
தமிழகம் முழுவதும் சக்தி பிலிம் பேக்டரி நிறுவனம் “விருமன்” திரைப்படத்தை வெளியிட்டது. கடந்த ஆகஸ்ட் 12ம் தேதி அன்று இயக்குனர் முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள “விருமன்” திரைப்படம் ரிலீஸ் ஆனது. படத்தில் கார்த்தியோடு அதிதி ஷங்கர், ராஜ்கிரண் மற்றும் பிரகாஷ் ராஜ் உட்பட ஏராளமானவர்கள் நடித்துள்ளனர். படம் வெளியாகி மிக மோசமான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூல் ரீதியாக கலக்கி வருகிறது. படம் வெளியாகி முதல் வார இறுதியில் மட்டும் வசூல் 30 கோடியை நெருங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. […]
Continue reading …
“ஷ்யாம் சிங்கா ராய்” திரைப்படம் ஆஸ்கர் பட்டியலின் மூன்று பிரிவுகளில் போட்டியிட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த ஆண்டு இறுதியில் நானி மற்றும் சாய் பல்லவி நடிப்பில் வெளியான திரைப்படம் “ஷ்யாம் சிங்கா ராய்” சுமாரான வரவேற்பைப் பெற்றது. 2021ம் ஆண்டு டிசம்பர் 24ம் தேதி வெளியான “ஷ்யாம் சிங்கா ராய்” பெரிய அளவுக்கு வரவேற்பைப் பெறவில்லை. ஆனால் ஒரு மாதம் கழித்து ஓடிடியில் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மூன்று மொழிகளில் வெளியாகி […]
Continue reading …
சமீபத்தில் நடிகர் மாதவன் நடிப்பில் வெளியான திரைப்படம் “ராக்கெட்டரி”. அந்த படத்திற்காக செலவிட்ட பட்ஜெட்டுக்கு ஏற்ற வசூலை ஈட்டவில்லை என்று கூறப்பட்டது. மாதவனுக்கு ராக்கெட்டரி படத்தால் நஷ்டம் எற்பட்டதால் அவர் தன்னுடைய சொந்த வீட்டை விற்று விட்டதாக நெட்டிசன்கள் சிலர் செய்திகளை பரப்பினர். இச்செய்திக்கு பதிலளித்துள்ள மாதவன், “நான் சொந்த வீட்டை விற்கவில்லை. நான் என்னுடைய வீட்டில் தான் தற்போது இருக்கிறேன். மேலும் ராக்கெட்டரி படத்தால் நாங்கள் நல்ல லாபத்தை பெற்றுள்ளோம். இவ்வாண்டு வருமான வரியை நாங்கள் […]
Continue reading …
மிகப்பிரலமான குணச்சித்திர நடிகர் நாசர் படப்பிடிப்பின் போது காயம் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தெலுங்கானா போலீஸ் அகாடமியில் நடிகர் நாசர் நடித்த திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நடைபெற்றது. படப்பிடிப்பில் அவர் ஸ்டண்ட் காட்சி ஒன்றில் நடித்துக் கொண்டிருந்தபோது திடீரென காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். நடிகர் நாசருக்கு லேசான காயம்தான் என்றும் அவர் விரைவில் குணமடைந்து விடுவார் என்றும் இன்னும் ஓரிரு நாளில் அவர் டிஸ்சார்ஜ் ஆகி விடுவார் […]
Continue reading …
பாஜக தரப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு கவர்னர் பதவி வழங்கப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சினிமாவில் 47 ஆண்டுகள் திரைப்பயணத்தை நேற்றுக் கொண்டாடினார். தற்போது நெல்சன் இயக்கத்தில் அவர் “ஜெயிலர்” திரைப்படத்தில் நடிப்பதில் மும்முரமாக இருக்கிறார். சமீபத்தில் தமிழக ஆளுனர் ஆர்.என்.ரவி அவர்களை ரஜினி சந்தித்துப் பேசினார். அரசியல் பற்றி பேசியதாக அவர் கூறியதற்கு விமர்சனங்கள் பலதரப்பிலிருந்தும் எழுந்தன. எனவே, பாஜகவின் ஆதரவைப் பெற்ற ரஜினிகாந்திற்கு விரைவில் ஆளுனர் பதவி வழங்கப்படலாம் […]
Continue reading …
உலக நாயகன் கமலஹாசனின் வசதிக்கேற்ப “இந்தியன் 2” திரைப்படம் வெளியிடப்படும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர். கடந்த ஜூன் மூன்றாம் தேதி வெளியான “விக்ரம்” திரைப்படம் வசூலை அள்ளிக் குவித்தது. இதே தேதியை சென்டிமென்டாக படக்குழு முடிவு செய்து “இந்தியன் 2” திரைப்படத்தை அடுத்த ஆண்டு ஜூன் மூன்றாம் தேதி வெளியிட முடிவு செய்துள்ளனர். சென்னை சாலிகிராமத்திலுள்ள பிரசாத் லேபில் “இந்தியன் -2” படத்திற்குப் பிரம்மாண்ட அரங்குகள் அமைக்கும் பணியை படக்குழு ஆரமித்துள்ளது. மேலும், பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து […]
Continue reading …
நடிகர் விக்ரமின் மகனான துருவ் சினிமாவில் ஓரிரு படங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர். இவர் தற்போது தனக்கென்று ஒரு யூடியூப் சேனலை ஆரம்பித்துள்ளார். துருவ் தனது இரண்டாவது படமான “மஹான்” படத்தை நடித்து முடித்துள்ளார். அடுத்ததாக அவர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நீலம் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்துக்காக ஒரு படத்தில் நடிக்க இருந்தார். ஆனால் மாரி செல்வராஜ் உதயநிதி ஸ்டாலின் படத்தை இயக்கி வருவதால் துருவ் விக்ரம் படம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. துருவ் தற்போது தன்னுடைய யூடியூப் […]
Continue reading …
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் “விக்ரம்” ரூ.500 கோடி வசூலை ஈட்டியுள்ளது. இத்திரைப்படத்தில் உலகநாயகனுடன் விஜய்சேதுபதி, பகத்பாசில், சூர்யா என முன்னணி நடிகர்களும் நடித்திருந்தனர். ரூ.140 கோடியில் எடுக்கப்பட்ட படம் கடந்த வாரம் ரூ.450 கோடி ரூபாய்க்கு மேல் வசூலில் சாதனை படைத்தது. இப்படத்தைப் பார்த்த சினிமா நட்சத்திரங்கள், சினிமா விமர்சகர்கள் உட்பட பலரும் இப்படத்தை கொண்டாடினர். இந்தியாவில் மட்டுமல்லாது, உலகம் முழுவதும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ள “விக்ரம்” […]
Continue reading …
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தற்போது நடிகர் விஜய் நடிக்கப்போகும் திரைப்படத்திற்கான வேலைகளில் மும்முரமாக இருக்கிறார். நடிகர் விஜய் தற்போது “வாரிசு” திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இதையடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் 67 என்ற பெயர் வைக்கப்பட்டுள்ள படத்தில் நடிக்கவிருக்கிறார்.திரைப்படத்தைப் பற்றிய அப்டேட்டு எப்போது வெளியாகுமென ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர். விஜய்67 படத்திற்கு நடிகர்களை தேர்வு செய்து வருகிறார் லோகேஷ். லோகேஷின் கேங்ஸ்டர் கதையாக உருவாகவுள்ள இப்படத்தில் விஜய்க்கு, இந்தி நடிகர் சஞ்சய் தத், அர்ஜூன், கவுதம் […]
Continue reading …
“என் தந்தை தான் பான் இந்தியா சினிமாவின் முன்னோடி” என “விருமன்” திரைப்படத்தின் கதாநாயகியான அதிதி சங்கர் அவரது தந்தையின் பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறியுள்ளார். முன்னணி இயக்குனரும் மற்றும் தயாரிப்பாளருமான ஷங்கர் தனது 59வது பிறந்த நாள் கொண்டாடி வருகிறார். அவருக்கு சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். “விருமன்” படத்தின் கதாநாயகியும் இயக்குனர் சங்கரின் மகளுமான அதிதி ஷங்கர் தனது டுவிட்டர் பக்கத்தில், “எனக்கு சினிமா வாழ்க்கையை கொடுத்த மனிதரும், இந்திய சினிமாவில் பான் […]
Continue reading …