Home » Archives by category » சினிமா (Page 135)

சிம்பு திரைப்படத்தின் டிரையிலர்!

Comments Off on சிம்பு திரைப்படத்தின் டிரையிலர்!

நடிகர் சிம்பு நடித்துள்ள “வெந்து தணிந்தது காடு” திரைப்படத்தின் டிரையிலர் நேற்று வெளியானது. “வெந்து தணிந்தது காடு” திரைப்படத்தின் டிரையிலர் மற்றும் பாடல்கள் நேற்று வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. குறிப்பாக இப்படத்தின் டிரையிலர் 2 நிமிடங்கள் உள்ளன. அதில் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் மற்றும் சென்டிமென்ட் காட்சிகள் உள்ளன. சாதாரண இளைஞன் ஒரு கொள்ளைக்கூட்டத்தில் இணைந்து படிப்படியாக உயர்ந்து டான் ஆகும் கதையம்சம் கொண்ட இத்திரைப்படத்தில் சிம்பு வெவ்வேறு தோற்றங்களில் நடித்துள்ளார். அதிரடி ஆக்ஷன் காட்சிகள் […]

Continue reading …

பாடகர் பம்பா பாகியா மறைவு!

Comments Off on பாடகர் பம்பா பாகியா மறைவு!

பாடகர் பம்பா பாகியா இன்று காலை திடீரென மரணமடைந்தார். ஏ.ஆர்.ரஹ்மான் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். இச்செய்தி திரையுலகினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது. 49 வயதான பம்பா பாகியா உடல்நிலை காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததார். இதையடுத்து திரையுலகினர் பலரும் சமூக வலைதளங்களில் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனர். “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தில் இடம்பெற்ற “பொன்னி நதி” என்ற பாடலை பம்பா பாகியா ஏ.ஆர்.ரஹ்மானுடன் இணைந்து பாடியுள்ளார். இந்நிலையில் மறைந்த பிரபல பாடகர் […]

Continue reading …

திரைப்பட ரசிகர்களுக்கு புது அறிவிப்பு!

Comments Off on திரைப்பட ரசிகர்களுக்கு புது அறிவிப்பு!

செப்டம்பர் 16ம் தேதி நாடெங்கும் தேசிய சினிமா தினம் கொண்டாடப்பட உள்ளது. அந்த தினத்தில் மட்டும் தியேட்டர்களில் டிக்கெட் கட்டணம் ரூ.75 மட்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாடெங்கும் உள்ள மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் சுமார் 4000 ஸ்க்ரீன்களில் டிக்கெட் கட்டணமாக ரூபாய் 75 மட்டுமே வசூலிக்கப்பட திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. பிவிஆர், ஐநாக்ஸ் உட்பட பல மல்டிபிளக்ஸ் திரையரங்கு நிறுவனங்கள் இந்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இதை முன்னிட்டு செப்டம்பர் 16ஆம் தேதி வெள்ளிக்கிழமை […]

Continue reading …

சூப்பர் ஸ்டார் வில்லன் இறந்துட்டாரா?

Comments Off on சூப்பர் ஸ்டார் வில்லன் இறந்துட்டாரா?

சூப்பர் ஸ்டார் நடித்து வெளியான “சிவாஜி” திரைப்படத்தில் வில்லனாக நடித்தவர் இறந்ததாக சில சமூக வலைதளங்களில் தவறான செய்திகள் வெளியாகி உள்ளது. இதனால் இந்த நடிகர் பதறிப்போய் உள்ளார். “சிவாஜி” திரைப்படத்தில் சூப்பர் ஸ்டாருக்கு வில்லனாக நடித்தவர் சுமன். இவர் கடந்த நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக திரையுலகில் இருக்கிறார். முன்னணி நடிகர் பலருக்கும் வில்லனாக நடித்துள்ளார். சமீபத்தில் லெஜெண்ட் சரவணன் நடிப்பில் வெளியான “லெஜெண்ட்” திரைப்படத்திலும் வில்லனாக நடித்துள்ளார். வில்லன் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வந்த […]

Continue reading …

ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிடும் வெற்றிமாறன் படம்!

Comments Off on ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிடும் வெற்றிமாறன் படம்!

உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகவிருக்கும் திரைப்படத்தை வெளியிடப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இயக்குனர் வெற்றிமாறனின் திரைப்படங்கள் மக்கள் மத்தியில் பெறும் வரவேற்பை பெற்று வருகிறது. அவ்வகையில் “அசுரன்” திரைப்படத்திற்குப் பிறகு “விடுதலை” திரைப்படத்தை வெற்றிமாறன் இயக்கி வருகிறார். இப்படத்தில் நடிகர் சூரி கதாநாயகனாகவும், விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்து வருகின்றனர். படத்தில் சூரிக்கு ஜோடியாக ஜி.வி.பிரகாஷின் தங்கை பவானி ஸ்ரீ, கிராமத்து பெண்ணாக நடிக்கிறார். மேலும் கௌதம் […]

Continue reading …

குழந்தை நட்சத்திரம் சூப்பர் ஸ்டாருக்கு பேரன்!

Comments Off on குழந்தை நட்சத்திரம் சூப்பர் ஸ்டாருக்கு பேரன்!

சமீபத்தில் நயன்தாரா நடிப்பில் வெளியான “ஓ2” திரைப்படத்தில் அவருக்கு குழந்தையாக நடித்திருந்த சிறுவன் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் படத்தில் பேரனாக நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘ஜெயிலர்’ படத்தை எப்படியாவது டாப் ஹிட்டாகிவிட வேண்டுமென்ற முழு முயற்சியோடு இருக்கிறார் இயக்குனர் நெல்சன் திலீப்குமார். தற்போது இப்படத்தில் தமன்னா சிறப்பு தோற்றத்தில் நடிக்க போவதாகவும், ஐஸ்வர்யா ராய் கதாநாயகியாக நடிக்கப் போவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. சமீபத்தில் இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், […]

Continue reading …

ஒரு கலைஞனின் கையில் தமிழகம் சந்தோஷம்தான்!

Comments Off on ஒரு கலைஞனின் கையில் தமிழகம் சந்தோஷம்தான்!

நடிகர் ஆனந்தராஜ் “கோப்ரா” ஆடியோ வெளியீட்டு விழாவில், கலைஞர், எம்ஜிஆர், ஜெயலிதாவுக்கு பிறகு திரைத்துறையிலிருந்து தமிழகத்தை ஆளப்போவது உதயநிதி தான், ஒரு கலைஞனின் கையில் தமிழகம் இருப்பது எங்களுக்கெல்லாம் மகிழ்ச்சியே என்று பேசியுள்ளார். “இமைக்கா நொடிகள்” மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமான அஜய் ஞானமுத்து தற்போது சீயான் விக்ரம் நடிப்பில் “கோப்ரா” திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். ஆக்ஷன், திரில்லர் ஜானரில் உருவாக்கப்பட்டிருக்கும் இப்படம் நடிகர் விக்ரமின் 58 வது திரைப்படமாகும். படத்தில் நடிகர் விக்ரமுடன் ஸ்ரீநிதி ஷெட்டி, […]

Continue reading …

ஹாலிவுட்டிற்கு செல்லும் டாப் ஹீரோ!

Comments Off on ஹாலிவுட்டிற்கு செல்லும் டாப் ஹீரோ!

ஹாலிவுட்டில் நடிகர் தனுஷ் கால்பதித்துள்ளார். இவரைத் தொடர்ந்து நடிகர் அல்லு அர்ஜுன் ஹாலிவுட் படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. நடிகர் தனுஷ் கோலிவுட், பாலிவுட்டை தொடர்ந்து ஹாலிவுட்டிலும் பிரபல நடிகராக இருக்கிறார். ஏற்கனவே இவர் நடித்த “தி கிரே மேன்” திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து “தி கிரே மேன் 2” திரைப்படத்திலும் தனுஷிற்கு முக்கிய ரோல் இருப்பதாக படத்தின் டைரக்டர்கள் ருசோ ப்ரதர்ஸ் உறுதி செய்தார். தனுஷ் பல […]

Continue reading …

‘சைரன்’ திரைப்பட மோஷன் போஸ்டர்!

Comments Off on ‘சைரன்’ திரைப்பட மோஷன் போஸ்டர்!

ஜெயம் ரவி அடுத்து நடிக்கும் படத்தின் மோஷன் போஸ்டர் தற்போது வெளியாகி உள்ளது. ஜெயம் ரவி மணிரத்னம் இயக்கியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ படத்தில், அருள்மொழி வர்மனாக நடித்துள்ளார். பிரம்மாண்டமாக உருவாகியுள்ளா இப்படம் செப்டம்பர் 30ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. ஒட்டுமொத்த இந்திய திரையுலகமே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் அருள்மொழி வர்மனாக நடித்துள்ளதால், ஜெயம் ரவி ரொம்பவே உற்சாகத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும், அவர் நடித்துள்ள ‘அகிலன்’ திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. தொடர்ந்து இரண்டு […]

Continue reading …

பாரதிராஜாவின் சிகிச்சை நிலை அறிவிப்பு!

Comments Off on பாரதிராஜாவின் சிகிச்சை நிலை அறிவிப்பு!

பிரபல இயக்குனர் பாரதிராஜா கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனையில் இருந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர், “நான் உங்கள் பாசத்துக்குரிய பாரதிராஜா பேசுகிறேன். நான் உடல்நலக்குறைவு காரணமாக சமீபத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் சிறப்பான சிகிச்சை காரணமாக நலம் பெற்று வருகிறேன். மருத்துவமனையில் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என்பதால் என்னை நேரில் காண வர வேண்டாம் என்று என் மேல் அன்பு […]

Continue reading …