்கொண்டது. இப்போதும் […]
Continue reading …
நடிகர் விஜய் 67 படத்திற்கான விறுவிறுப்பான வேலைகளில் முனைப்புடன் ஈடுபட்டு வருகிறார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். “விக்ரம்“ திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் விஜய்யின் அடுத்த படத்தை இயக்கப் போவதாக தகவல்கள் வெளியானது. படத்தில் கதாநாயகி என்று யாருமில்லை என்றும் அதுபோலவே படத்தில் பாடல்களும் இல்லாமல் முழுக்க முழுக்க ஆக்ஷன் காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட உள்ளதாகவும் கூறப்பட்டது. ஆனால் இப்போது ஒரு முக்கிய வேடத்தில் சமந்தா நடிக்கப் போவதாக தகவல்கள் பரவி […]
Continue reading …
“வேள்பாரி” திரைப்படமும் “பாகுபலி,” “பொன்னியின் செல்வன்” திரைப்பட வரிசையில் உருவாகிறதா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் உருவாகி உள்ளது. மக்களவை உறுப்பினருமான சு.வெங்கடேசன் எழுதிய வேள்பாரி நாவலை இயக்குனர் ஷங்கர் படமாக்க உள்ளதாக கூறப்படுகிறது. “பாகுபலி” மற்றும் “பொன்னியின் செல்வன்” போன்ற வரலாற்று திரைப்படங்களின் வெற்றியையடுத்து மறுபடியும் ஒரு வரலாற்று புனைவு திரைப்படம் உருவாக உள்ளது ரசிகர்களை எதிர்பார்ப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் இப்படம் அடுத்தகட்டத்துக்கு நகர்ந்தால் அதில் கதாநாயகனாக கேஜிஎப் படப்புகழ் யாஷ் கதாநாயகனாக நடிக்கவுள்ளார் என்று […]
Continue reading …
இயக்குனர் பாலா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் “வணங்கான்” திரைப்படத்தின் ஷூட்டிங் சில நாட்களே நடைபெற்றது. தற்போது இத்திரைப்படத்தின் நிலை என்ன என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. “நாச்சியார்” படத்துக்குப் பின்னர் இயக்குனர் பாலாவின் அடுத்த படத்தில் சூர்யா நடித்து அந்த படத்தை தயாரிக்கவும் உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து 34 நாட்கள் கன்னியாகுமரியில் முதல்கட்ட படப்பிடிப்பு நடந்தது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பு இன்னும் தொடங்கப்படவில்லை. இந்நிலையில் “வணங்கான்” என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இத்திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாக […]
Continue reading …
இயக்குனர் ராம் மற்றும் நிவின் பாலி இணைந்து உருவாகிக் கொண்டிருக்கும் திரைப்படத்தின் தலைப்பு பற்றிய அறிவிப்பு எப்போது வெளியாகும் என்ற ஆவல் ரசிகர்களிடம் எழுந்துள்ளது. இவர்களது திரைப்படத்தை சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார். இப்படத்தில் சூரி மற்றும் அஞ்சலி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். சென்னையை சுற்றியுள்ள பகுதி மற்றும் ராமேஸ்வரத்தில் படப்பிடிப்பு நடந்து முடிந்தது. இப்படத்தில் விலங்குகள் அதிகளவில் நடித்து வருவதாக சொல்லப்படுகிறது. படம் முழுவதும் விலங்குகள் ஒரு கதாபாத்திரம் போலவே வரும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளதாம். […]
Continue reading …
“லெஜண்ட்”, “இரவின் நிழல்” ஆகிய படங்களின் ஓடிடியில் ரிலீசாவது எப்போது என்ற கேள்வி எழுந்துள்ளது. சமீபத்தில் ஒரு அறிமுக நடிகருக்கு இவ்வளவு அதிக பட்ஜெட்டில் பிரம்மாண்ட திரைப்படமா என வியக்க வைக்கும் அளவுக்கு வெளியானது ‘தி லெஜண்ட்’ திரைப்படம். அதிக விளம்பரங்களோடு ரிலீஸான இத்திரைப்படம் பெரிய வெற்றி பெறவில்லை. ஆனாலும் இப்படத்தை இன்னும் ஓடிடியில் ரிலீஸ் ஆகவில்லை. இந்த படத்துக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். அதே போல பார்த்திபன் இயக்கம் மற்றும் நடிப்பில் வெளியான சிங்கிள் ஷாட் […]
Continue reading …
ஓடிடியில் “பேட்டைக்காளி” வெப் தொடர் பிரபலமான ஓடிடிக்காக வெற்றிமாறன் தயாரிப்பில் உருவாகி வருகிறது. இது ஜல்லிக்கட்டை மையமாக வைத்து உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இயக்குனர் வெற்றிமாறன் ஜல்லிக்கட்டு சம்மந்தமாக “வாடிவாசல்” திரைப்படத்தை விரைவில் இயக்கவுள்ளார். இந்நிலையில் இப்போது ஜல்லிக்கட்டை மையமாக வைத்து “பேட்டைக்காளி” என்ற வெப் தொடரை ஆஹா ஓடிடிக்காக தயாரிக்கவுள்ளார். இத்தொடரை ராஜ்குமார் இயக்க, கிஷோர் மற்றும் கலையரசன் ஆகியோர் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையில் இந்த வெப் தொடர் உருவாக உள்ளது.
Continue reading …
இயக்குனர் கே.வி.அனுதீப் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியிருக்கும் “பிரின்ஸ்” திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் அக்டோபர் 9ம் தேதி நடைபெறப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. வரும் தீபாவளியன்று திரைக்கு வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது “பிரின்ஸ்” திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ளதாக படக்குழுவினர் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படத்தின் கடைசி நாள் படப்பிடிப்பின்போது படக்குழுவினர் […]
Continue reading …